Wednesday, May 27, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 63

இலங்கை போர் குற்றங்கள்: விசாரணை நடத்த ஐநா மனித உரிமை ஆணையம் கோரிக்கை

நீங்கதானே பார்த்து ஏதாவது செய்யணும். நீங்களும் கோரிக்கை தானா?
__________________________________________
கேபினட் அமைச்சர்கள் பட்டியல்:அழகிரி,ராசா, தயாநிதிக்கு கேபினட்

ராஜா இல்லாம கனிமொழிக்கு கொடுத்திருந்தா கிச்சன் கேபினட்டா?
__________________________________________
நடிகர் நெப்போலியன் இணையமைச்சராகிறார்

இங்கயும் ஹீரோ இல்லையா?
__________________________________________
இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும்

அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு
__________________________________________
காங்.வெற்றிக்கு கம்யூனிஸ்ட் காரணம்:அத்வானி

அடுத்தவனேயே கை காட்டுவாங்க. நீங்க சரியா இல்லன்னு ஏன் ஒத்துக்க மாட்டிங்க?
__________________________________________
காலில் விழுந்ததால் ஆஸ்திரியாவில் கலவரம்

இதுக்கா கலவரம். எங்கள பார்த்து கத்துக்குங்கய்யா. கலவரப்பட்டு கால்ல விழுந்து எந்திரிக்காம அப்பிடியே கிடப்பமில்ல.
__________________________________________
பிரபாகரன் விஷயத்தில் இலங்கை அரசும், புலிகளும் கூறுவதை நம்ப வேண்டாம். இதை விட்டுவிடுவது நல்லது: தா. பாண்டியன்.

ரெண்டில ஏதோ ஒண்ணு தானே சரியா இருக்கணும். அத சொல்ல மாட்டீங்களாப்பு. நீங்க சொல்றதையாவது நம்பலாமா?
__________________________________________
தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால் அவர்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட வேண்டும்: கருணா

காட்டி குடுத்ததுக்கெல்லாம் பிராய்ச்சித்தமா? இல்ல இதிலயும் உள்குத்து இருக்கா?
__________________________________________
போசணைக்குறைபாட்டினால் மக்கள் இறப்பதாக நாம் அறியவில்லை : ஹோம்ஸ்

நீங்க அறிஞ்சதுக்கெல்லாம் என்ன கிழிச்சிட்டீங்க. மைல் கணக்கில வரிசைல நின்னாதான் ஒரு வேளை சோறுன்னு போட்டோ எல்லாம் வந்திச்சே பார்க்கலையா?
__________________________________________
விசா இருந்தாலும் பணம் தரவில்லை என்றால் விடுதலைப்புலிகள் என்று பொய்க்குற்றச்சாட்டில் உள்ளே தள்ளிவிடுவோம் எனக் காவல்துறை அச்சுறுத்தல்: செய்தி

ராணுவத்தான் விட்டு வெச்சத இவனுங்க விட்றுவாங்களா? நிஜக் குற்றச்சாட்டு பதியணும்னாலும் காசு, பொய் குற்றச்சாட்டு பதியாம இருக்கிறதுக்கும் காசா?
__________________________________________
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.

இவங்க ஏன் தயங்குறாங்க? முன்னை இட்ட தீ முப்புறத்திலே?
__________________________________________
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நீதிவான்கள் பதவி நீக்கப்பட்டனர்: பிரதம நீதியரசர்

இத எந்த நீதிமன்றம் விசாரிச்சது?
__________________________________________
புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடடிக்கை எடுக்கப்படும்: இராணுவத் தளபதி

கரும்புலி, வான்புலி, விடுதலைப்புலியெல்லாம் ஆச்சு. இப்போ காகிதப் புலியையும் அழிக்க நடவடிக்கையா?
__________________________________________
எதிரிக்கும் அப்பாவிப் பொது மக்களுக்கும் அடையாளம் காணமுடியாதவாறு ஸ்ரீலங்கா தலைவர்கள் உள்ளார்கள் : நியூயார்க் டைம்ஸ்

எல்லாரையும் புலின்னு சொன்னா போச்சு. அப்புறமெதுக்கு அடையாளம் எல்லாம்.
__________________________________________

12 comments:

பழமைபேசி said...

பாலாண்ணே, இன்னும் படிக்கலை...அப்புறமா வந்து படிக்கிறேன்!

ராஜ நடராஜன் said...

//விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட நீதிவான்கள் பதவி நீக்கப்பட்டனர்: பிரதம நீதியரசர்

இத எந்த நீதிமன்றம் விசாரிச்சது?//

:)))) இதை எங்கிருந்து புடிச்சீங்க!

பாலா... said...

:)))) இதை எங்கிருந்து புடிச்சீங்க!
www.paranthan.com

பாலா... said...

/பாலாண்ணே, இன்னும் படிக்கலை...அப்புறமா வந்து படிக்கிறேன்!/

வாங்க பழமை. நன்றி

கிரி said...

//புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடடிக்கை எடுக்கப்படும்: இராணுவத் தளபதி

கரும்புலி, வான்புலி, விடுதலைப்புலியெல்லாம் ஆச்சு. இப்போ காகிதப் புலியையும் அழிக்க நடவடிக்கையா?//

ஒருத்தரையும் எதிரா விட்டு வைக்க கூடாதுன்னு முடிவோட இருக்காங்க..அதெல்லாம் நடக்காதுன்னு அவர்களுக்கு தெரியல பாவம்.. ரொம்ப பயபப்டுறாங்க..

பாலா கொஞ்ச நாளா உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் போடா முடியல..அதற்கான மனநிலையில் இல்லை.

செம ஸ்பீட் ல பதிவு போட்டு தாக்குறீங்க போல ;-)

சூரியன் said...

//அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு//

நாமெல்லாம் பேசாமா ரெண்டு நாள் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் ஆட்கள்பா...

sakthi said...

இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும்

அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு

ஹ ஹ ஹ

பேச தானே லாயக்கு
நாமெல்லாம்

sakthi said...

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடடிக்கை எடுக்கப்படும்: இராணுவத் தளபதி

கரும்புலி, வான்புலி, விடுதலைப்புலியெல்லாம் ஆச்சு. இப்போ காகிதப் புலியையும் அழிக்க நடவடிக்கையா?

மொத்தமா அழிச்சிட்டு தான் ஓய்வெடுப்பீங்களா

நசரேயன் said...

//இந்தியாவில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும்

அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு//

உண்மைதான்

பாலா... said...

வாங்க கிரி. நலமா?

பாலா... said...

சூரியன்,சக்தி,நசரேயன்..வருகைக்கு நன்றி

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//அதனால தானே பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கன்னு விளம்பரம். பேசியே அழியற நமக்கு இதெல்லாம் சகஜமப்பு
//

"பேசியே கொன்னுட்டான்" ன்னு சொல்வாங்களே...அது தமிழக அரசியல்வாதிகள் தான்.