Tuesday, May 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 62

பஞ்சாப்புக்கு கூடுதல் ராணுவம்: ப.சிதம்பரம்

ஃபொன்சேகாவ கூப்புடுங்கப்பா. அடக்கி ஒழிச்சிடுவாரு.
__________________________________________
சத்யம் கம்ப்யூட்டர் பெயர் மாறுகிறது

டுபாக்குர்னா?
__________________________________________
வியன்னா குருத்வாராவில் சீக்கிய மதகுரு கொல்லப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததுன்னு விசாரணை நடத்த வேண்டும் என்று எல்லாக் கட்சியும் கூடிப் பேசி தனித் தனியா போராடலாமே?
__________________________________________
குத்துச்சண்டை கற்றக்கொண்ட ராகுல்காந்தி

சட்டமன்றத்தில தான் இதெல்லாம் தேவை. பாராளுமன்றத்தில கூடவா?
__________________________________________
இலங்கைக்கு ஆயுத உதவிசெய்ய இந்தியா மறுத்து விட்டதாம்: சரத் பொன்சேகா சொல்கிறார்

இங்க ஆன்டனாதான் குடுத்தோம்னு சொன்னப்புறம் இப்படி சொன்னா எப்படி? தினம் ஒண்ணு புளுவியே ஆகணுமா?
__________________________________________
இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து தர நிர்பந்திக்க வேண்டும்: சரத்குமார்

எல்லா தமிழனும் புலின்னு அந்தஸ்து குடுத்து தானே வேலிக்குள்ள வெச்சிருக்கான். இன்னும் என்ன?
__________________________________________
ஈழத்தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்: பிரதமருக்கு கலைஞர் கடிதம்

இவ்வளவு நாள் எடுத்த முடிவெல்லாம் அப்படி இல்லன்னு ஒத்துக்கறீங்களா தலைவா? கடிதம் போய் சேர்ந்து அந்தாளு பார்க்கறதுக்குள்ள முடிச்சிடுவாங்க.
__________________________________________
ஐ.நா.சபை இலங்கை அரசின் அத்துமீறல்களை மூடி மறைத்து, அதனைப் பாதுகாக்க முயல்கின்றது

அப்பட்டமா தெரியுதே! பாராட்டு விழா நடத்தாம் இருந்தா சரி!
__________________________________________
விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.:கருணா

இனம் இனத்தோட சுரக்குடுக்க ஆத்தோட. உன்ன விட்டா இதுக்கு வேற ஆளேது?
__________________________________________
இலங்கை இராணுவத்திற்கு மேலும் ஒரு இலட்சம் பேரை சேர்க்க முடிவு: இராணுவத்தளபதி பேட்டி

பாதிக்குப் பாதின்னு கணக்கு வெச்சாலும் அவ்ளோ பேரா போயிட்டாங்க? கடன், உதவின்னு அவங்க சம்பாதிச்சா இவரு சம்பாதிக்க வேணாமா?
__________________________________________
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் தனியாகவே மேற்கொண்டது: பாலித கோஹன

இதே நாறவாயந்தான் அப்பப்போ இந்தியா உதவி இல்லாமல் இவ்வளவு முன்னேறி இருக்க முடியாதுன்னு சொன்ன பரதேசி.
__________________________________________
இராணுவத்தைத் தவிர்ந்த துணை ஆயுதக் குழுக்களிடம் உள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும்: ஆனந்தசங்கரி

அடங்கப்பா. என்ன பயம். இவங்க தண்டல் ஆரம்பிச்சிடுவாங்கன்னா?
__________________________________________
சிறிலங்கா அரசு மீது உடனடி விசாரணை இஸ்ரேல் ஆதரவு

கிஃபிர் குடுக்காம இருந்திருந்தா இதுக்கு அவசியமில்லல்ல. ஆனாலும் இப்பவாவது இப்படி சொல்றாங்களே!
__________________________________________
வன்னியில் சேவையாற்றிய மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்

பின்ன உங்ககிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும். மனுசனா இருந்துடப்படாதே!
__________________________________________
ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார்.

அதானே. சரணடைஞ்சாலே சுடுற ஆளுங்க இதுக்கெல்லாம் விட்டுறுவானா? மிச்சம் மீதி இல்லாம அழிச்சிடணும்.
__________________________________________
சீனாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்தது ஏன்?:

ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீனு குடுத்தானா?
__________________________________________
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்: சிதம்பரம் கருத்து

அட என்னங்க அவசரம். அங்க இருக்கறதெல்லாம் முடிச்சிட்டு யாருமில்ல அனுப்புன்னா அப்ப அனுப்பலாம். ஆயுதம் தந்து உதவியாச்சு. ஆள தந்து உதவமாட்டமா?
__________________________________________

7 comments:

ராஜ நடராஜன் said...

//ஜனநாயக நீரோட்டத்தில் இணையப்போவதாக விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பை பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார்.

அதானே. சரணடைஞ்சாலே சுடுற ஆளுங்க இதுக்கெல்லாம் விட்டுறுவானா? மிச்சம் மீதி இல்லாம அழிச்சிடணும்.//

ஆகாத பொண்டாட்டி கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்.

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்: சிதம்பரம் கருத்து//

இந்தாளு தொல்ல தாங்க முடியல

நசரேயன் said...

//குத்துச்சண்டை கற்றக்கொண்ட ராகுல்காந்தி

சட்டமன்றத்தில தான் இதெல்லாம் தேவை. பாராளுமன்றத்தில கூடவா?//

:):):)

பழமைபேசி said...

//குத்துச்சண்டை கற்றக்கொண்ட ராகுல்காந்தி//

ஆகா, யார்கூட மல்யுத்தம்?

sakthi said...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்: சிதம்பரம் கருத்து

அட என்னங்க அவசரம். அங்க இருக்கறதெல்லாம் முடிச்சிட்டு யாருமில்ல அனுப்புன்னா அப்ப அனுப்பலாம். ஆயுதம் தந்து உதவியாச்சு. ஆள தந்து உதவமாட்டமா?

அதானே

sakthi said...

இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்து தர நிர்பந்திக்க வேண்டும்: சரத்குமார்

எல்லா தமிழனும் புலின்னு அந்தஸ்து குடுத்து தானே வேலிக்குள்ள வெச்சிருக்கான். இன்னும் என்ன?

:(((((((((

பாலா... said...

@@ ராஜ நடராஜன்
@@ஜூர்கேன்
@@சுப்பு
@@சக்தி
@@நசரேயன்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!