Wednesday, July 29, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 82

யாழ்ப்பாணத்தில் வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் :மகிந்த

அங்க புடிச்சதா சனியன்? உசிரோட இருந்தா தானே செலவுன்னு நினைக்கிறானா?
____________________________________________________________
இடம்பெயர் மக்களுக்காக ஐ.நா அமைப்பினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் தரமற்றவை – ரிசாட் பதியூதீன்

கூடாரமா குடுத்துட்டாங்க. காசு பார்க்க முடியலைன்னு கடுப்பு.
____________________________________________________________
விடுதலைப் புலிகளின் வான் படைத் தளபதி ஒருவர் கைது : சிங்கள ஊடகம் தெரிவிப்பு

சொல்லிக்க வேண்டியது தான். எந்த அப்பாவி மாட்டிச்சோ?
____________________________________________________________
வவுனியா முகாம்களில் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை உணர முடிகிறது – எரிக் பி ஸ்க்வாட்ஸ்

அது எல்லாம் தான் உணர்ரோம். அதுக்கென்ன பண்ணப் போரம். அப்பப்ப இப்படி அறிக்கை விடுறது தவிர.?
____________________________________________________________
மணலாற்றுப்பகுதியில் சிங்கள மக்களை குடியேற்றத் திட்டம்

இதே பொழப்பாப் போச்சேடா உங்களுக்கு. எண்ண தடவிட்டு உருண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும்.
____________________________________________________________
அநுராதபுர தாக்குதல் காணொளி கிளிநொச்சிக்கு நேரலையாக அனுப்பப்பட்டது: நீதிமன்ற விசாரணையில் தகவல்

பிச்ச ராடார்லாம் வெச்சிட்டு கூட இது தெரியாம கெடந்தது அரசாங்கமாம். வெக்கமா இல்லை?
____________________________________________________________
தந்திரிமலையில் விடுதலை புலிகள் தாக்குதல்? : இரண்டு படையினர் பலி

ரெண்டே பேருதானா? அப்ப அவனுங்களே சுட்டுட்டிருப்பானுவ.
____________________________________________________________
அரசின் ஊடக அடக்குமுறை தொடருகின்றது – பன்னாட்டு ஊடக மையம்

அவன் சொன்னபடி எல்லாம் ஆடினப்ப இனிச்சதோ?
____________________________________________________________
மேற்குலக சமூகம் இலங்கையை தமது கட்டுப்பாட்டில் கீழ் வைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றது: அரசு

பிச்சைக்கு போகிறப்ப இதெல்லாம் தெரியாதோ? காசு கைல வந்ததும் சவடால்.
____________________________________________________________
ஊவாவுக்கு முதலமைச்சராக ராஜபக்ஷவின் வாரிசு நிறுத்தப்பட்டதன் காரணம் என்ன?

சோனியா மாதிரி தலீவரு மாதிரி தானும் இருக்கலாமேன்னு தான்.
____________________________________________________________
பெரியார் தி.க. ராமகிருஷ்ணன் மீதான தே.பா.ச. ரத்து

தெரிஞ்சே தானே பண்ணது. எத்தனை பட்டாலும் திருந்த மாட்டானுவ. தும்மினதுக்கெல்லாம் தே.பா.ச. (தேவையின்றி பாயும் சட்டம்)
____________________________________________________________
கடன் இலங்கைக்கு வழங்கப்படாவிட்டால், அது ஏற்கனவே உள்ள தனது கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்படும்:ஐ.எம்.எஃப்

தோடா. யாருக்கெல்லாம் குடுக்கணுமோ அந்தக் கடனை அடைக்கிறேன்னு சொல்லிப்பாரு. வேணாம் போய்யான்னு போவான். நல்லா குத்தறானுவப்பா காது.
____________________________________________________________
அதிமுக புறக்கணித்த பின் இடைத்தேர்தல் தேவையா:ஜெ.

ஏன்? ரெண்டு கழகத்துக்கும் தமிழ்நாட்ட வித்துட்டாங்களா என்ன?
____________________________________________________________
வேட்பாளர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிகள்:தேர்தல் கமிஷன்

இது தவிர ஏதாவது பண்ணி ஜெயிச்சிக்கோ. இதெல்லாம் பண்ணா மாட்டிப்பன்னு எச்சரிக்கிறாங்க போல.
____________________________________________________________
தங்கபாலு ஆதரவாளரை எதிர்த்து வாசன் ஆதரவாளரர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்பிச்சிட்டானுகடா. தாங்கிப் பிடிக்க ஆளில்லாட்டி தானே காணாம போவானுங்க. கோமா கேஸ கூட்டு சேத்துகிட்டு இப்படி குடைச்சல் குடுக்க வைக்குதுங்க ரெண்டு கழகமும்.
____________________________________________________________
தமன்னாவும், நயன்தாராவும் தங்கம் என்றால், நான் பிளாட்டினம்: ஸ்ரேயா

அதான் அதிகம் காணோமா?
____________________________________________________________

14 comments:

கலகலப்ரியா said...

//தமன்னாவும், நயன்தாராவும் தங்கம் என்றால், நான் பிளாட்டினம்: ஸ்ரேயா

அதான் அதிகம் காணோமா?//

nallaaa visaarikkaraangadaa..

பாலா... said...

கிசு கிசு காணோமேன்னு கேட்டாங்களா? அதான். ஹி ஹி. ஆமாம். இவங்கள்ளாம் யாருங்க?

sakthi said...

இடம்பெயர் மக்களுக்காக ஐ.நா அமைப்பினால் வழங்கப்பட்ட கூடாரங்கள் தரமற்றவை – ரிசாட் பதியூதீன்

கூடாரமா குடுத்துட்டாங்க. காசு பார்க்க முடியலைன்னு கடுப்பு

உண்மை தான்

sakthi said...

அரசின் ஊடக அடக்குமுறை தொடருகின்றது – பன்னாட்டு ஊடக மையம்

அவன் சொன்னபடி எல்லாம் ஆடினப்ப இனிச்சதோ?

நச்

கலகலப்ரியா said...

ஹச்.. எனக்கு ஒரே தும்முது.. பண்ணிக்காய்ச்சல் வந்திடிச்சோ என்னமோ..

பழமைபேசி said...

இஃகி!

யூர்கன் க்ருகியர் said...

எல்லா கமெண்டும் கும்மாங்குத்து!
பெரும்பாலான கருத்துக்கள் ரொம்பவே யோசிக்க வைக்கிறது.

கிரி said...

//ரெண்டே பேருதானா? அப்ப அவனுங்களே சுட்டுட்டிருப்பானுவ.//

:-)))

//அதிமுக புறக்கணித்த பின் இடைத்தேர்தல் தேவையா:ஜெ.//

அம்மாக்கு எப்போதுமே டமாசு தான் ஹி ஹி

பாதிக்க பட்டவன் said...

இது போன்ற அரை பிளேடு தனமான கமெண்ட்டுகளை நிறுத்த ஏதாவது உத்தேசம் உண்டா. தாங்க முடியலடா சாமி..

Suresh Kumar said...

தமன்னாவும், நயன்தாராவும் தங்கம் என்றால், நான் பிளாட்டினம்: ஸ்ரேயா

அதான் அதிகம் காணோமா?////////////////////////

தல எப்படி தல நறுக்குன்னு ..........................

பாலா... said...

வாங்க கிரி, யூர்கன். நன்றி.

பாலா... said...

வாங்க சுரேஷ் குமார். ஹி ஹி.

பாலா... said...

/ பாதிக்க பட்டவன் said...

இது போன்ற அரை பிளேடு தனமான கமெண்ட்டுகளை நிறுத்த ஏதாவது உத்தேசம் உண்டா. தாங்க முடியலடா சாமி../

தலைவா. எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். இப்படி மிரட்டாதீங்க. அவ்வ்வ். என்னா பாதிப்போ தெரியலயே?

SUBBU said...

கடைசி இரண்டுக்கும் :))))))))))
மத்ததுக்கு :(((((((((