Sunday, May 10, 2009

ஒத்தைப் பாலமும் ஓட்டுப் பொறுக்கிகளும்.

  • இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா அக்கறையுடன் செயல்படுகிறது.
  • இலங்கை போரில் கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படவில்லை .
  • தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை சென்ற போது அவர்கள் போர்நிறுத்தம் செய்வதாக உறுதி அளித்தார்கள். அந்த உறுதியை மதித்துநடப்பதாகவும் அவர்கள் சொல்லி உள்ளார்கள்
  • இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத் தர காங்., தன்னால் முடிந்ததை செய்யும்.
இதெல்லாம் ஓட்டு பொறுக்க வந்த மன்மோகன் சொன்னவை. பிரதமர் இந்திரா வங்கப் பிரச்சனைக்கு பிற நாடுகளுடன் பேசி ராணுவ நடவடிக்கை எடுத்தது மிகப்பெரிய விடயம். அதெல்லாம் மனிதர்கள் செய்வது. ஆனால் இங்கிலாந்திலிருந்து டேஸ் பிரவுன் இது விடயமாக பேச வரும்போது ஒத்தப்பால புரம்போக்குகளுடன் தான் பேச வேண்டுமா? முடிந்ததை செய்வோம் என அளக்கும் பரதேசிகளுக்கு போய் பேசிவிட்டால் கவுரவம் போய் விடுமா? சனங்களின் உயிரை விட ப்ரோடோகாலும், ஓட்டுப் பொறுக்குவதும் தான் முக்கியமா?

இத்தனை அப்பட்ட புழுகுகளுக்கும் வைத்தான் ஆப்பு சிங்களவன்.
நேற்றிரவு (சனி) 1,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை: நாசகார பீரங்கி குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம். இதெல்லாம் தெரியாதது போலவே அதே பல்லவி பாடுவார்கள்.

இலங்கையில் இருக்கும் அல்ல இறக்கும் தமிழருக்கு கூட சம உரிமையாக ஒரு சமாதி கூட அமைக்க முடியாது. நாய்களா

ஓட்டு பொறுக்க வந்தால் முடிந்தால் செருப்பால் அடிப்போம். இல்லை என்றால் முகத்தில் அறைந்து சாத்துவோம்.

வெள்ளைச்சாமிகளா. வகை வகையா வெச்சிருப்பீங்களே அதைப் போட்டு மொத்தத் தமிழினத்தையும் துடைத்து விடுங்கள். புண்ணியமாப் போகும். அப்புறம் நிதானமா என்ன எது என்று ஒத்தைப்பாலம் சொல்லும் கதை கேட்டு மூடிவிட்டு போங்கள்.

4 comments:

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

வலசு - வேலணை said...

வேதனை வலியையும் ஓட்டாக்கப் பார்க்கும் கேடுகெட்ட அரசியல்வாதிகளை நினைத்தால்...

கலகலப்ரியா said...

அது என்னமோ சார்.. லோகத்தில யார் என்ன சொன்னாலும்.. அது பத்தி விமர்சனம் பண்ண நிறைய பேரு இருக்காங்க.. ஆனா.. சிங்களவன் என்ன சொன்னாலும்.. எழுத்துப் பிசகாம அப்டியே நம்புற அளவுக்கு ஜனங்க அப்டியே பிரம்மை பிடிச்சி நிக்கிறாங்க.. புரியவே புரிய மாட்டேங்குது சார்.. வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது.. எல்லாம் அடிச்சி நொறுக்கணும் போல வருது.. எங்கயாவது யாராவது செத்தா.. ஐயோன்னு இருந்த மனசு போயே போய்டுத்து சார்.. அது பூகம்பமோ.. பன்னிக் காய்ச்சலோ.. சாவுங்கடா.. அங்க அதுங்க மட்டும்தான் சாவனுமா.. எல்லாருமே சாகலாம்னு தோணுது..

பாலா... said...

வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வருது.. எல்லாம் அடிச்சி நொறுக்கணும் போல வருது.. /


இதுக்கு மனிதாபிமானப் போர்னு வேற பேரு வைக்கிறானே. வயிறெரியுதுங்க. இந்த செய்திய காணோம், 51 லட்சம் குடும்பத்துக்கு கலர் டி.வி. குடுத்தாங்களாம். டிவில அலம்பல்