Wednesday, May 20, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 57

நன்றி: paristamil.com
தத்ரூபமா இருக்கு. எப்போ போடுவாங்க?
___________________________________________
இலங்கை முழுவதும் ஊடுருவல்; 3 ஆயிரம் பேர் கொண்ட கொரில்லா படை தயார்; மரணத்துக்கு முன் பிரபாகரன் செய்த ஏற்பாடு: செய்தி

ஆரம்பிச்சிட்டானுங்க. எப்படியாவது பத்திரிகை வித்தாவணும். இத வெச்சி இருக்கிற ஜனங்கள சாவடிக்கவா.
___________________________________________

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு பிரபாகரன் உயிர் துறந்தார்: கடைசி வரை தனியாக நின்று போராடினார் :செய்தி

இனிமே கவர் வராது. இப்படி கதை எழுதி தான் வியாபாரம் பண்ணனும். பத்திரிகைக்கு இருக்கிற மரியாதை எல்லாம் வித்துட்டானுவ.
___________________________________________
பாமக தோற்றது ஆறுதல் அளிக்கிறது: இல.கணேசன்

இதெல்லாம் ஒரு தேசியக் கட்சி. கொஞ்சம் கதை மாறினா ஆளே மாறிடுவீங்க.
___________________________________________
மக்கள் மனதில் இருந்து பா.ம.க.வை அழித்துவிட முடியாது: மருத்துவர்

மரமிருக்கிற வரை குரங்கிருக்கிறவரை உங்களை மறக்க முடியுமா ஐயா?
___________________________________________
பணம் கொடுத்தது 20 சதவீதமும், 80 சதவீதம் மின்னணு இயந்திரத்தின் மூலம் சதி செய்து பா.ம.க.வை தோல்வி அடையச்செய்துள்ளனர்: ராமதாஸ்

விஜயகாந்த் மாதிரி புள்ளிவிவரமெல்லாம் இருக்கே. வழக்கு போடலாமே?
___________________________________________
ராஜீவ் காந்திக்கு மலரஞ்சலி செலுத்துவோம்: தங்கபாலு

இதுக்கென்ன அலட்டல். எல்லாரும் பண்றது தானே? இனி இப்படி ஏதாவது சொன்னாதான் பத்திரிகைல பேரு வரும். அவன புடி இவன கைது பண்ணுன்னா யாரு கண்டுக்கறாங்க?
___________________________________________
பதவி கொடுக்காதது பற்றி கவலைப்படபோவதில்லை: லாலு

அச்சோ பாவம். பட்டாலும் குடுத்துட மாட்டாங்க. நாம பீகார்ல குடைச்சல் குடுப்பம் வாங்க.
___________________________________________
பிரபாகரன் மரணம் உறுதிசெய்யப்படவில்லை: கலைஞர்

இது வருத்தமா? சந்தோஷமா?
___________________________________________
இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!

எப்பவாவது ஆரம்பப் போர், நடுப் போர், ரெஸ்ட் எடுக்கப் போறேன்னு போன கதையே கிடையாதே.
___________________________________________
இலங்கைக்கு ரூ.500 கோடி நிவாரண உதவி: பிரணாப்

அழிக்கிறதுக்கு 1500 கோடி நிவாரணம் 500 கோடியா. நிவாரணம் யாருக்கு, பக்சேக்கு இல்லையே?
___________________________________________
இலங்கை: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்-கலைஞர் ஆலோசனை

ஆலோசகருக்கே ஆலோசனையா? ரெண்டும் டேஞ்சர் பார்ட்டி. என்னாகுதோ?
___________________________________________
ஐ.நா. பொதுசெயலாளர் பான்.கி.மூன் இலங்கை பயணம்

நேரா பார்த்து பாராட்டவோ? எஸ்டேட் ஏதாச்சும் வாங்கிப் போடுங்கய்யா. அத பார்க்கவாவது வந்து போவிங்களாம்.
___________________________________________
சிங்களர்களை போல தமிழர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்க வேண்டும்: அமெரிக்கா வற்புறுத்தல்

அப்படியே குடுத்துடுவான். ஆரம்பிச்சிட்டானுங்க அழிச்சாட்டியத்த. இவரு வற்பு உருத்தராராம்.
___________________________________________
இலங்கை தமிழர்களுக்கு தேவையான நிவாரண உதவி வழங்கப்படும்: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி

தேவை கூட ராஜீவ்‍ஜெயவர்த்தனா ஒப்பந்ததில இருந்தா தானே? இல்ல தேவையும் நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா?
___________________________________________
எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராமல் நிமிர்ந்து நிற்போம்: விடுதலைப்புலிகள்

அதனால தானே அகிலமெல்லாம் எதிர்ப்பு. உங்களுக்கு நீங்கதான்.
___________________________________________
முகாம்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்: இலங்கை அரசிம் யுனிசெஃப் கோரிக்கை

மிருக வதை பண்ணா கைது பண்ணி மிருகத்த காப்பாத்தலாம்னு சொல்றாங்க. குழந்தைங்கள பாது காக்க கெஞ்சணுமா? முடியாதுன்னா, அப்பாடா கேட்டாச்சி அவன் முடியாதுன்னுட்டான். நாம என்ன பண்ணன்னு தட்டிகிட்டு போய்டுவீங்களா?
___________________________________________
கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: புதிய தமிழகம், தே.மு.தி.க.

இதிலயும் போட்டியா? என்னா அவசரம் பாரு.
___________________________________________
இலங்கை தமிழ் மக்களுக்கு புதுவாழ்வு: மன்மோகன்சிங், சோனியா உறுதி: கலைஞர் பேட்டி

அதும் பொழப்ப பார்த்துட்டு அழகா இருந்ததுங்கள அழிச்சி நாசம் பண்ணி புது வாழ்வு தராங்களாம். போன சொந்தம், கை காலு எல்லாம் தருவாங்களாமா? உங்கள யாராவது கேட்டாங்களா? பகையாளி குடியை உறவாடிக் கெடுனு அதையும் பண்ணிடுங்க.
___________________________________________
இந்திய வெளியுறவுச் செயலரும், பாதுகாப்பு ஆலோசகரும் இன்று இலங்கை வருகை.

அவிங்க இல்லாம கொண்டாட்டமா? குளிப்பாட்டுவான் போங்க.
___________________________________________
தமிழர்கள் இராணுவத்தின் பிடியில் சிறைப்பட்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: ஐ.நா.மனித உரிமைகள் சபை

வீடியோ புடிச்சி போடு! என்ன இப்போ? வந்துட்டுதுய்யா வீரம். தினம் கோரிக்கை விடுவானுவ.
___________________________________________
இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிபார்க்க வேண்டும்: ஜோன் ஹோல்ம்ஸ் செவ்வி

ரணமே இல்லையேன்னு சொல்லுவான். சொக்கு சொன்னாதான் கேப்பேன்னு நிக்கிறான்? ஏங்க இப்படி ஆளாளுக்கு கதைக்கிறீங்க?
___________________________________________
தமிழருக்கு சுயாட்சி வழங்கத் தவறினால் போராட்டம் வேறு வழியில் தொடரலாம்: எரிக் சொல்ஹெய்ம் எச்சரிக்கை

இந்த சோசீயம் பாக்கிறதெல்லாம் விட்டுட்டு உருப்படியா ஏதாவது பண்ணுவீங்களா?
___________________________________________
மோதல் வேளை மனித உரிமை மீறல் விசாரணை நடத்த ஐ.நா. ஆதரவளிப்போம்: பான் கீ மூன்

இப்போ என்ன மீறினாலும் ஆதரிப்பீங்களா?
___________________________________________
பிரபாகரன் உயிரிழக்கவில்லையென்று சர்வதேச மட்டத்தில் சிலர் பிரசாரம் - அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்கிறார் அமைச்சர் யாப்பா

சிரிக்கிறதா அழுவரதா தெரியல. உன் கதிய பாரு ஆப்பா.
___________________________________________
புலிகளின் தலைவரின் சடலத்தை கருணா, தயா மாஸ்டர் அடையாளம் காட்டினர்

ஆள்காட்டி ஆள்காட்டின்னு சொன்னது தப்பே இல்லை. இவிங்கள விட்டா தகுதியான நாயீ எதுவுமில்ல.
___________________________________________
தமிழ் மக்கள்ஏற்கக் கூடிய தீர்வை மிக விரைவில் அரச முன்வைக்கும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை நாடு திரும்ப அழைப்பு

யப்பா! தாங்கலடா சாமி. மாட்ட தண்ணிக்குள்ள வெச்சி வியாபாரங்கறது இதானோ? இரண்டாம் கட்ட மனிதாபிமானப் போர்னு மொத்தத்தையும் தீத்துடலாமுன்னா? முதல்ல சிங்களவன கூப்புடு. வரட்டும்.
___________________________________________
ஆனால், சுகாதார அமைச்சின் கீழ் வராத வைத்தியர்கள் என யாராவது செயற்பட்டிருந்தால் அது பற்றி எமக்கு தெரியாது" :கெஹெலிய ரம்புக்வெல

அவங்க தலை விதி முடிஞ்சு போச்சா. புலின்னு சொல்லிடுவான்.
___________________________________________
ஐ.நா, செஞ்சிலுவைச் சங்கத்தைத் தடுத்துவிட்டு, சிறிலங்காவானது ஆதாரங்களை அழிக்கிறது: பேராசிரியர் போய்ல்

அதுக்காகத் தானே இழுபறி. இல்லைன்னா ஈராக் மாதிரி பண்ண முடியாதா? பான் ‍கி மூன் போய்ட்டு வந்து பக்சே புத்தரோட அவதாரம்னு சொன்னாலும் ஆச்சரியமில்லை.
___________________________________________

6 comments:

சோழன் said...

//மக்கள் மனதில் இருந்து பா.ம.க.வை அழித்துவிட முடியாது: மருத்துவர்

மரமிருக்கிற வரை குரங்கிருக்கிறவரை உங்களை மறக்க முடியுமா ஐயா?//

Please,First You have to consider or Ask Ko(a)lingar , Ko(A)mma , Saniya(n).Why there are changina thier alliance.

In the history of Tamilnadu,PMK is a party growing with out money,blood,Power,star value,etc.

It's manifesto also it own.Nor coping not dubbing(Acting)

ஜுர்கேன் க்ருகேர்..... said...

//தத்ரூபமா இருக்கு. எப்போ போடுவாங்க?

//

காத்திருங்கள்....ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு ...

SUBBU said...

//தமிழர்கள் இராணுவத்தின் பிடியில் சிறைப்பட்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: ஐ.நா.மனித உரிமைகள் சபை//

எனக்கென்னவோ பாலா, ஜ.நா-ன்னு ஒன்னு தேவையே இல்லன்னு தோனுது :(((((((

பாலா... said...

அவனுமில்லாட்டி யார திட்டுறது. அப்படி சொல்ல முடியாது. ஐநா எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வகையில செயல் படலைங்கறது தான் உண்மை.

SUBBU said...

//ஐநா எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வகையில செயல் படலைங்கறது தான் உண்மை.
//

ஐநா எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வகையில செயல்படலன்னா அந்த சபை தெவையே இல்லை :((

உங்கள் தோழி said...

//இலங்கை தமிழ் மக்களுக்கு புதுவாழ்வு: மன்மோகன்சிங், சோனியா உறுதி: கலைஞர் பேட்டி//

//அதும் பொழப்ப பார்த்துட்டு அழகா இருந்ததுங்கள அழிச்சி நாசம் பண்ணி புது வாழ்வு தராங்களாம். போன சொந்தம், கை காலு எல்லாம் தருவாங்களாமா? உங்கள யாராவது கேட்டாங்களா? பகையாளி குடியை உறவாடிக் கெடுனு அதையும் பண்ணிடுங்க.//

சரியாய் கேட்டிங்க அண்ணா.இனி என்னத்த புது வாழ்வு குடுக்க போறாங்களாம்? இருக்கிற பாதி உயிரையும் போக்காட்டமா இருந்தா போதாதா?