Monday, June 1, 2009

தகப்பன் சாமிகள் - 1

சென்னை‍ ‍ அரக்கோணம் மார்கத்தில் ஓடும் மின்சார ரயிலில் இவரைப் பாராதவர் இருக்க முடியாது. சிறுவனுமன்றி வாலிபனுமன்றி கணிக்க முடியாத வயதும் தோற்றமும். மார்பில் குறுக்காக ஒரு கருப்பு ரெக்சின் பை. வலது கண்ணில் மட்டும் ஓரளவு பார்வை இருக்கும் போலும். கையில் ஒரு கண்ணாடிக் காகிதப் பையில் கடலை பர்பி. ஒரு ஒரு பெட்டியாய் ஏறி வியாபாரம். பார்க்கவே பிரமிப்பாய் இருக்கும். ஏறியதும் ஒரு சில நொடிகள் நிதானித்து ஒரு புன்னகை. கல்ல பர்பி. பாக்கட் 2 ரூவா பாஸ் டைம் பர்பி என்று குரல் கொடுத்த படி நகருவார். எத்தனை கூட்டத்திலும் யார் காலையும் மிதித்து நான் பார்த்ததில்லை.

காசு வாங்கி மேல் சட்டை பையில் 1 மற்றும் 50 காசு நாணயங்கள், கால்சட்டையின் இடப்புறப் பையில் 2 ரூ நாணயம், வலது பையில் 5 ரூ, நோட்டுக்கள் சட்டை உள் பையில் என ஒரு ஒழுக்கம். சந்தேகம் இருப்பின் கூடிய வரை வலது கண்ணால் பார்க்க முயன்று எவ்ளோண்ணா என்ற படியே தடவி, ஒட்டு இருக்குமானால் சிரித்தபடி வேற நோட்டு குடுண்ணா என்று வியாபாரம் செய்யும் நேர்த்தி. அதிகம் கத்த மாட்டார். அடுத்த ரயில் நிலையம் வரும் வரை இந்தக் கோடியிலிருந்து மறுகோடி அங்கிருந்து நடுவில் கதவோரம். அடுத்த நிலையத்தில் இரங்கி ஏற வாகாக நிற்கையில் வாயில் ஏதோ ஒரு சினிமா பாடல். அதே நேரம் சுருட்டி அடைத்த நோட்டுக்களை அடுக்கி (எப்படி முடியுமோ? ப்ரயத்தனமின்றி 10,5, 2 என்று நோட்டுக்களை அடுக்குவார்)கருப்புப் பைக்குள் புதைப்பார்.

ஒரு நாள் இரவு 8 மணிக்கு சென்னை சென்ட்ரலில் அலுவலகம் முடிய கிளம்பியபோது அதே பெட்டியில் இவர் குரல். ஒரு கும்பல் உட்கார்ந்து அரட்டை அடித்தபடி இருக்க, அவர்களுக்கு அருகில் வந்ததும் 'இன்னாண்ணா மணிண்ணா ரொம்ப சவுண்ட் விடுற?' என அவரும் வாடா எங்க நேத்து காணோம் என்றார். பேசிய படியே எத்தினிண்ணா என்று வியாபாரம். தினம் வாங்குவார்கள் போல. ஐந்து என்றதும் ஒரு பேர் சொல்லி அவரு வரலியா என்ற போது திகைத்துப் போனேன். இந்த இறைச்சலில் எப்படி அடையாளம் கண்டார் என? சுந்தரமண்ணன் 3வது பொட்டில தனியா இருக்காரு. லேட் போல. மிஸ் கால் குடுண்ணா என்று அட்வைஸ். வண்டி கிளம்பி சென்ட்ரல் தாண்டி சிக்னலுக்காக நின்றது. ஐயா வியாபாரம் முடித்து அங்கு நின்ற படியே, என்னா இவ்ளோ நேரம் போட்டான். பிருந்தாவன் லேட் போல. புளூமவிண்டன் க்ராஸ் போல இல்லண்ணா என்று கேள்வி. டேய் வியாபாரத்த பாருடா என்று அவர் கூற இந்த பொட்டில அவ்ளோதான். பேசின் ப்ரிஜ்ல லேடீஸ் கம்பார்மென்ட் பார்த்துட்டு வீட்டுக்கு போய்டுவேன் என்றார்.

சொல்லிக் கொண்டிருக்கவே ஒரு எக்ஸ்ப்ரஸ் ரயில் கடந்து போக பார்த்தியாண்ணா புளூ என்று ஒரு சிரிப்பு. ஆம். அவர் சொன்னது சரி. பார்த்துக் கொண்டே இருக்க சட்டைக்குள் இருந்து செல்போனை எடுத்து ஒலியில் நேரம் கண்டார். அந்த மணி என்பவர் நக்கலாக செல்லு பார்த்தியா? பிசினஸ் மேக்னட்டு இவரு என நக்கலடிக்க, சிரித்தபடி இல்லண்ணா டைம் பார்த்தேன். வாட்ச் இருக்கு. கும்பல்ல திறந்து மணி பார்க்கரப்போ இடிச்சி முள்ளு கோணிக்குது. ரிப்பேர். நீ இன்னா நெனச்ச என்ன? மட மட என்று நான்கு ஐந்து எம்.எல்.ஏ பெயர் சொல்லி, அவங்கள தெரியுமா. போய் நம்ம பேரு கேட்டு பாரு. அய்யா வெயிட் இன்னான்னு தெரியும். ணோவ். நீ போனா வெய்ட் பண்ணனும். நான் கேட்டாண்ட இருந்தே அண்ணேன்னா போதும். உள்ள இருக்கற ஆள வெளிய அனுப்பிட்டு நம்ம கேஸ் முடிப்பாங்க என்றார். அந்த ஆள் கெட்ட வார்த்தை சொல்லி கிண்டலடித்த படி நீ ஏண்டா அவங்க கிட்ட போற என்றார். வந்த பதிலில் அரண்டு போனேன்.

சோசல் சர்வீஸ்ணா. இப்போ கூட ஏன் மணி பார்த்தேன் தெரியுமா? 8.30 மணிக்கு ஒரு அம்மாவ வர சொல்லி இருந்தேன். அவங்க பாப்பாக்கு கால் இல்ல. 3 சக்கர வண்டி வாங்கி குடுத்தா ஸ்கோலுக்கு போவும். 10ம்பு படிக்கிது. எம்.எல்.ஏட்ட பேசி முடிச்சிட்டேன். இட்டுனு போய் ரெகமன்சன் லெட்டர் வாங்கிட்டா நாளைக்கு காலைல ஆபீஸ்ல குடுத்தா வேல முடிஞ்சது என்றார். நீ அவ்ளோ பெரிய ஆளாடா? என்னான்னாலும் காசு வாங்காம என்னா நடக்கும் என அந்தாள் கேட்க, அதான் இல்ல. நம்ம கேஸ்னா அதெல்லாம் கேக்க மாட்டாங்க. டக்னு முடியும். நாம சுத்தமா இருந்தா ஏன் கேப்பாங்க? ஏதோ நம்மால முடிஞ்சது. மனசுக்கு சோசல் சர்வீஸ். வயத்துக்கு தொயிலு. இன்னா சொல்ற என்றபடி, என்ன வண்டி எடுக்கல? ணோவ் ஒரு ரூபா சில்லற இருந்தா குடுண்ணா ஒரு 10 ரூபாய்க்கு என்றார். இப்போ ஏண்டா எனக் கேட்க, இவ்ளோ நேரம் போட்டான்ல. போரு. ஒரு ரவுண்ட் போனா வித்துடலாம். 2 பாக்கட் கேட்டு 5 ரூபா தருவாங்க. சில்லற இல்லன்னா வியாபாரம் போய்டும் என்றபடி, சொன்னாற் போலவே இன்னும் சில பாக்கட்டுகளை விற்றார். அடுத்த ரயில் நிலையம் வர, வரட்டாண்ணா என்றபடி பாடியபடியே சென்றார் அந்த மகாத்மா.

15 comments:

யூர்கன் க்ருகியர் said...

great personality!

தமிழ்ப்பிரியா said...

Really great!!!!!!!!

இராகவன் நைஜிரியா said...

அருமையான மனிதர்.

தங்களின் அவதானிப்பு போற்றுதலுக்குரியது.

வனம் said...

வணக்கம்

இப்படியும் இருக்காங்க,
இவர்களையெல்லாம் கவணித்து மனதில் வைத்துக்கொள்ளனும்

இராஜராஜன்

vasu balaji said...

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் ந‌ன்றி ஜூர்கேன், த‌மிழ்ப்ரியா, இராஜ‌ராஜ‌ன்

vasu balaji said...

/தங்களின் அவதானிப்பு போற்றுதலுக்குரியது./

ந‌ன்றி இராகவன் சார்.

Jai_Ho!!! said...

manithan...

hari raj said...

அருமையான மனிதர்.நல்ல பதிவு.பாராட்டுக்கள்

KUMATYA said...

Really great people

மணிநரேன் said...

அருமையான மனிதரைப்பற்றி பதித்துள்ளீர்கள் பாலா..

vasu balaji said...

@@jai ho
@@Hari raj
@@kumatya
@@மணிநரேன்

வரவுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

abarnashankar,usa said...

paamaran!
i like yr articles.
nandraga gavanithu irukkireergal.
gud observation.congrats.

vasu balaji said...

/ abarnashankar,usa said...

paamaran!
i like yr articles.
nandraga gavanithu irukkireergal.
gud observation.congrats./

Thanks

பட்டாம்பூச்சி said...

மிக எளிமையாக ஆனால் ஆழமாக ஒரு உயர்ந்த, மனிதத்தன்மை உள்ள மனிதரை பற்றி புரிய வைத்து விட்டீர்கள்.
உங்களை அவர் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

vasu balaji said...

/ பட்டாம்பூச்சி said...

மிக எளிமையாக ஆனால் ஆழமாக ஒரு உயர்ந்த, மனிதத்தன்மை உள்ள மனிதரை பற்றி புரிய வைத்து விட்டீர்கள்.
உங்களை அவர் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை./

நன்றிங்க.