Friday, July 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 80

வன்னி மக்களை நிதிபெறும் ஊடகமாக அரசு பயன்படுத்துகின்றது

இது தெரியாமலா போட்டி போட்டுகிட்டு கொட்டிக் குடுக்கறாங்க. என்னமோ உள்குத்து இருக்கும் போல.
_________________________________________________________
ஐனாதிபதியின் மகன் மீது சேறு வீசியதாக வெளியான படம் 'கிராபிக்ஸ்' விளையாட்டு : ஊடகத்துறை அமைச்சர்

நீங்க காட்டதா பிலிமா.
_________________________________________________________
வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக மீளக் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என, சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அப்புறம் காசு தேத்துறது எப்படி. விடாம இங்க மந்திரி என்ன சொல்லுறாரோ அதுக்கு மறுப்பறிக்கை வருதே. இதுங்களுக்கு உறைக்குதா?
_________________________________________________________
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பௌத்த பிக்குகளிடம் ஆலோசனை கோரப்படும் - மிலிந்த மொரகொட

இவனுங்க நாட்டில மட்டும் பிக்குகள் துறவிகள் இல்லை போல. தமிழன் ரத்தம் பட்டே காவியான பாவிங்கள கேளுங்க ராசா. இன்னும் எப்படி எல்லாம் கொடுமை பண்ணலாம்னு சொல்லுவாங்க.
_________________________________________________________
ஈழத்தமிழர்கள் பிரச்சனை தொடர்பான சிடியை வெளியிட நீதிமன்றம் அனுமதி

மனசாட்சியே இல்லையா? தாமதமான நீதி மறுக்கப் பட்ட நீதின்னு என்னமோ சொல்லுவாங்களப்பு.
_________________________________________________________
எனது காலத்திற்கு பிறகு, நான் வசிக்கும் வீடு------:கலைஞர் உருக்கமான பேச்சு

வாயால சொல்லுறது தானே. இப்பவே பதிஞ்சிடலாமே?
_________________________________________________________
கலப்புதிருமணம் செய்தால் வீட்டுக்கு இலவசமின்சாரம்

சம்சாரம் அது மின்சாரமா?
_________________________________________________________
தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் பிரச்சினையில்லை: எடியூரப்பா

சந்தனம் மிஞ்சிடிச்சி போல. தேக்கி வெச்சா கர்னாடகா காணாம போயிடும். தமிழன் பயிரை அழிக்க என்னா தாராளம்.
_________________________________________________________
திருச்சி:நாடக நடிகை கடத்தல்

அதுவும் நாடகமா? நிஜமா?
_________________________________________________________
ஈழத்தமிழர்களை காக்க ஆக.20ல் புதிய பிரகடனம்: ராமதாஸ்

அது வரைக்கும் விட்டு வைப்பானா?
_________________________________________________________
சிங்களப் படத்தில் த்ரிஷா

டாமில் பிரச்சனே வேறே. ப்ரோபெஷன் வேறனு பேட்டி குடுக்கும். அதுக்கும் கை தட்டுவோம்.
_________________________________________________________

10 comments:

சந்ரு said...

நல்ல இடுகை வாழ்த்துக்கள்...

Suresh Kumar said...

நறுக்குன்னு இருக்கு பாஸ்

யூர்கன் க்ருகியர் said...

//ஐனாதிபதியின் மகன் மீது சேறு வீசியதாக வெளியான படம் 'கிராபிக்ஸ்' விளையாட்டு : ஊடகத்துறை அமைச்சர்//

வக்காளி ..இவனுங்க எதை சொன்னாலும் மண்டை ஆட்டறதுக்கு டெல்லியில ஒரு கூட்டமே இருக்கு.. அந்த தைரியம்...

யூர்கன் க்ருகியர் said...

//சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பௌத்த பிக்குகளிடம் ஆலோசனை கோரப்படும் - மிலிந்த மொரகொட
//

அவனுங்க பிக்குகள் கிடையாது பிசாசுகள்.

சூர்யா ௧ண்ணன் said...

// டாமில் பிரச்சனே வேறே. ப்ரோபெஷன் வேறனு பேட்டி குடுக்கும். அதுக்கும் கை தட்டுவோம்.//

நச்சுன்னு இருக்கு தலைவா!

துபாய் ராஜா said...

கலக்கல் கருத்துக்கள்

பாலா... said...

நன்றி சந்ரு,யூர்கன், சூர்யா,துபாய் ராஜா

பாலா... said...

நன்றி சுரேஷ் குமார்

லவ்டேல் மேடி said...

வழக்கம்போல கலக்கல் பதில்கள்....!! அருமை....!!

Anonymous said...

நீங்க காட்டதா பிலிமா.?

புலிகளின் கிராபிக்ஸ் விளையாட்டு படம் நிறைய பார்த்திருக்கிறேன். இவர்கள் காட்டிய படம் என்ன?