Friday, July 24, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 79

வீடிழந்த 3 லட்சம் இலங்கை தமிழர்களை 180 நாளில் குடியமர்த்த இலங்கை உறுதி: எஸ்.எம். கிருஷ்ணா

பாவம். போர் நிறுத்தம் போல யாரோ எழுதிக்குடுத்தத படிச்சாரு போல வெண்ணை. சாரி. கிருஷ்ணா.ச‌ரி என்னைல‌ இருந்து 180 நாள்? கில்லாடி கிருஷ்ணா.

___________________________________________________________
புலிகளை ஒழிக்கும் வரை தமிழர்கள் ஊர் திரும்ப முடியாது: இலங்கை அரசு

இதுக்கென்ன சொல்லப் போராரு முந்திரி? அட மந்திரி.

___________________________________________________________
ஈழப்பிரச்சினையில் முறையாகச் செயற்படவில்லை என பான் கி மூன் மீது குற்றச்சாட்டு

மூக்கை நுழைச்ச‌ யார்தான் முறையா செய‌ல்ப‌ட்டாங்க‌. போங்க‌டா.

___________________________________________________________
இலங்கை முகாமிலிருந்த பிரபாகரனின் பெற்றோரைக் காணவில்லை?

ப‌டுபாவிங்க‌ வெறி பிடிச்சி அலையுறானுவ‌.

___________________________________________________________
இலங்கைக்கு கடன் வழங்கக் கூடாது - மனித உரிமை கண்காணிப்பகம்

உங்க‌ க‌ட‌மைய‌ நீங்க‌ ஒழுங்கா ப‌ண்ணீங்க‌ளா? நீங்க‌ க‌ண்ட‌ன‌ம் ப‌ண்ண‌தோட‌ க‌டமை முடிஞ்ச‌துன்னு போனா அவ‌ன் க‌ண்டிச‌ன் போட்ட‌தோட‌ க‌ட‌மை முடிஞ்ச‌துன்னு குடுப்பான்.

___________________________________________________________
யுத்த இடம்பெற்ற இறுதிகட்டத்தின் போது நீரோ மன்னனை போன்று கருணா செயற்பட்டதாக அவரது மனைவி குற்றச்சாட்டு

இவ‌ரு ஜால்ரா அடிச்ச‌த‌ சொல்றாங்க‌ போல‌. எட்ட‌ப்ப‌னுக்கு இது ச‌க‌ஜ‌ம‌ம்மா.

___________________________________________________________
இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் : சீமான்

தமிழர் பகுதி இப்போதைக்கு கம்பி வேலிக்குள்ளதானே. அங்க குடியேற்றட்டும்.

___________________________________________________________
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது - அருட்தந்தை ஜெகத் கஸ்பார்

அதனாலேயே இது அசாத்தியமானதும் தான் கொடுமை.
___________________________________________________________

நகரசபைஅலுவலகத்துக்கு பூட்டுபோட்ட காங்.கவுன்சிலர்

நல்ல தொடக்கம். எல்லாரும் பின் பற்றினா நாடு உருப்படும்.
___________________________________________________________

எங்கள் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால் ப.சிதம்பரம்தான் பொறுப்பு: லாலு பிரசாத், முலாயம் சிங் எச்சரிக்கை

தோடா. எத்தனையோ உயிர் போனதுக்கே அவரு பொறுப்பில்லையாம். இதுக்கு மட்டுமா?

___________________________________________________________
சட்டசபையில் பாம்பு: அவை ஒத்தி வைப்பு

ஒரு உரையில ரெண்டு கத்தி இருக்க முடியாதில்ல.

___________________________________________________________

8 comments:

யூர்கன் க்ருகியர் said...

//நகரசபைஅலுவலகத்துக்கு பூட்டுபோட்ட காங்.கவுன்சிலர்//

Too late brother !

Suresh Kumar said...

தல நறுக்குன்னு இருக்கு

SUBBU said...

அடிச்சி தூக்குங்க

sakthi said...

புலிகளை ஒழிக்கும் வரை தமிழர்கள் ஊர் திரும்ப முடியாது: இலங்கை அரசு

இதுக்கென்ன சொல்லப் போராரு முந்திரி? அட மந்திரி.

சும்மா நச்

ராஜ நடராஜன் said...

கூப்பிட்டேங்களேன்னு வந்து பார்த்தா பழைய டச் விட்டுப் போகாம இன்னும் "அடிச்சு" ஆடிட்டி இருக்கீங்க.பயபுள்ளைக ஒருத்தருக்கும் நச்சுன்னு நீங்க சொல்லியும் ம்.ஹும்!அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகருமின்னு சொல்வாங்க!இன்னும் நல்லா நறுக் குங்க.

vasu balaji said...

நன்றி அனைவருக்கும்.

கும்மாச்சி said...

செய்திகளுக்கு பின்னூட்டம் அருமை

vasu balaji said...

வாங்க. நன்றி கும்மாச்சி.