Tuesday, May 12, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 49

முழு சொத்து விவரத்தை தாக்கல் செய்யாததால் தா.பாண்டியன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: திமுக வழக்கு

நீங்கள்ளாம் ஒரு பைசா விடாம, சொந்தத்தில குடிசை கூட இல்லைன்னு புளுகாம முழுழுழுழு விவரம் குடுத்திங்களோ?
__________________________________________
பிரச்சாரத்தில் வாக்குவாதம்:மூதாட்டி மீது விஜயகாந்த் ஆத்திரம்

நறுக்குன்னு நாலு வார்த்த கேட்டாங்களோ? :p
__________________________________________
சந்தர்ப்பவாதகூட்டணிக்கு முற்றுப்புள்ளி: ஜி.கே.வாசன்

ஆமாம். நாளைக்கு வெச்சிடுவாங்க மக்கள்.
__________________________________________
வன்முறையில் ஈடுபட்டால் மறுதேர்தல்: நரேஷ்குப்தா

அப்பவும் ஈடுபட்டால் தினம் தேர்தல்.
__________________________________________
6 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர் என்பதை மறுக்க முடியாது. மு.க.ஸ்டாலின்

ஐ.நா, அமெரிக்காக்கு இருக்கிற உணர்வு கூட இல்லையா பாவிகளா? இப்படியா புளுகுவீங்க. இதில வேற ஓட்டுக்காகவா? தேர்தலுக்காகவான்னு கேட்டு மக்களைக் காக்கனு ஏமாத்துறாரு. மவனே. இதுக்கும் மேல ஜெயிச்சி கியிச்சி புட்டிங்க, தமிழன்னா ஓரமா போற நாயீ கூட ஒன்னுக்கடிச்சுட்டு போவும்.
__________________________________________
மக்களை நேரில் சந்திக்கக்கூடிய ஆற்றல் ஜெ.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின்

ஹெலிகாப்டர்ல வந்தா இப்படி அர்த்தமாக்கும். கருப்புக் கொடிக்கு பயந்து வந்தவங்களையும் சேர்த்து தான சொல்றீங்கப்பு. நாள பின்ன யூசாகும். நோட் இட் தொங்கு.
__________________________________________
கூட்டணி கட்சி தலைவர்களை நம்பாத ஜெ.:கனிமொழி

அட அட. கருவேப்பிலை கொழுந்து மாதிரி ஒரே ஒரு திருமா. அந்தாளுக்கு நீங்க வெச்ச ஆப்பு போறாதா?
__________________________________________
ஜெயலலிதா மீது தயாநிதிமாறன் கிரிமினல் வழக்கு தாக்கல் செய்தார்

வில்லங்கமா இருக்கே! யார சொல்றாங்க கிரிமினல்னு.
__________________________________________
வன்முறையை தூண்ட சதி: டி.சுதர்சனம்

யார சொல்றாரு இவரு? பண்ணிட்டீங்களா?
__________________________________________
ஆமை பார்த்திருக்கிறேன்;இறையாண்மை பார்க்கவில்லை: சீமான் பேச்சு

அது காங்கிரஸ் கூட்டணி கண்ணுலதான் தெரியும் போல.
__________________________________________
மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் தாக்குதல்

ஆமாங்க. ரெண்டு பேரு அடிச்சிகிட்டா தான் சண்ட. கை போய் கால் போய் கிடக்கிறது மேல குண்டு போட்டா மனிதாபிமானம். கலைஞருக்கும் காங்கிரசுக்கும் மட்டும் கண்ண கட்டுதே? ஏன்?
__________________________________________
இலங்கை படுகொலைக்கு அமெரிக்கா கண்டனம்

இவரு பிட்ட இவரு போட்டாச்சி. ரை ரை போய்க்கே இருங்கப்பு
__________________________________________
உலகை ஏமாற்றுவதில் இலங்கை அரசு வெற்றி: விடுதலைப்புலிகள்

மக்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் கூட்டணி வெல்லாம இருக்கணும்.
__________________________________________
இலங்கையில் தமிழினப்படுகொலைச் சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: இங்கிலாந்து

அய்யகோ. ஆறு மணி நேரம் உண்ணாவிரதமிருந்து சாதித்த போர் நிறுத்த சாதனையை முறியடிக்க அயல் நாட்டு சதி. போர் போர் னு உலகமே சொன்னாலும் IPL போட்டில அடிச்ச ஃபோர்னு சொல்லுவமப்பு.
__________________________________________

8 comments:

SUBBU said...

:((((((((

பாலா... said...

என்னாச்சி சுப்பு? எதுக்கு அளுவாச்சி.

பழமைபேசி said...

//வன்முறையில் ஈடுபட்டால் மறுதேர்தல்: நரேஷ்குப்தா

அப்பவும் ஈடுபட்டால் தினம் தேர்தல்.//

இஃகிஃகி!

பாலா... said...

வாங்க பழமை! நலமா?

கிரி said...

//நீங்கள்ளாம் ஒரு பைசா விடாம, சொந்தத்தில குடிசை கூட இல்லைன்னு புளுகாம முழுழுழுழு விவரம் குடுத்திங்களோ?//

மனுசனை கொலை வெறி ஆக்குறதுன்னு ஒரு முடிவோட இருக்காங்க போல நறநற

//பிரச்சாரத்தில் வாக்குவாதம்:மூதாட்டி மீது விஜயகாந்த் ஆத்திரம்//

இங்கேயுமா !!

//6 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர் என்பதை மறுக்க முடியாது. மு.க.ஸ்டாலின்//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல

உங்கள் நறுக்குன்னு நாலு வார்த்த - 50 முன்கூட்டி வாழ்த்துக்கள் :-)

பாலா... said...

வாழ்த்துக்கு நன்றி கிரி சார்.

கலகலப்ரியா said...

//6 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கித் தந்த தலைவர் கலைஞர் என்பதை மறுக்க முடியாது. மு.க.ஸ்டாலின்//

சீ இப்டி கூடவா மனுஷங்க இருப்பாங்க..

பாலா... said...

/சீ இப்டி கூடவா மனுஷங்க இருப்பாங்க../

மனுஷங்களானா இருக்க மாட்டாங்க.