Thursday, May 7, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 44

அன்னை சோனியா வழியில் மக்களுக்கு நல்லது செய்யும் காங்கிரசுக்கு வாக்களியுங்கள்; மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு

கொஞ்சமாவது மனச்சாட்சி இருக்காதா? எங்கயாவது வடக்குல இப்படி சொன்னாலும் பரவால்ல, இங்கயே இப்படி பேச முடியுதா?
________________________________________________
யார் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களியுங்கள்: மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு

அதான் மேட்டரே. நிச்சயம் பண்ணுவாங்க.
________________________________________________
மோடி பிரதமரானால் இந்தியாவின் மதிப்பு குறைந்து விடும்; மன்மோகன்சிங் சொல்கிறார்

நீங்க ஆனா உசந்துடுமா. இப்பவே சொல்லலன்னாலும் துப்புவானுங்க.
________________________________________________
நாம் இலங்கையிலே வாழுகின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.:கலைஞர்

அப்படியா? அது எப்ப? அம்மாவ விட்டு பிள்ள, புருசன விட்டு பெண்டாட்டி, ஒரு வேள சோறு இதெல்லாம் ஓரளவு நிம்மதியா?
________________________________________________
அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக்கொள்கின்றேன் :கலைஞர்

இதென்னாங்கடா புதுகதை. வென்ற பிறகு இறையாண்மை போகாதா? அவர்கள்னா யாரு பக்ஸே ட்ரூப்பா? செய்வீங்கய்யா.
________________________________________________
சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது’’ஈவி.கே.எஸ். கடும் தாக்கு

அரசியல் சாக்கடைதான். ஆனாலும் இப்படியா? ஓட்டுன்னா எல்லாத்தையும் விட்றுவானுங்க பரதேசிங்க. உவ்வே!
________________________________________________
அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா :மு.க. அழகிரி

அப்பவும் யாரோட அப்பா கில்லாடின்னு தான் தெரியும். உங்க பவுசு என்ன?
________________________________________________
ஸ்டாலினின் அரசியல் அனுபவம் கூட பாமகவின் வயது இல்லை என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

உங்க வயதுக்கு இத நீங்க பேசலாமா அம்மணி?
________________________________________________
வாக்காளர் பட்டியலில் நவீன்சாவ்லா பெயர் மிஸ்ஸிங்

சபாசு. வேற எங்கயாவது இருந்து ஓட்டு விளுந்தாலும் விளுகும். வேலைல மும்முரமா இருந்துட்டாரு போல.
________________________________________________
ஜெய்ஹோ பாடலை காங்கிரஸ் கைவிட்டது

ஜெய்ஹோ கை விட்டுடும்னு தெரிஞ்சிரிச்சா?
________________________________________________
ராஜபக்சே நடிகர்:இங்கிருந்து அவரை டைரக்‌ஷன் செய்கிறார்கள்: சீமான் பேச்சு

கதை வசனம் யாரு?
________________________________________________
சோனியாவை விமர்சிக்க சீமானுக்கு அறுகதை இல்லை: தங்கபாலு

அட அட என்னாமா பொத்துக்கிட்டு வருது. இளங்கோவனுக்கு என்ன அருகதை கேட்டுட்டு அப்புறம் பேசலாமே தொங்கு சார்.
________________________________________________
ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில்தான் பாரதிராஜா செயல்படுகிறார்:காங்.குற்றச்சாட்டு

ஆரோட தூண்டுதலில் ராஜபக்சே செயல் படுகிறார்னு கேட்டதுக்கா?
________________________________________________
தேர்தலுக்கு பிறகும் ஜெ. தனிஈழம் பற்றி பேசுவாரா? திருமாவளவன்

பேசணும்னு என்னா? சொன்னத காப்பாத்தினா போதும். நீங்க தமிழர், தொப்புள் கொடின்னு எல்லாம் பேசாம இருப்பீங்களா? அதச் சொல்லுங்க ஐயா.
________________________________________________

1 comment:

அப்பாவி தமிழன் said...

ஒட்டு போட்டாச்சு தல , உக்கார்ந்து சம்பாதிகறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html