Thursday, July 30, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 83

போர் உச்சகட்டத்தில் இருந்தபோது வன்னியில் நின்ற 50 'றோ' அதிகாரிகள்: ஜே.வி.பி. தலைவர் தகவல்

நாறுது நாராயணா! அந்தாளு வாயே தொறக்க மாட்டாரே. எல்லா வண்டவாளமும் வரத்தான் போகுது.
_______________________________________________________
ஈழத் தமிழர்கள் தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியா உதவும்: செல்வராஜா பத்மநாதன் நம்பிக்கை

இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல?
_______________________________________________________
போர் வெற்றிக்கு வழிசெய்த 3 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

வாயடைக்க வேணாமா? என்னா செட்டப்புடா சாமி. அவன் ஏதாவது புத்தகம் எழுதி மானம் போயிடும்ல?
_______________________________________________________
“பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு வைகோ, நெடுமாறன் விரும்பவில்லை: பத்மநாதன்

அவங்க விரும்பி ஆவறதென்னா? நீங்க விரும்பினது என்னாங்கிறதுதான் முக்கியம்.
_______________________________________________________
கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் இந்தியாவின் வர்த்தக வலயங்கள்

ஆஹா. துண்டு போட்டுட்டானுவளா? இதான் இப்போ ரொம்ப அவசியம். யாருப்பா ஓனரு?
_______________________________________________________
அதிகார பரவலாக்கம் என்பது மக்களின் தற்போதைய தேவையல்ல

இவருகிட்ட வந்து சொன்னாங்களா? வேற எதுக்காம் இவ்வளவு உயிர் போனது?
_______________________________________________________
வடக்கில் 60 ஆயிரம் படையினரின் குடும்பங்களை குடியேற்றத் திட்டம் தயாரிப்பு

ஆஹா. அந்த காணாம போன 60 ஆயிரம் படையினரா? சூப்பரப்பு.
_______________________________________________________
இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க மாட்டோம்: பாகிஸ்தான்

நடு வீட்டில வந்து எல்லாம் நடத்திட்டு அப்புறம் என்னாடா மூக்க நுழைக்கிறது.
_______________________________________________________
225 வருடங்களின் பின் 10 லட்சம் மலையக மக்கள் அரசின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்

இத்தனை வருஷம் பொறுப்பில்லாம இருந்திருக்கானுங்களா அரசாங்கம்?
_______________________________________________________
திருவள்ளுவர் சிலை திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் முழு அடைப்பு

இறையாண்மைக் காவலர்களுக்கெல்லாம் இந்த சொரணையே இருக்காதே? திருவள்ளுவர் கர்னாடகா போனா அவங்க இறையாண்மை பாதிக்காதாம்பாங்க.
_______________________________________________________
என்னை கட்சியிலிருந்து நீக்கியதால், நான் M.L.A., பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை: S.V. சேகர்

இப்பதான் சம்பளம் ஏத்தி இருக்காங்க. இதென்னா வேலையா? இத விட்டு வேற தேட. நீ தொங்கிக்கோ சேகரு.
_______________________________________________________
மன்னிப்பு கேட்டால் திமுகவுடன் மீண்டும் கூட்டணி:தா.பாண்டியன்

இப்டியே போய்க்கிருந்தா தா. பாண்டியன்னா தாவுற தா. பாண்டியன்னு ஆய்ரும்.
_______________________________________________________
கள்ள நோட்டு அச்சப்பட தேவையில்லை: ரிசர்வ் வங்கி

ஏன்? நல்ல நோட்டா மாத்தி குடுப்பீங்களா?
_______________________________________________________
சாமி அருகில் தரிசனம் செய்ய சாதாரண பக்தர்களுக்கு சலுகை வழங்க முடியாது: திருப்பதி தேவஸ்தானம்

சாமியாடா சொல்லிச்சி நாய்ங்களா? பக்தர்ல சாதாரண பக்தர் வேற‌யா? கேடி பக்தர்கள்தான் அருகில் போகலாமாம்.
_______________________________________________________
டி.வி. நடிகையை சித்ரவதை செய்த தாய் மீது வழக்கு

சீரியலுக்கு மாமியார் ரோலுக்கு ஒத்திகை பார்த்திருப்பாங்கப்பா.
_______________________________________________________
நடிகை கன்னத்தை கடித்தார் ஹீரோ: ரத்தம் கொட்டியதால் ஷூட்டிங்கில் பரபரப்பு

ஹீரோக்கு பிரியாணி இல்ல தயிர்சாதம்னு சொல்லிட்டாங்களா? இல்ல குடைச்சல் குடுத்த ஹீரோயின டைரக்டர் பழி வாங்கிட்டாரா?
_______________________________________________________
மொட்டை போட்ட நடிகைகள்: நக்கீரன் டாக்கீஸ்

தயாரிப்பாளருக்கோ?
லொள்ளு இங்க : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?T=193
***

13 comments:

இது நம்ம ஆளு said...

நறுக்குன்னு நாலு வார்த்த
நறுக் என்று

Suresh Kumar said...

தல நறுக்குன்னு இருக்கு

யூர்கன் க்ருகியர் said...

//நாறுது நாராயணா ....தொங்கிக்கோ சேகரு..... //

வெளுத்து கட்டிட்டீங்க!

SUBBU said...

சூப்பரு :)))))))))))

கலகலப்ரியா said...

நீங்களும் விடாம நறுக்குறீங்க.. ஹும்.. என்ன புண்ணியம்..

பாலா... said...

/இது நம்ம ஆளு said...

நறுக்குன்னு நாலு வார்த்த
நறுக் என்று/

நன்றிங்க.

பாலா... said...

நன்றி யூர்கன், சுரேஷ் ,சுப்பு

sakthi said...

அதிகார பரவலாக்கம் என்பது மக்களின் தற்போதைய தேவையல்ல

இவருகிட்ட வந்து சொன்னாங்களா? வேற எதுக்காம் இவ்வளவு உயிர் போனது?

நியாயமான கேள்வி

பாலா... said...

/ கலகலப்ரியா said...

நீங்களும் விடாம நறுக்குறீங்க.. ஹும்.. என்ன புண்ணியம்./

இப்படி நீங்க வந்து பாராட்டிட்டு போறது தான். வேற ஒரு புண்ணாக்குக்கும் உதவாது. அவ்வ்வ்வ்.

கார்த்திக் said...

/* இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க மாட்டோம்: பாகிஸ்தான்

நடு வீட்டில வந்து எல்லாம் நடத்திட்டு அப்புறம் என்னாடா மூக்க நுழைக்கிறது. */

அருமை..

பாலா... said...

வாங்க. நன்றி கார்த்திக்.

பாலா... said...

வாங்க சக்தி.நன்றி.

கிரி said...

//இப்டியே போய்க்கிருந்தா தா. பாண்டியன்னா தாவுற தா. பாண்டியன்னு ஆய்ரும்.//

:-)))

//ஹீரோக்கு பிரியாணி இல்ல தயிர்சாதம்னு சொல்லிட்டாங்களா? //

ஹா ஹா ஹா

பாலா திரை செய்திகளையும் சேர்த்துட்டீங்க ..நல்லா இருக்கு..இப்படியே தொடருங்க..(அதிகமாகாமல்)