Sunday, July 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 81

தமிழ் சகோதரர்கள் முன்னரைவிட சிறப்பாக இருப்பதை உறுதிப்படுத்துவதே" என் பாரிய சவால் : மகிந்த ராஜபக்ஷ

அதுக்குதான் வலைக்குள்ள அடைச்சீரோ. நாள பின்ன நடுத்தெருவில விட்டாலும் வலைய விட வீதி சிறப்புன்னு சொல்லிக்கலாம்.
_______________________________________________________
இராணுவத்திலிருந்து தப்பியோடிய 65000 பேர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் - அரசாங்கம்

போய் சேர்ந்ததுக்கெல்லாம் கணக்கு காட்ட இந்த பம்மாத்து வேலையா?
_______________________________________________________
படையினரிடம் சரணடைந்த பொதுமக்களில் 50000 பேர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு?

அட மொத்தப் பேரும் தான். எல்லாம் தமிழர்தானே. இதில என்ன 50000 பேர் மட்டும்.
_______________________________________________________
வன்னி அகதி முகாம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றது என கூறிய 'இந்து" ராம் அவர்களைக் கண்டித்து தமிழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அந்தாளு இலங்கை ராம் ஆகி ரொம்ப காலமாச்சு. அங்கையும் பதிப்பு வெளியிட கால நக்குறான் போல.
_______________________________________________________
ஜென்ரல் சரத்பொன்சேகாவுக்கான பாதுகாப்பு தீடீரெனக் குறைப்பு

நியாயம் தானப்பா. தன்னையே காக்க முடியாதவன் நாட்ட எங்க காக்கப் போறான்னு நினைச்சிருக்கலாம்.
_______________________________________________________
தமிழர்களை அழிக்க சிறிலங்கா அரசுக்கு இந்தியா உதவினால்... தனி ஈழம் அமைக்க தமிழர்களுக்கு உதவுவோம் : வைகோ

கிழிச்சிடுவோம். கதவ மூடிகிட்டு அடிவாங்குற கவுண்டமணி சவுன்ட் விட்டத விட கேவலமா இருக்கு.
_______________________________________________________
மீளக்குடியமர்த்த அதிக காலம் தேவை - ரோகித போகொல்லாகம

நீ குடியமர்த்தினாதான் போவோம்னு தவமா இருக்காங்க. வலைய தூக்கு. தானே அமர்ந்துகிடுவங்க.
_______________________________________________________
முகாம்களில் தமிழர்களை விருப்பமின்றி தங்க வைப்பதா? இலங்கை ஐகோர்ட்டு கண்டனம்

எல்லாரும் கண்டனம் விட்டாச்சு. இவங்கதான் பாக்கி.
_______________________________________________________
விடுதலைப்புலிகளின் தலைவர் செல்வராஜா பத்மநாதன் மகிந்த ராஜபக்ஷவை அச்சுறுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிடம் முறைப்பாடு?

ஏன். பீதில காய்ச்சல் வந்துடுச்சோ? பிரித்தானியாவே புலிகளுக்கு ஆதரவுன்னு சொன்ன பரதேசிதானே.
_______________________________________________________
இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இரணமடுச்சந்தியில் நேரடி மோதல்

எல்லாம் ஒழிச்சாச்சின்னு அலட்டினானுவளே. இப்போ ஆவியா வந்து அடிக்கிறாங்களோ?
_______________________________________________________
பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை: ராஜபட்ச உறுதி

அடப்பாவிங்களா. இதையேதான் அப்படியே ப்ரணாப்பு சொன்னாரு 2 நாள் முன்னாடி. சவசங்கரன் நகல் குடுத்தத படிச்சாரோ?
_______________________________________________________
இலங்கைக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தவுள்ளது:

ஆமாம்ல. காசாவும் குடுத்து பொருளாவும் குடுக்கிற நிலமைலயா இருக்கு அமெரிகா? வாங்கிக்கிறுவானுங்க.
_______________________________________________________
காலம் தாழ்ந்து வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்:கலைஞர்

ஈழத் தமிழருக்கு இது பொருந்தாது:‍ சொல்லாம விட்டது.
_______________________________________________________
தமிழ்நாட்டின் பெருமை:கலைஞர் பேச்சு

அது வேற இன்னும் வாழுதா? சிறுமைன்னு சொன்னா சரியா இருக்கும். காங்கிரசும் கழகமும்னு சொல்லிக்கலாம்.
_______________________________________________________

13 comments:

ராஜ நடராஜன் said...

எந்த நறுக்குக்கு கமெண்ட்டுறதுன்னு யோசனை செய்ய வச்சிட்டீங்களே!ஒண்ண விட ஒண்ணு முந்துது.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
எந்த நறுக்குக்கு கமெண்ட்டுறதுன்னு யோசனை செய்ய வச்சிட்டீங்களே!ஒண்ண விட ஒண்ணு முந்துது.
//

ஓ அண்ணே, இருக்கீயளா? நெம்ப நாளா கண்ணுல தட்டுப்படவே இல்லியே? பாலா அண்ணன் வந்ததும் நீங்களும் வந்துட்டீங்களாக்கூ?

பாலா... said...

/ ராஜ நடராஜன் said...

எந்த நறுக்குக்கு கமெண்ட்டுறதுன்னு யோசனை செய்ய வச்சிட்டீங்களே!ஒண்ண விட ஒண்ணு முந்துது./

நன்றிங்க.

பாலா... said...

வாங்க பழமை.

கும்மாச்சி said...

பாமரன் கலக்குறிங்க, செய்திகளுடன் பின்னூட்டம் சூபர்.

பாலா... said...

நன்றி கும்மாச்சி.

Suresh Kumar said...

படையினரிடம் சரணடைந்த பொதுமக்களில் 50000 பேர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு?

அட மொத்தப் பேரும் தான். எல்லாம் தமிழர்தானே. இதில என்ன 50000 பேர் மட்டும்////////////////////

உலக தமிழர்கள் அனைவருமே விடுதலை புலிகளுடன் தொடர்பு உள்ளவர்கள் தான் . நறுக்குன்னு இருந்தது

கிரி said...

//அந்தாளு இலங்கை ராம் ஆகி ரொம்ப காலமாச்சு.//

:-)))

//கிழிச்சிடுவோம். கதவ மூடிகிட்டு அடிவாங்குற கவுண்டமணி சவுன்ட் விட்டத விட கேவலமா இருக்கு.//

ஹா ஹா ஹா கலக்கல்

யூர்கன் க்ருகியர் said...

Perfect Comments for கலின்ஜர் மற்றும் வைக்கோ.

கார்த்திக் said...

என்னங்க சினிமா கிஸு கிஸு மிஸ்ஸிங்..

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு பாலா சார்

பாலா... said...

/ கார்த்திக் said...

என்னங்க சினிமா கிஸு கிஸு மிஸ்ஸிங்../

அது சரி. :)))

பாலா... said...

/S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு பாலா சார்/

நன்றி நவாஸூதீன்!