Friday, May 29, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 65

மு.க. ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது ஏன்? கருணாநிதி விளக்கம்

உடல் நிலை காரணம் சரி. ஸ்டாலினுக்கு ஏன்னு ஆற்காட்டார் கேக்கலயா?
__________________________________________
கருணாநிதி பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; தென்சென்னை தி.மு.க. வழங்குகிறது .

சூப்பர் காரணம். குழந்தைக்கு என்ன வயசு இருக்கலாம்? தங்கம் வில குறைவா இருந்தப்போ வந்த பிறந்த நாள்ள எல்லாம் குடுக்கலையே?
__________________________________________
மந்திரிசபையில் சேருவதை விட கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தவே விரும்புகிறேன் என்றார்: ராகுல் காந்தி

இப்போதான் அபரிமிதமா பலமிருக்கே. இந்த கதை செல்லாது?
__________________________________________
பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்ததால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி

இனப்படுகொலைக்கும் போட்டா போட்டியா?
__________________________________________
விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்கக்கூடும்: பொன்சேகா

மொத்தமா ஒழிச்சாச்சுன்னு சொன்னது என்னா? இப்படி மிச்சம் மீதி சொன்னாதான் கலக்ஷனுக்கு வசதி.
__________________________________________
இலங்கை இறுதி கட்ட போரில் 20 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொலை: இங்கிலாந்து பத்திரிகை தகவல்

அதெல்லாம் தப்பே இல்லைன்னு ஐநா சொல்லியாச்சே? இதே மீனோ, மானோ இருந்தாலாவது புளூக்ராஸ் தொங்க விட்டிருக்கும். இறையாண்மைல இதெல்லாம் சகஜமப்பா!
__________________________________________
ஈழத்தில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்: திருமாவளவன்

அப்போதும் நாம் வால் பிடிப்போம்.
__________________________________________
இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இந்தியா மீண்டும் தவறு செய்துள்ளது: வைகோ

இந்தியான்னு சொல்லாதிங்க. காங்கிரஸ்னு சொல்லுங்க. சோனியா தேசம்னு பேரு மாத்தினா கூட எவனுக்கும் உரைக்காது.
__________________________________________
இலங்கை இரங்கல் தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு : பா.ம.க. வெளிநடப்பு

அந்த அளவுக்காவது நடிக்காம இருக்காங்களே!
__________________________________________
தமிழர்களின் கோரிக்கையை புறக்கணித்தது இந்தியா: இலங்கைக்கு ஓட்டு போட்டது

கடிதம் போய் சேர்ந்திருக்காது. அதனாலயோ?
__________________________________________
பஸ் கட்டண குறைப்பை அமல்படுத்தக்கோரி 1 ந் தேதி ஆர்ப்பாட்டம்: பா.ம.க.

அவங்களா குறைச்சாலும் ஆர்பாட்டம். இல்லைன்னாலும் ஆர்பாட்டமா?
__________________________________________
மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம்

இதுக்கா அவ்வளவு கோடி செலவு பண்ணாய்ங்க. பாவமே!
__________________________________________
அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: அழகிரிக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை

நல்ல வளர்ச்சி இருக்கும். கவலையே வேணாம்
__________________________________________
இந்திய விமானப்படையில் நவீன விமானம் சேர்ப்பு

வாங்கி வைங்க. யாருக்காவது கொடுத்துதவலாம்.
__________________________________________
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்:அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர்

எல்லா நாட்டிலயும் காங்கிரஸ்காரன் கொலகாரப் பாவிதான் போல.
__________________________________________

16 comments:

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//தமிழர்களின் கோரிக்கையை புறக்கணித்தது இந்தியா: //

காங்கிரஸின் கொள்கையே இதானே.
ஆச்சரியபடுவதற்கு ஒண்ணும் இல்ல !


//மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம்//

தானா வர்றது ஒரு லட்சம்
தனக்குன்னு எடுத்துக்கிறது நூறு லட்சம்
இதான் நம் நாட்டு லட்சணம் !

பழமைபேசி said...

//மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம்
//

வருமானம் எவ்வளவு?

லவ்டேல் மேடி said...

// உடல் நிலை காரணம் சரி. ஸ்டாலினுக்கு ஏன்னு ஆற்காட்டார் கேக்கலயா? //


அவருக்கு மின்சாரத்த கட பன்னுரதுக்கே நேரமில்ல... !!! அப்புறம் எப்புடிங்க ....// கருணாநிதி பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; தென்சென்னை தி.மு.க. வழங்குகிறது . //
சாவபோர நேரத்துல " சங்கரா... சங்கரா.." ன்னு சொல்லி என்ன பண்ணுறது.....

// மந்திரிசபையில் சேருவதை விட கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தவே விரும்புகிறேன் என்றார்: ராகுல் காந்தி //

கீழ் மட்டம் னா... எப்புடி....?? வீடு ... வீடா... போய் பிச்ச்சஎடுத்து ... சிம்பதி உருவாக்க போறாரா......????

// பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்ததால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி //

" கேடு நினைப்பான்..... கெடுவான்.... "

// ஈழத்தில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்: திருமாவளவன் //
நாராயணா கொசுத் ( ஜால்ரா கோஷ்டிங்க ) தொல்ல தாங்க முடியலடா.... !! அத மருந்தடுச்சு கொல்லுடா.......


// இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இந்தியா மீண்டும் தவறு செய்துள்ளது: வைகோ

இந்தியான்னு சொல்லாதிங்க. காங்கிரஸ்னு சொல்லுங்க. சோனியா தேசம்னு பேரு மாத்தினா கூட எவனுக்கும் உரைக்காது. //
யாருக்கு தெரியும்... !! இன்னும் கொஞ்ச நாள்ல ... இந்தியா இத்தாலியோட
இனஞ்சாலும் கேக்க ஆளில்லா.....!!!!


// இலங்கை இரங்கல் தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு : பா.ம.க. வெளிநடப்பு //
எங்கிருந்து.....?? அவிங்க வீட்டுக்குள்ள இருந்தா.....???

// பஸ் கட்டண குறைப்பை அமல்படுத்தக்கோரி 1 ந் தேதி ஆர்ப்பாட்டம்: பா.ம.க. //
ஆமா.. ஆமா...!! இப்புடி அடிக்கடி.. ஏதாச்சும் பண்ணுங்க...!! அப்போதான் இப்புடி ஒரு கட்சி இருக்குறது மக்களுக்கு தெரியும்.....!!!!

// மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம் //
ஓஓஒ ..!!!. இதுக்குத்தான் கொலைஞர் ஐயா... சீட்டுக்கு அலையுராரா......???


// அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: அழகிரிக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை //பின்ன .. சாரு கெமிக்கல் டேச்னாலஜியில 90% . !!!!!// இந்திய விமானப்படையில் நவீன விமானம் சேர்ப்பு //
ஆமாம்.. இந்தியாவுல டெஸ்ட் ரைடு பண்ணி பாத்துட்டு... அப்புறம் சானியா ..... து... எந்நேரமும் அந்தம்மா நெனப்புலேயே இருக்குறதா போச்சு..... சோனியா தலைமையில இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.....
// பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்:அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் ///


அவன்கெடக்குரான் அரபாடு மண்டையன்....!!!!!

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்:அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர்/

காங்கிரஸ்-னாவே அல்லக்கைகள் இருப்பது சகஜந்தானே!!!
லூசுல வுடுங்க !!

சூரியன் said...

//எல்லா நாட்டிலயும் காங்கிரஸ்காரன் கொலகாரப் பாவிதான் போல.//

இருக்குமோ ... :(

பாலா... said...

வாங்க ஜுர்கேன் !வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி

பாலா... said...

/வருமானம் எவ்வளவு??/

இஃகி இஃகி அடுத்த தேர்தல்ல கணக்கு குடுப்பாங்க பாருங்க பழமை. தன் பேர்ல வங்கிக் கணக்கு கூட இல்லைன்னு. தேர்தல் ஆணையம் அப்போ கூட 5 வருசத்துல 60 லட்சம் சம்பாதிச்சதெல்லாம் பொட்டுக் கடல வாங்கித் தின்னியான்னு கூட கேக்க மாட்டாங்க..

பாலா... said...

மேடி அசத்திட்டீங்க.

பாலா... said...

நன்றி சூரியன்

நசரேயன் said...

//இந்தியான்னு சொல்லாதிங்க. காங்கிரஸ்னு சொல்லுங்க. சோனியா தேசம்னு பேரு மாத்தினா கூட எவனுக்கும் உரைக்காது.//

உண்மை

கலகலப்ரியா said...

//தங்கம் வில குறைவா இருந்தப்போ வந்த பிறந்த நாள்ள எல்லாம் குடுக்கலையே?//
வாங்கினதில கொஞ்சமாவது இப்படி செலவு பண்ணாதான் உண்டு..

//
மந்திரிசபையில் சேருவதை விட கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தவே விரும்புகிறேன் என்றார்: ராகுல் காந்தி//

ரொம்ப சரி.. மகா மட்டம்..

பாலா... said...

/வாங்கினதில கொஞ்சமாவது இப்படி செலவு பண்ணாதான் உண்டு../

வாங்க ப்ரியா. இது வேற மாதிரி செலவு. நன்றி பாராட்டுறாங்க போல‌

கிரி said...

//பஸ் கட்டண குறைப்பை அமல்படுத்தக்கோரி 1 ந் தேதி ஆர்ப்பாட்டம்: பா.ம.க.

அவங்களா குறைச்சாலும் ஆர்பாட்டம். இல்லைன்னாலும் ஆர்பாட்டமா?//

:-)))) அவரும் கட்சிய நடத்தனும் இல்ல...

அவன்யன் said...

நல்ல விமர்சனங்கள் எல்லோரும் அடிச்சு தூள் கிளப்பறீங்க

பாலா... said...

வருகைக்கு நன்றி கிரி. சரிதான் நீங்க சொல்றது

பாலா... said...

/ அவன்யன் said...

நல்ல விமர்சனங்கள் எல்லோரும் அடிச்சு தூள் கிளப்பறீங்க/

வருகைக்கு நன்றி அவன்யன்