Tuesday, May 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 56

பிரபாகரனது போல் தென்படும் சடலத்தை இலங்கை தொலைக்காட்சி காண்பித்தது.மரபணுச் சோததனைகள், அது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

ஒரே நாளில் மரபணு சோதனையா? உலக சாதனையாச்சே. பரதேசி நாய்ங்க. புளுகாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்னு படிச்சிருப்பானுங்க போல.
_______________________________________________
சமாதானம் பேசச்சென்றவர்களை சாகடித்துவிட்டனர்: விடுதலைப்புலிகள்

அவன் எதுதான் மரபுப்படி செய்தான். பாதுகாப்பு வலையம்னு சொல்லி வரவெச்சி அடிச்சவன் இது பண்ணமாட்டானா?
_______________________________________________
ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். திருமாவளவன்

தோடா? தெரிஞ்சே துணை போன உங்களை எல்லாம் துணைக்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
_______________________________________________
பிரபாகரன் மரண செய்தி: வெளிநாடுகளில் தமிழர்கள் கொந்தளிப்பு

இத சாக்கு வெச்சி காலிப்பய கருணா குழு எதயாச்சும் பண்ணி மக்கள் போராட்டத்தையும் ஒழிக்க பார்க்கும் மக்கா. உசாரு.
_______________________________________________
பிரபாகரன் செய்தி: பிரணாப்புடன் ராஜபக்சே பேசியது?

என்னான்னு? தல! மேட்டர முடிச்சிட்டம்ல? மேடம் சந்தோசமான்னா?
_______________________________________________
இலங்கை உரிமைப் போராட்டம் முடிவுக்கு வந்தவிதம் வேதனை தருகிறது:இல.கணேசன்

உக்காந்து பேசுன்னு ஆளாளுக்கு அலறினீங்கள்ள? வர விட்டானா? அவனுக்கு இரையாண்மை தான் இருக்கு. இறையாண்மை தெரியாதுன்னா கேட்டீங்களா?
_______________________________________________
பிரபாகரன் செய்தி :மதிமுக தொண்டர் தீக்குளிப்பு

கடவுளே! இருக்கும்போது பண்ணவங்களையே செத்தவங்கள விட ஓட்டுதான் பெருசாப்போச்சுன்னு போனாங்க . இப்போ எதுக்கு இதெல்லாம்?
_______________________________________________
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேர வந்து நான் பிரபாகரன்னு சொன்னாலும் இல்ல நாங்க சாவடிச்சிட்டோம்னு சத்தியம் பண்ணுவானுவ.
_______________________________________________
இலங்கைநிலை:டெல்லிபோலீஸ் சென்னைக்கு விரைவு

ஏன் சென்னை போலீஸ் வக்கீல அடிக்கதான் லாயக்குன்னா? ஆந்திரா, கேரளால்லம் யாரு போறது?
_______________________________________________
இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ பொருட்கள்: இந்தியா

அடிக்கிற கைதான் அணைக்குமா? அதையும் காசா குடு. இன்னும் ரெண்டு ஆயுதம் வாங்குவேன்னு கேக்கலையா?
_______________________________________________
ராஜீவ் கொலை கைதிகள்: பலத்த பாதுகாப்பு

தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெறி கட்டுது!
_______________________________________________
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் 90 கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சீமான் சொன்னது சரி. உள்ள இருக்க வேண்டியவங்கல்லாம் வெளியில. வெளிய இருக்க வேண்டியவங்கல்லாம் உள்ள.
_______________________________________________
காங்.எம்.பி.க்கள் கூட்டம்:பிரதமர் தேர்வு

தேர்தலுக்கு முன்னாடியே இத சொல்லிதானே கேட்டிங்க ஓட்டு? யார் பிரதமர்னு எங்கள மாதிரி சொல்ல முடியுமான்னு?
_______________________________________________
காங். தலைவராக சோனியா மீண்டும் தேர்வு

இது அடுத்த கூத்து. காங்கிரசும் இந்தியாவும் நேரு வாரிசுக்குதான் சொந்தம்னு தெரியுமே. இல்லாம வியாபாரம் படுத்துடுமே.
_______________________________________________
காங்.கூட்டணிக்கு ஆதரவு : மாயாவதி

லீவ் நாள்ள பிரதமர் நாற்காலில உக்காந்துக்க அனுமதிச்சாங்களா?
_______________________________________________
டெல்லி புறப்பட்டார் முதல்வர் கருணாநிதி

முதுகு வலியெல்லாம் பார்த்தா முடியுமா? கூவின கூவுக்கு கூலி வாங்கறதெப்படி?
_______________________________________________
சிங்களர்களின் குடியேற்றம் அங்கே நடைபெறுமானால் அதைத் தடுத்து நிறுத்தக் கூடிய கடமை இங்கே வாழ்கிற தமிழர்களுக்கு உண்டு. இங்கே இருக்கிற அரசுக்கு உண்டு. கட்சிகளுக்கு உண்டு: கலைஞர்

அடேங்கப்பா! இறையாண்மைக்கு அப்போ லீவா? சிதம்பரம் தொலை பேசியில் சொன்னார். ராஜ பக்சே உறுதி கூறியிருக்கிறார். தமிழ் தெரிந்த சிங்களவர் மட்டுமே குடியேறினார்கள். அதனால் சரியாப் போச்சின்னு அடுத்த கதை ரெடி..
_______________________________________________
மே 15 இரவு 2.30 மணிக்கு சோனியாவுக்கும் பிரதமருக்கும் தந்தி அனுப்பியதோடு வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருந்த நிலமையிலும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி....:கலைஞர்.

அந்த நேரம் செத்தவங்களை எண்ணக் கூட இல்லை. ஏன் வாழ்த்து சொல்ல தொலைபேசி வேலை செய்யும் அப்போ வேலை நிறுத்தம் பண்ணிச்சா?
_______________________________________________
16ஆயிரம் ஓட்டு எப்படி வந்தது? திருவள்ளூர் திமுக வேட்பாளர் மனு.

சிதம்பரதுக்கு 3000+ ஒட்டு வந்தா மாதிரிதான்.
_______________________________________________
மத்திய மந்திரி சபையில் எத்தனை திமுக மந்திரிகள் என்று சோனியாவைச் சந்தித்த பின்னரே முடிவு: கலைஞர்

ஆமாம் பின்ன! விசுவாசத்துக்கு, நாடகத்துக்கு, பல்டிக்கு , 12 போனதுக்குன்னு என்னா கணக்கு வழக்கெல்லாம் இருக்கு. டக்னு சொல்லிட முடியுமா? மருத்துவருக்கு ஆப்பு வைக்கிற இலாகா வேற கேட்டாவணும்.
_______________________________________________

3 comments:

கலகலப்ரியா said...

//பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நேர வந்து நான் பிரபாகரன்னு சொன்னாலும் இல்ல நாங்க சாவடிச்சிட்டோம்னு சத்தியம் பண்ணுவானுவ.//

கடவுள் வந்து நான் கடவுள்னாலும் இதே கதிதான்.. therefore.. praba is equal to ____ (give dis gap fillin exercise to a 3 yr old..)

பாலா... said...

:)).. nice one..

உங்கள் தோழி said...

//பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு//

//நேர வந்து நான் பிரபாகரன்னு சொன்னாலும் இல்ல நாங்க சாவடிச்சிட்டோம்னு சத்தியம் பண்ணுவானுவ.//

சூப்பர் அண்ணா.அண்ணா நான் ஒன்னு கேக்கலாமா?தெரியல அதான் கேக்குறன் "இறையாண்மை" என்றா என்ன?