Tuesday, June 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 69

அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம்

ப‌ஸ்மாசுர‌ன் க‌தைதான். அப்ப‌டியாவ‌து அழிஞ்சா ச‌ரி.
____________________________________________
பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது: த ரைம்ஸ் தகவல்

குர‌ங்குக்கு கொள்ளிக் க‌ட்டைய‌ கொடுத்துட்டு கொளுத்திடுச்சேன்னா எப்ப‌டி? காசா கொஞ்சம், ஆயுதமா கொஞ்சம், ஓட்டா கொஞ்ச‌ம்னு எல்லாருமே ஒட்டு மொத்த‌ ப‌ங்காளிங்க‌தான்.
____________________________________________
அனைத்துலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களாலேயே அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர்: 'அமெரிக்கா' வார ஏடு

அப்போல‌ இருந்தே இதைத்தானே கூவுரோம். ஒரு ப‌ய‌ க‌ண்டுக்காம‌ இப்போ வாராய்ங்க‌ ஒரொருத்த‌ரா.
____________________________________________

பொதுமக்கள் உயிரிழப்புக்கள் குறித்து ஐ.நா அமைப்பு அலட்சிய போக்கை கடைபிடிக்கவில்லை – பான் கீ மூன்

அது தான் ல‌ட்சிய‌மாச்சே. அப்புற‌ம் எப்ப‌டி அல‌ட்சிய‌மாகும்.
____________________________________________
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட மாட்டாது - இராணுவம்

முக்கால் வாசி நீ குடுத்த‌துதானே. காட்ட‌ முடியுமா?
____________________________________________
பிள்ளையான் குழுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையத் திட்டம்?

கொலைகார‌ன் கூட‌ கொள்ளைக்கார‌ன் சேராம‌ முடியுமா? ந‌ல்ல‌ கூட்டுடா சாமிக‌ளா.
____________________________________________
போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஐ.நா.சபை விசாரணை நடத்தமுடியும்: பிரிட்டிஷ் மனித உரிமைகள் சட்டத்தரணி ரொபேர்ட்சன்

முடியுமா முடியாதான்னு பிர‌ச்ச‌னை இல்லையே. தேவையா வேணாமான்னு தானே இழுப‌றி.
____________________________________________
தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்

மோதிர‌ம் மொத்த‌மா வாங்கி குவிச்சிட்டாங்க‌ளா? த‌மிழ்னு பேரு வெச்சிட்டு 'த‌மி'னு கூப்பிட்டா பிடுங்கிக்க‌ மாட்டிங்க‌ளே?
____________________________________________
விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் இடம் கிடைக்கும்: மன்னர் ஜவகர்

காலி நில‌த்தில‌ போர்ட் வெச்சாலே அனும‌தி த‌ராங்க‌ளே. இட‌த்துக்கு என்ன‌ ப‌ஞ்ச‌ம். வேலை கிடைக்குமா?
____________________________________________
இலங்கையில் தொடரும் அவலம்:மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார்!

அவ‌ன் யார‌ விட்டுவெச்சான். ம‌னித‌ உரிமை மீற‌லா இல்லையான்னு விவாத‌ம் வேற‌ இதில‌.
____________________________________________
தே.பா.ஆலோசகர் நாராயணன் பதவிக்காலம் நீட்டிப்பு

வேற‌ ம‌ண்டையே கிடைக்க‌லியா இவ‌னுங்க‌ளுக்கு. கோவிந்தா. மிச்ச‌ம் மீதி இருக்க‌ற‌த‌ அழிக்க‌ ஆலோச‌னை சொல்ல‌வேணாமா?
____________________________________________
நிதி நெருக்கடி சமாளிப்பில் இந்தியாவுக்கு 3வது இடம்

ச‌மாளிக்கிற‌தில‌ கில்லாடிங்க‌ளாச்சே. நெருக்க‌டி எல்லாம் ம‌க்க‌ளுக்கு. பேரு யாருக்கோ.
____________________________________________
தமிழக அரசியலில் ஈடுபட்டிருந்தால் எம்.எல்.ஏ.,வாகி இருப்பேன்: ரோஜா

ராஜ‌ப‌க்சே சொன்ன‌துக்கே சுர‌ணை இல்ல‌ எங்க‌ளுக்கு. நீங்க‌ சொல்றதுக்கா கோவிச்சிக்க‌ப் போற‌ம்.
____________________________________________
ஊதிய உயர்வுக்குக் காரணம்என்ன?முதல்வர் விளக்கம்

போன‌ தேர்த‌லுக்கு விசுவாச‌ம் வ‌ர‌ப் போற‌ தேர்த‌லுக்கு அச்சார‌ம். இல்ல‌ன்னு சொல்ல‌ முடியுமா?
____________________________________________

13 comments:

Anonymous said...

super comment thala

sakthi said...

தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்

மோதிர‌ம் மொத்த‌மா வாங்கி குவிச்சிட்டாங்க‌ளா? த‌மிழ்னு பேரு வெச்சிட்டு 'த‌மி'னு கூப்பிட்டா பிடுங்கிக்க‌ மாட்டிங்க‌ளே?

ஹஹஹஹ

ரசித்தேன் பாலா

sakthi said...

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட மாட்டாது - இராணுவம்

முக்கால் வாசி நீ குடுத்த‌துதானே. காட்ட‌ முடியுமா?

அதானே

thevanmayam said...

தமிழக அரசியலில் ஈடுபட்டிருந்தால் எம்.எல்.ஏ.,வாகி இருப்பேன்: ரோஜா

ராஜ‌ப‌க்சே சொன்ன‌துக்கே சுர‌ணை இல்ல‌ எங்க‌ளுக்கு. நீங்க‌ சொல்றதுக்கா கோவிச்சிக்க‌ப் போற‌ம்??/

நல்லா சொன்னீங்க!

பாலா... said...

நன்றி சக்தி மற்றும் தேவன்மயம்

நசரேயன் said...

வழக்கம் போல அருமை

பழமைபேசி said...

ஒரு நாளைக்கு ஒரு இடுகைக்கு மேல செல்லாதுங்க பாலாண்ணே!

பாலா... said...

/ஒரு நாளைக்கு ஒரு இடுகைக்கு மேல செல்லாதுங்க பாலாண்ணே!/

செல்லாதுன்னா புரியலை பழமை. ஆனாலும் தவிர்க்கிறது நல்லதுன்னு படுது. பண்ணிடுவோம்.நன்றி.

கிரி said...

//தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்

மோதிர‌ம் மொத்த‌மா வாங்கி குவிச்சிட்டாங்க‌ளா? த‌மிழ்னு பேரு வெச்சிட்டு 'த‌மி'னு கூப்பிட்டா பிடுங்கிக்க‌ மாட்டிங்க‌ளே//

:-))))))))

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் இடம் கிடைக்கும்: மன்னர் ஜவகர்//

விண்ணப்பித்த அணைத்து எம் எல் ஏ, எம் பி களுக்கும் இன்ஜினீரிங் கல்லூரி கட்ட அனுமதி - AICTE

பாலா... said...

நல்ல ஆலோசனைகள்.

பாலா... said...

/ஜுர்கேன் க்ருகேர்..... said...
விண்ணப்பித்த அணைத்து எம் எல் ஏ, எம் பி களுக்கும் இன்ஜினீரிங் கல்லூரி கட்ட அனுமதி - AICTE/

இது சூப்பர்.

உங்கள் தோழி said...

//தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம்//

//மோதிர‌ம் மொத்த‌மா வாங்கி குவிச்சிட்டாங்க‌ளா? த‌மிழ்னு பேரு வெச்சிட்டு 'த‌மி'னு கூப்பிட்டா பிடுங்கிக்க‌ மாட்டிங்க‌ளே?//

ஹா ஹா அண்ணா சூப்பர் கலக்குறிங்க....