Thursday, June 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 76

காற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் - அமைச்சர் மேர்வின் சில்வா

சாவடிக்க எப்படி எல்லாம் உக்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா. இதில அதிகாரப் பகிர்வுக்கு வேற வழி குடுப்பானுவ.
________________________________________________
ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் கருணாநிதியுமே காரணம் ‐ ராமதாஸ் குற்றச்சாட்டு

இப்போ தனியா வந்து கூவினா நீங்க யோக்கியமா? அதென்னா இந்தியாவும், ஏன் அதில மட்டும் தனிப்பட்ட ஆள சொல்ல முடியாது? தெரியுமுங்ணா.
________________________________________________
ஆயுதங்களைக் கண்டு பிடிக்கும்வரை மீளக்குடியமர்த்த முடியாது -உதய நாணயக்கார

வசதிடா சாமி. இத சொல்லியே கடைசி உசிர் இருக்கிற வரை கம்பிக்குள்ள வைக்கலாம்.
________________________________________________
வவுனியாவின் இராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் என வைகோ தெரிவிப்பு

இருக்கிறது போறாதுன்னு இது வேறயா. சாமிகளா அவிங்க பண்ணா அவிங்களே சொல்லுவாய்ங்க.
________________________________________________
ஈழத்தமிழர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்குத்தான் அக்கறை என்று கூறுவதுதான் உலக மகா அதிசயம்: கலைஞர்

இருந்திருந்து ரொம்ப நாளைக்கப்புறம் ஈழத் தமிழர்னு பேச தோணுறப்ப கூட இந்த நக்கலும் நையாண்டியும் தானே!வேற உருப்படியா ஒண்ணும் பண்ண மாட்டிங்களா ஐயா?
________________________________________________
மத்திய அரசு இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்விற்காக இந்திய அரசின் சார்பில் ரூ.500 கோடியை நிதியுதவி அளிக்க முன்வந்து, அதற்காக நாம் நன்றியும் தெரிவித்திருக்கிறோம்.:கலைஞர்

சவசங்கரன் நிபந்தனையில்லாம குடுக்க பரிந்துரைத்த அந்த 500 கோடி 19 சிங்களவனுக்கும் ஒரு முஸ்லிமுக்கும் தவிர ஒரு தமிழனுக்கும் சேரலைன்னு நேத்து சொன்னத படிக்கலையா தலைவரே?
________________________________________________
இலங்கை அரசின் நடவடிக்கை: கனடா கண்டனம்

கடன் குடுத்ததை திருப்பிக் கேளுங்கப்பு. இல்லைன்னா கொழும்பு ஜப்தின்னு நில்லுங்க. சாவட்டும். கண்டனமாம்.
________________________________________________
துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர்பாராட்டு

தந்தை மகற்காற்றும் உதவி போல. போன வாரமெல்லாம் அவரு இவரைப் பாராட்டினாரு. இப்படியே மாத்தி மாத்தி பாராட்டி மருத்துவருக்கு குடைச்சல் குடுப்பாய்ங்க போல.
________________________________________________
அதிக அளவில் ஆயுதம் வாங்கும் நாடுகள் பட்டியல்:2வது இடத்தில் சீனா

பின்ன. மத்தவங்களுக்கும் சேத்தில்ல வாங்குறது.
________________________________________________
அணு ஆயுதங்களை அழிக்க தயார்: ரஷிய பிரதமர்

என்னா உள்குத்து. யாருக்கு குடுக்க போறானோ தெரியலையே?
________________________________________________
வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை

ஐயோ பாவமே. நீங்க கவலை படுறதே பெரிய விடயம்.இதுக்கு பேரு தங்கறதா? ஆயுள் கைதின்னு சொல்லுங்களேன்.
________________________________________________
(நண்பர்களுக்கு வணக்கம். அழுத்தம் தாளாம புலம்பத் தலைப்பட்டு நறுக்கிச் சொதப்பினனோ சொதப்பி நறுக்கினனோ தெரியாது. உங்க ஆதரவில 76 நறுக்கியாச்சி. கத்திய தீட்டி என்ன பண்ணப் போறம். புத்திய தீட்டலாம்னு முடிவு. ஒரு 34 நாள் இடைவெளி. நடுவில வசதிப் பட்டால் வலை மேயக்கூடும். இழுத்து விட்டு எஸ்கேப் ஆன கலகலப்ரியா, வழிகாட்டியும் ஆதரவாகவும் இருக்கும் பழமைபேசி, ராஜ நடராஜன், கிரி, சூர்யா கண்ணன், சக்தி, நைஜீரியா இராகவன், சுப்பு, ஜூர்கன், நசரேயன், மற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மீண்டும் நறுக்கும் வரை...பாலா.)

___/\___

18 comments:

Kakkoo Manickam said...

இப்படித்தான் இருக்கும் பாலா, போக போக சரியாகிவிடும் ஒரு காலத்தில் //நாமா? இப்படியா?? // என்று யேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். இப்போது செய்வது எல்லாம் இன்னும் பலவருடங்கள் கழ்ந்தால் படு அபத்தமாக தோன்றும். இது எல்லோருக்குக் வைத்துதான்.
மண்டை குத்தல் குடைசல் பற்றி கவலை படவேண்டாம்.
அதுசரி! அந்த குட்டிக்கரடி பொம்மையை சும்மா சும்மா முத்தம்மிட்டுக்கொண்டிருக்கும் அந்த குட்டி கரடி எனக்கும் வேண்டுமே. எப்பிடி எங்கே down load செய்யணும்?
அட நீங்களே அனுப்பிட்டீங்கன்னா நல்ல இருக்குமுள்ளா.

பாலா... said...

/Kakkoo Manickam said...

அந்த குட்டி கரடி எனக்கும் வேண்டுமே. எப்பிடி எங்கே down load செய்யணும்?
அட நீங்களே அனுப்பிட்டீங்கன்னா நல்ல இருக்குமுள்ளா./


http://images.jellymuffin.com/images/dolls/mini_disney_dolls/images/14j.gif

த.அகிலன் said...

நல்லா நிறுக்குறீங்க (நிறுத்தல் - அளத்தல்)

Kakkoo Manickam said...

தேங்க்ஸ் பாலா, அட ஆத்தீ !! அந்த தளத்தில இருக்கற அத்தனை பொம்மையையும் down load பண்ணி வசிக்க ஆசையாத்தான் கீது
என்வயசு என்ன தெரியுமா சாமி சத்தியமா 54
வயசான "சின்னப்பையன்"

Kakkoo Manickam said...

தேங்க்ஸ் பாலா, அட ஆத்தீ !! அந்த தளத்தில இருக்கற அத்தனை பொம்மையையும் down load பண்ணி வசிக்க ஆசையாத்தான் கீது
என்வயசு என்ன தெரியுமா சாமி சத்தியமா 54
வயசான "சின்னப்பையன்"

சின்ன வயதில் கல்கியில் இந்த வால்ட் டிஸ்னியின் கதைகள் அதே படங்களுடன் தொடர் கதைகளாக வந்ததை படித்த மகிழ்ந்த நினைவுகள்

பழமைபேசி said...

அன்ணே, நீங்க முந்திகிட்டீங்க... எனக்கும் வர்ற திங்கட்கிழமையோட ஆப்பு...

நல்லபடியா இடைவெளிய அனுபவியுங்க!!!

நசரேயன் said...

நல்ல படியா போயிட்டு சீக்கிரம் நறுக்க வாங்க

யூர்கன் க்ருகியர்..... said...

தோஸ்த்....ஜாக்கர் ஜல்தி ஆவ்.....

இது நம்ம ஆளு said...

அருமை.தொடர்ந்து கலக்குங்க

உங்கள் தோழி said...

//ஆயுதங்களைக் கண்டு பிடிக்கும்வரை மீளக்குடியமர்த்த முடியாது -உதய நாணயக்கார//

//வசதிடா சாமி. இத சொல்லியே கடைசி உசிர் இருக்கிற வரை கம்பிக்குள்ள வைக்கலாம்//

நம்ம தமிழ் மக்களுக்கு விடிவே இல்லை போல..கடவுள் என்று ஒருத்தர் இருக்கிறது நிஜம்னா அவர் காப்பாத்தட்டும்.

அண்ணா நல்ல படியா இடைவேளையை கழித்து விட்டு சீக்கிரமா திரும்ப வாங்க அண்ணா,..உங்கள போல நல்ல பதிவர்களையும் உங்கள் அருமையான பதிவுகளையும் ரொம்ப காலம் மிஸ் பண்ண முடியாது.TC...

சவுக்கடி said...

நீங்கள் செய்யும் தமிழ்க் கொலையையும் பொறுத்துக்கொண்டு உங்கள் பக்கத்தைப் படிப்பேன் - செய்தியில் உள்ள ஆழந்த உணர்வுக்கும் கருத்துக்கும்!

இடைவேளை அறிவித்து விட்டீர்கள்!

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

கிரி said...

//வசதிடா சாமி. இத சொல்லியே கடைசி உசிர் இருக்கிற வரை கம்பிக்குள்ள வைக்கலாம்.//

:-(

பாலா இடைவெளி தேவை தான்..

உங்களுக்கு எப்படி இத்தனை செய்திகள் கிடைக்கிறது என்று நான் அவ்வப்போது மலைத்ததுண்டு ...சலிக்காமல் பதிவுகளை போட்டு தாக்கி விட்டீர்கள் :-)

முதலில் உங்களின் இந்த பதிவுகள் கவனிக்கப்படாமலே இருந்தது..தற்போது நீங்கள் பெரும் ஓட்டுக்களே உங்களின் வெற்றிக்கு சாட்சி..

திரும்ப வாருங்கள்...விரைவில்... புத்துணர்வுடன்

பாலா... said...

ஊக்கத்துக்கும் வருகைக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.

இது நம்ம ஆளு said...

அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் நசரேயன் வீட்டுக்குப் போனேன்.அங்க பேசிகிட்டு இருந்ததப் பார்த்து உங்க வீட்டுக்கு வந்து விட்டேன்.நாந்தான் கடையை பூட்டி வெச்சுருந்தேன்ன்னு நினைச்சேன்.நீங்களும் அப்படியேவா!!!

கலகலப்ரியா said...

doha airport la irunthu oru entry.. mm

பாலா... said...

/doha airport la irunthu oru entry.. mm/

mmm. thanks.