Monday, June 8, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 73

இலங்கை ராணுவ தாக்குதலில் ஒரு அப்பாவி தமிழர் கூட பலியாகவில்லையாம்! ரோகித பொகலகமா

ஒரு தமிழன்கூட அப்பாவி இல்லன்னு சொல்லிட்டானுவளே. அப்புறம் இது வேறயா?
****
மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார்

போச்சுடா. இப்போ எல்லாரையும் வதைக்கப் போரான். வரப்போ வரட்டும். எங்கயோ நல்லா இருக்கட்டும். விடுங்கையா.
****
இலங்கை பிரச்சனை:கலைஞர்-ப.சிதம்பரம் விவாதம்

இது நல்லதுக்கா தெரியலையே. வந்த நாள்ள இருந்து திருப்பி அனுப்பறேனு குதிக்குது அந்தாளு. என்னா சிதம்பர உள்குத்தோ.
****
இலங்கை அரசு தமிழர்களை பத்திரமான இடங்களில் குடியமர்த்த வேண்டும்:ப.சிதம்பரம்

அப்படி ஒரு இடம் இருக்கான்னு (அவ) நம்பியார், நாரா, சவசங்கரன் சொன்னாங்களா? ஏன்யா இப்படி வெறி பிடிச்சி அலையறீங்க.
****
தமிழர் பகுதிகளை பார்வையிடலாம்;ஆனால் எழுதக்கூடாது: ஊடகங்களை எச்சரிக்கும் ராஜபக்சே

பொருட்காட்சி லெவலுக்கு ஆக்கிட்டானா? போர் நின்னு போச்சி கலைக்ஷன் இல்லைன்னு.
****
இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்;ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது:சீமான்

அண்ணாச்சி உணர்ச்சி வசப்படாதீங்க. அப்படி எல்லாம் பண்றதானா எப்பவோ பண்ணி இருப்பாங்க.
****
கலைஞரை இலங்கைக்கு அழைக்கிறார் ராஜபக்சே

பாராட்டவா? பண்ண வேண்டியது தான். ரொம்பதான்டா நக்கலு.
****
தமிழக அரசியல்குழு இலங்கை செல்லுமா?:கனிமொழி

ராணுவ உதவில நெறய போச்சு. இருக்கிறத சுருட்ட பயிற்சி குடுக்கவா?
****
அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரையும் பாதுகாத்து ஆட்சி செய்யும் ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதி மட்டுமே: அன்பழகன்.

ஈழத் தமிழர் எந்த தட்டுங்கண்ணா? ஆமா தனி ஈழம்னு தானும் சவுண்டு விட்டாரே. என்னாச்சி கவனப் படுத்துங்க.
****
திருப்பதி கோவில்:ஒரேநாள் உண்டியல்வசூல்1.70 கோடி

சாமி கணக்கெல்லாம் சரியா வந்துடும். தலைவருங்க வசூல சொல்லுங்க பாப்பம்.
****
விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா எப்போதுமே எமக்கு உறுதுணையாக இருந்தது: கோத்தபாய தெரிவிப்பு

பஞ்ச சீலம் குடுத்த பரம்பரை. பாருக்குள்ளே நல்ல நாடுன்னு பாரதி. இப்படி நாதாரிங்க கிட்ட பாராட்டு வாங்க நாரடிச்ச நாசமா போனதுங்கள திட்ட புதுசா வார்த்தைதான் உக்காந்து யோசிக்கணும்.
****
பிரபாகரனின் சடலத்தில் காணப்பட்ட சீருடை அவர் மரணமடைந்தபோது அணிந்திருந்த ஆடையல்ல - 53ஆவது படையணி தளபதி

அடுத்ததா சீருடைக்குள்ள இருந்த சடலம் பிரபாகரன் அல்லன்னு ஒத்துக்க மாட்டானுங்களே?
****

13 comments:

SUBBU said...

:)))))))))))

SUBBU said...

//மக்களோடு மக்களாக இலங்கையில் இருக்கிறார் பிரபாகரன்;விரைவில் போராட்டத்தை ஆரம்பிப்பார்

போச்சுடா. இப்போ எல்லாரையும் வதைக்கப் போரான். வரப்போ வரட்டும். எங்கயோ நல்லா இருக்கட்டும். விடுங்கையா.//

மொத்தமா காலி பன்னுரவரைக்கும் விடமாட்டானுங்க போல தெரியுதே :((

SUBBU said...

//அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரையும் பாதுகாத்து ஆட்சி செய்யும் ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதி மட்டுமே: அன்பழகன்.

ஈழத் தமிழர் எந்த தட்டுங்கண்ணா? ஆமா தனி ஈழம்னு தானும் சவுண்டு விட்டாரே. என்னாச்சி கவனப் படுத்துங்க.//

சொல்லலன்னா நான் சாகும்வரை 3 மனி நேரம் உன்னா விரதம் இருப்பேன்!!

பாலா... said...

/சொல்லலன்னா நான் சாகும்வரை 3 மனி நேரம் உன்னா விரதம் இருப்பேன்!!/

சிதம்பரத்துகிட்ட மறக்காம போன் பண்ண சொல்லணும். அது சரி. யார் சாகும் வரை?

SUBBU said...

//பாலா... said...
/சொல்லலன்னா நான் சாகும்வரை 3 மனி நேரம் உன்னா விரதம் இருப்பேன்!!/

சிதம்பரத்துகிட்ட மறக்காம போன் பண்ண சொல்லணும். அது சரி. யார் சாகும் வரை?

June 8, 2009
//

இப்படி கேள்வி கேட்டா, இதுக்காகவும் நான் சாகும்வரை 3 மனி நேரம் உன்னா விரதம் இருப்பேன்!!

மயாதி said...

என்னையா இப்படி விளக்கம் இல்லாம இருக்கிறீங்க?
மூன்று மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் ஓல்டு பேசன்..
இனி ரெடி மேட் உண்ணாவிரதம் தான் , அதாங்க உண்ணாவிரதம் இருக்கிறதா ஏற்கனவே போட்டோ , வீடியோ எடுத்து வைக்கிறது...
தேவையான நேரத்தில அத போட்டு உண்ணா விரதம் இருக்கிறதா காட்டி கொள்கிறது .அதுதான் ரெடி மேட் உண்ணாவிரதம்...
அடுத்த தேர்தலில் நிறையவே நீங்க சந்திக்கலாம்...

பாலா... said...

வாங்க மயாதி. க்ராபிக்ஸ் வேர இருக்கே. இந்த புகைப்படத்தையே மாத்தி மாத்தி போட்டுக்கலாம்.

ராஜ நடராஜன் said...

//இனி மொத்த இலங்கையையும் கைப்பற்றும் போர் நடக்கும்;ஒரு சிங்களன் கூட நிம்மதியாக இருக்க முடியாது:சீமான்

அண்ணாச்சி உணர்ச்சி வசப்படாதீங்க. அப்படி எல்லாம் பண்றதானா எப்பவோ பண்ணி இருப்பாங்க.//

சீமானின் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் அதே வேளையில் புத்தி லாவகம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை அவருக்கு யாராவது நினைவு படுத்துவது நல்லது.

உங்கள் தோழி said...

SUBBU said:சொல்லலன்னா நான் சாகும்வரை 3 மனி நேரம் உன்னா விரதம் இருப்பேன்!!

ஹா ஹா ஹா நீங்க கலைஞர் அவர்களின் சொந்த காறரோ?

//ஒரு தமிழன்கூட அப்பாவி இல்லன்னு சொல்லிட்டானுவளே. அப்புறம் இது வேறயா?//

அட போங்க அண்ணா நீங்க வேற அதான் தமிழர் எல்லாருமே புலிகள் என்றே சொல்லிட்டாங்களே..!!!:(((((

ராஜ நடராஜன் said...

//கலைஞரை இலங்கைக்கு அழைக்கிறார் ராஜபக்சே

//தமிழக அரசியல்குழு இலங்கை செல்லுமா?:கனிமொழி//

பார்க்கலாம் காத்து எந்தப் பக்கம் வீசுமென்று!

Keith Kumarasamy said...

ரொம்ப நறுக்குறீங்கய்யா.... ஒரே சந்தேகம்.. இப்பிடி நறுக்கியும் நறுக்கு வாங்கின ஒண்ணுக்கும் ரோசம் வரலையே.... சிலவேளை ரோச நரம்பையே அறுத்துட்டாங்களோ!!!! (முதுகுவலிக்கு அறுவைச்சிகிச்சை என்று என்னாத்தையெல்லாம் நறுக்கினாங்களோ)

பாலா... said...

நன்றி, ராஜ நடராஜன், தோழி, குமாரசாமி.

நசரேயன் said...

நடக்கட்டும்..நடக்கட்டும்