Monday, May 25, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 61

தமிழ் மக்களை பார்த்து கலங்கினேன்: பான்கீமூன்

கிளம்பற பொழுது கூட்டறிகை விட்டு கலக்கிட்டீங்களே!
___________________________________________
மனித உரிமை மன்றத்தில் இந்தியா, சீனா சிறிலங்காவுக்கு ஆதரவு

வேறென்ன பண்ணுவாங்க. குடுத்துபுட்டு எதுக்க முடியுமா?
___________________________________________
மனிதாபிமான உதவிகளை முடக்கும் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைமைப் பதவி பொருத்தமற்றது – ஐ.நா

கிழிச்சிடுவாங்க. இன்னோரு கோரிக்கை விடுவாங்க. அவ்வளவுதான்.
___________________________________________
பொதுமக்கள் கொல்லப்படுவது தொடர்பில் தெரிவித்த கருத்தில் ‘இரத்தகுளிப்பு’ இடம்பெறுவதாக அழைத்ததை பான்‍கி‍மூன் மீளப்பெற்றுள்ளார்.

வாஸ்தவம். எல்லா ரத்தமும் மண்ணுக்குள்ள போனா அப்புறம் குளிக்கிறதெங்கே. விட்டா இயற்கை மரணம்னே சொல்லுவாங்க.
___________________________________________
பத்மநாதனை கைது செய்வதற்கு பான் கீ மூன் உதவவேண்டும்: மகிந்த

இதுக்கு பயந்துதான் அந்தாளு புதுக்கரடி விட்டாங்களா?
___________________________________________
சிறிலங்காவின் எறிகணைகளால் 30,000 பேர் ஊனம்

ரத்தக் குளியலே நடக்கலைன்னு பன்கி மூன் சொல்லியாச்சி. இது பொய்னு சொல்லுவானுவ.
___________________________________________
பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும்;பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - வைகோ

எத்தனை துரோகத்தைத் தான் தாங்குவார் அவர்.
___________________________________________
30 வருடங்களில் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக கோத்தபாய தெரிவித்தார்.

அதுவே போதுமே. இதெல்லாம் கனரக ஆயுதமா காகிதப் பூவான்னு.
___________________________________________
கனரக ஆயுதங்களின் பாவனைக்கான சான்றுகளை காணவில்லை: பான் கீ மூன்

ரெண்டு நாள் தள்ளி வந்து சண்டை நடந்ததற்கான சான்றுகளே இல்லை. அழகான கடற்கரைன்னு பாராட்டிட்டு போயிருக்கலாம்.
___________________________________________
இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்

தலைவரையும் இப்படிச் சொல்ல சொல்லுங்க.
___________________________________________
சீக்கியர்கள் மோதல் எதிரொலி: பஞ்சாபில் ஊரடங்கு உத்தரவு

ஆஸ்திரியால ரெண்டு குழு மோதினா இங்க ஊரடங்கு. 50 ஆயிரம் பேரு கதி என்னான்னு தெரியாட்டியும் நம்மாளுங்களுக்கு கவலையில்லை. சிங்கு ஒரே சிங்குதான் எங்கன்னாலும். தமிழன் தான் தனி தனி.
___________________________________________
இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது: டி.ராஜா

அவன் போட்டு குடுக்க மாட்டானா?
___________________________________________
இலங்கை ஆட்சியாளர்களை விசாரணை கூண்டில் ஏற்ற வேண்டும்: ராமதாஸ்

குழியில விழப்போறான்னா கூட கட்டி இழுக்காம விழுவானா? கூட்டாளிங்கள விட்டுடலாமா?
___________________________________________
தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம்

ஒரே நாடா அவிங்க அரசியல் சட்டப் படி தீர்வு கண்டுடுவாய்ங்க. இன்னும் மோசமா அடிப்பானுங்க. இதுக்கெல்லாம் எவன் பேசப் போரான்.
___________________________________________

10 comments:

பழமைபேசி said...

//
இதுக்கு பயந்துதான் அந்தாளு புதுக்கரடி விட்டாங்களா?//

பாலாண்ணே, அப்படித்தான் போலிருக்கு!

ராஜ நடராஜன் said...

நீங்களும் நறுக்குன்னு நாலு வார்த்த கேட்கத்தான் செய்யறீங்க.தடித் தோல் மனுசங்களுக்குத்தான் உரைக்கர பாடாக் காணோம்.ம்!61*4=244 வார்த்தை கேட்டு இருக்கீங்க!பேருக்கு ஒரு பய திருந்தனுமே:(

பாலா... said...

/பாலாண்ணே, அப்படித்தான் போலிருக்கு!/

அறிக்கைய பார்த்தா தனிக் கட்சி ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கே!

பாலா... said...

அது சரி. நாம ஆத்த மாட்டாம புலம்பறது அவிங்களுக்கெங்க புரியுது.

sakthi said...

கனரக ஆயுதங்களின் பாவனைக்கான சான்றுகளை காணவில்லை: பான் கீ மூன்

ரெண்டு நாள் தள்ளி வந்து சண்டை நடந்ததற்கான சான்றுகளே இல்லை. அழகான கடற்கரைன்னு பாராட்டிட்டு போயிருக்கலாம்.

என்ன பதில் சொல்ல ???

எல்லாம் கூட்டு களவாணிப்பசங்க

sakthi said...

சீக்கியர்கள் மோதல் எதிரொலி: பஞ்சாபில் ஊரடங்கு உத்தரவு

ஆஸ்திரியால ரெண்டு குழு மோதினா இங்க ஊரடங்கு. 50 ஆயிரம் பேரு கதி என்னான்னு தெரியாட்டியும் நம்மாளுங்களுக்கு கவலையில்லை. சிங்கு ஒரே சிங்குதான் எங்கன்னாலும். தமிழன் தான் தனி தனி.

நச்

சூரியன் said...

அங்க உள்ள சிங்குக்குள்ள சண்டை பொட்டா , இங்கே உள்ள சிங்குகள் மோதுறாங்க .. பிரதமரே பொறுமை கடைபிடியுங்கள்னு அறிக்கை விடுறாரு .. ஆனால் அங்க சிங்கள கயவர்கள் தமிழர்களை அழிக்கும் போது , யாரேனும் வாயிலே எதேனும் வச்சிட்டாங்களோ ?

தமிழர்ஸ் - Tamilers said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

SUBBU said...

சொல்ரதுக்கு ஒன்னும் இல்லை பாலா :(((((((((

Thozi said...

தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம்

மன சாட்சி இல்லாதவங்க