Wednesday, May 6, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 43

சோனியாகாந்திக்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை

இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்னு சொல்லியே பழகினவங்க.நீங்க பண்ணலாமா?
__________________________________________________________
கருணாநிதி உயிரோடு இருப்பது ஜெயலலிதாவுக்கு இடைஞ்சலாக இருக்கிறதா: ஆற்காட்டார்

வில்லங்கமா இருக்கே. உங்களுக்குள்ள ஏதோ இருக்கோ?
__________________________________________________________
சோனியாகாந்தியின் தமிழக பயணம் ரத்து: செய்தி

ஏன்னு சொல்லமாட்டனுவளே!
__________________________________________________________
அத்வானி நாளை தமிழகத்தில் பிரச்சாரம்

இதனால தானா அம்மையார் வருகை ரத்து?
__________________________________________________________
எனக்கு அரசியலை பற்றி ஒன்றும் தெரியாது: நடிகர் சிலம்பரசன்

அப்பாவ இப்படியா நக்கலடிக்கிறது. அவரு பண்றதெல்லாம் ஒரு அரசியலா தெரியலன்னு!
__________________________________________________________
மீண்டும் தமிழ்நாட்டில தலையெடுக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்: சிதம்பரம்

ராஜபக்சேய கூப்பிடப்போறிங்களா? அடக்க்க்க்க்கிடுவாரு.
__________________________________________________________
மரம் வெட்டி என்று ராமதாசை சொன்னவர் ஜெ.: அன்பழகன்

அதெல்லாம் தெரியாமலா கூட்டணி போட்டாங்க. சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.
__________________________________________________________
இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி: கலைஞருக்கு பிரதமர் பாராட்டு கடிதம்

நடுத்தெருவுக்கு இளுத்து விட்டு, குடும்பம் குட்டிய பிரிச்சி, இவங்க பண்றதுக்கு பேரு உதவி. இதுக்கு ஒண்ண ஒண்ணு பாராட்டிக்க வேறா செய்யுதுங்களாம்.
__________________________________________________________
இலங்கையில் தொடரும் ராணுவத் தாக்குதல்: ஐ.நா. கவலை

ஐநா சொன்னா என்ன? காங்கிரசும் தலைவரும் சண்டைல்லாம் இல்ல. அமைதி திரும்பிடிச்சின்னு சொல்றாங்களே. எத நம்பறது?
__________________________________________________________
இலங்கையில் போர்நிறுத்தம்: பான்கீமூன் வலியுறுத்தல்

அப்பப்போ நானும் இருக்கேன் மறந்துறாதீயன்னு இந்தாளு ஒரே பல்லவி. எங்க தலிவர் மாதிரி கையறு நிலைன்னாவது கப்ஸா விடத் துப்பில்ல.
__________________________________________________________
ஈழத்தமிழர்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது: ஜெயந்தி நடராஜன்

அது ரொம்ப நல்லாவே தெரியுது. என்னா உறுதின்னு. கொஞ்சமா நஞ்சமா. ராணுவம் இல்ல பாது காக்குது.
__________________________________________________________
பான் கீ மூனுக்கு ராஜபட்சே அழைப்பு

செட்டப் செல்லப்பா. அந்தாளு நினைச்ச இடத்துக்கு போலாமா? விட்றுவியா நீ. பரதேசி.
__________________________________________________________
எங்கள் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி அமெரிக்கா கவலைப்படத்தேவையில்லை: பாக். அதிபர்

இது எச்சரிக்கையா? இல்ல அவ்ளோ தூரமெல்லாம் போவாதுன்னு உத்திரவாதமா?
__________________________________________________________
நான் ஏன் பிரதமராகக்கூடாது : மாயாவதி

அதானே? இதுக்கெல்லாம் பரிட்சை இன்டர்வியூனெல்லாம் இல்லையே. தடாலடி அரசியல் பண்ணா போதும்.
__________________________________________________________

5 comments:

SUBBU said...

வந்துட்டேன் அன்னாச்சி :)))))))))

SUBBU said...

எல்லாத்துக்கும் சேர்த்து :))))))))))))))

பாலா... said...

வாங்க சுப்பு:)))))

ஜுர்கேன் க்ருகேர்..... said...

சூப்பர்

உங்கள் தோழி said...

//இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி: கலைஞருக்கு பிரதமர் பாராட்டு கடிதம்//

//நடுத்தெருவுக்கு இளுத்து விட்டு, குடும்பம் குட்டிய பிரிச்சி, இவங்க பண்றதுக்கு பேரு உதவி. இதுக்கு ஒண்ண ஒண்ணு பாராட்டிக்க வேறா செய்யுதுங்களாம்.//

நல்லா கேட்டிங்க அண்ணா நாக்கை புடுங்குற மாதிரி