Tuesday, May 5, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 42

அரசியல்வாதிகள் பணம் தந்தால் வாங்காதீர்கள்;பாவம் தொற்றிக்கொள்ளும்:விஜயகாந்த்

நடிகர் தந்தா வாங்கலாமா?
___________________________________________________
திமுக மீது அதிமுக-அதிமுக மீது திமுக புகார்

தேர்தலுக்குப் பிறகு ஜெயிச்ச கட்சி புகார் மீது நடவடிக்கையா?
___________________________________________________
பாராதிராஜா, நெடுமாறனை கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ்

காங்கிரஸ் கூட்டணி மற்றும் ஆதரவாளர்களைத் தவிர மொத்த பேரையும் கைது பண்ணிட்டா வசதி.
___________________________________________________
தமிழக கவர்னர் மருத்துவமனையில் அனுமதி, மருத்துவமனையில் கலைஞரை சந்தித்தார் கவர்னர்: செய்திகள்

கலைஞரைப் பார்க்க யாருக்கும் அனுமதியில்லைன்னு சொன்னாரே அன்பழகன் அதுக்காகவா என்ன?
___________________________________________________
சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க... -:சீமான் ஆவேசப்பேச்சு

அப்படித்தான நினைச்சி நடத்திக்கிட்டிருக்காய்ங்க!
___________________________________________________
அன்று அன்புதம்பி;இன்று வம்புதம்பியா: ராமதாஸ் மீது திருமாவளவன் கடும் தாக்கு

அன்று மருத்துவர் ஐயா இன்று வருத்துவர் ஐயாவான்னு திருப்பி கேக்க போறாரு!
___________________________________________________
ஈழப்பிரச்சினையில் இன்று வரை தீர்வு வராததற்கு வைகோ தான் காரணம்:திமுக

இல்லாட்டி எப்பவோ தீத்துகட்டி இருப்பீங்கன்னு சொல்றீங்களா?
___________________________________________________
பாரதிராஜா, சீமானுக்கு எதிராக காங். பிரச்சாரம் . காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களுக்காக செய்து இருப்பதை பட்டியலிட்டு மாற்று பிரச்சாரம் செய்வோம்: செய்தி

உண்மையா செய்தத சொல்லிட முடியுமா?அவ்வளவு ஏத்தம்.ம்ம்.
___________________________________________________
விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டோம்:பாஜக

எப்பிடியும் ஒரு சீட்டும் தேறாது. ஏன் சொல்ல மாட்டாங்க. கொசுறு தேவைங்கறப்ப அடிப்பாங்க பாரு பல்டி. யப்பா!
___________________________________________________
விடுதலைப்புலிகளை ஒழித்த பிறகு இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு:ராஜபக்சே

எப்பவும் தீரப்போறதில்லைன்னு சொல்லிட்டு போயேன். நீ ஒழிஞ்சாலே தீர்வு வந்துடும்.
___________________________________________________
பிஜேபியின் சகாப்தம் முடிந்து விட்டது : ராகுல்

இது இன்னும் முளைக்கவே இல்லா. என்னாமா கூவுது!
___________________________________________________
ஈழப்பிரச்சனை சி.டி.வழக்கு:ஐகோர்ட் உத்தரவு

தேர்தலுக்குப் பிறகு தேவையானால் தீர்ப்பு.
___________________________________________________

11 comments:

SUBBU said...

wait பன்னுங்க

SUBBU said...
This comment has been removed by the author.
SUBBU said...

//அன்று அன்புதம்பி;இன்று வம்புதம்பியா: ராமதாஸ் மீது திருமாவளவன் கடும் தாக்கு

அன்று மருத்துவர் ஐயா இன்று வருத்துவர் ஐயாவான்னு திருப்பி கேக்கா போறாரு!//

:)))))))))

SUBBU said...

//பாராதிராஜா, நெடுமாறனை கைது செய்ய வேண்டும்: காங்கிரஸ்

காங்கிரஸ் கூட்டணி மற்றும் ஆதரவாளர்களைத் தவிர மொத்த பேரையும் கைது பண்ணிட்டா வசதி.//

:))))))))))))

SUBBU said...

:)))))))))))))))))))))))

ராஜ நடராஜன் said...

துண்டு போட்டுக்கலாமுன்னு ஓடி வந்தா 5 பேர் முந்திகிட்டாங்க.

ராஜ நடராஜன் said...

//விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டோம்:பாஜக

எப்பிடியும் ஒரு சீட்டும் தேறாது. ஏன் சொல்ல மாட்டாங்க. கொசுறு தேவைங்கறப்ப அடிப்பாங்க பாரு பல்டி. யப்பா!//

இது பற்றி நானும் யோசித்தேன்.சிவாஜிலிங்கத்துகிட்ட அத்வானி போஸ் கொடுத்துட்டு இப்ப இப்படி அறிக்கை வருதேன்னு.

ஜெயலலிதா அதிக பாராளுமன்ற தொகுதிகளை வெல்கின்ற பட்சத்தில் 3ம் அணி மூலம் அவரது கணக்கு பிரதம நாற்காலிக்காக இருக்கும் என்று பி.ஜே.பி இப்பவே செக்மேட் வைக்கிறதோ என்னவோ.

பாலா... said...

வாங்க சுப்பு. நன்றி:))

பாலா... said...

வணக்கம் நடராஜன்! வருகைக்கு நன்றி!

கிரி said...

//சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க... -:சீமான் ஆவேசப்பேச்சு//

காங்கிரஸ் அரசிற்கு ஆதரவு தரும் திமுக பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறார்களே திரை துறையினர்!!

பாலா... said...

ஆமாம் கிரி. அமீர் ஒரு படி மேலே போய் போர் நிறுத்தத்தை நம்புகிறார் போல் குமுதத்தில் பேட்டி. கலைஞர் மீது பாசம் கூட..