Monday, May 4, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 41

50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் தி.மு.க. கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பாடுபடுகிறது: தொங்கு

அப்டி போடு அருவாள! லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லிட்டாரு. பிரச்சினைக்காக பாடு படுறீங்களே தவிர தீர்க்கதுக்கு இல்லை.
___________________________________________________
முதல் அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து இன்று இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு இருக்கிறது: தொங்குதான்.

எல்லாரையும் இளிச்சவாப்பயன்னு நினைக்கிறது தப்பில்ல. நம்புறீங்க பாரு. அங்க இருக்குடி ஆப்பு. அண்ணனும் தம்பியும் மாத்தி மாத்தி நிறுத்தலைங்கிறான். அன்னன்னிக்கும் அம்பது நூறுனு சாவராங்க. என்னா கதை?
________________________________________________
இவர்களால் இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்ய முடியாது.:தொங்கேதான்

என்னா திமிரு பாரு. செய்ய விடமாட்டோம்னு சொல்லிட்டு போலாம்ல?
________________________________________________
எங்களின் கூட்டணிக்கு எதிராக பிரசாரம் செய்ய முடியாத நிலையில் அவர் தனி ஈழம் என்று பேசுவது விந்தையாக உள்ளது என்றார்.

அண்டப் புளுகுக்கு எதிரா பிரசாரம் வேற செய்யணுமா? இப்போ விந்த‌. தேர்தலுக்கு பிறகு நீ நொந்த.
________________________________________________

குவாத்தரோச்சி மீது வழக்கே இல்லை என உலகமே சொல்லும்போது துன்புறுத்துவது சரி அல்ல: பிரதமர்

நமக்கு வழக்கு இருக்கா இல்லையா?உலகமே சொல்லுச்சாம். காதுக்குள்ள கூட இவரிட்ட சொல்ல முடியாதே? சொக்குதான் உலகமேவா?
________________________________________________
13 ந்தேதிக்கு பிறகு ஈழப்பிரச்சினை பற்றி ஜெயலலிதா பேச மாட்டார்: கி.வீரமணி

ஆமாங்க. பேசி பேசி நீங்க கிழிச்சதெல்லாம் போதும். அந்தம்மாவவது பேசாம செயல் படுத்தட்டும்.
________________________________________________
இலங்கை பிரச்சனையில் ஜெயலலிதாவுக்கு தெளிவு இல்லை: இளங்கோவன்

இவனுவ ரொம்ப தெளிவா இருக்கானுவ. ஏன்னா பிரச்சனையே இவிங்கதானே.
________________________________________________
கலைஞரை பார்க்க யாருக்கும் அனுமதியில்லை: அன்பழகன்

காங்கிரஸ்காரங்களைத் தவிர தானே?
________________________________________________
எதிர்ப்பு: பேருந்துகளில் மீண்டும் பழைய கட்டணம் : செய்தி

குறைக்கவே இல்லைன்னாங்க?
________________________________________________
வாண்டையார் ஆதரவாளர்கள் ஆத்திரம்: ப.சிதம்பரம் கார் முற்றுகை

இதெல்லாம் இனிமே சகஜமப்பா. தறிக்காரங்க வேஷ்டி நிறைய தயார் பண்றதா கேள்வி!
________________________________________________
சீக்கியர்களை காப்பாற்ற பிரதமர் தவறி விட்டார்:மோடி

பதவியக் காப்பத்தறதே பெரும்பாடு. அதில்லாம சீகியரென்னா தமிழர்களா. காப்பாத்துன்னு சாவ. அவங்களுக்கு தெரியும் என்னா பண்ணனும்னு. ஒத்த செருப்பு. ரெண்டு வேட்பாளர்.
________________________________________________
மன்மோகன்தான் பிரதமர் வேட்பாளர்: ராகுல்காந்தி

என்னாமா துண்டு போடுறான் பில்லக்கா பையன்.
________________________________________________
பிரதமர்-ராகுல்காந்தி:ஒருவருக்கு ஒருவர் புகழ்மாலை!

எப்பிடி இருந்த சிங்கு இப்படி ஆய்ட்டாரே! தேவுடா.
________________________________________________

6 comments:

ராஜ நடராஜன் said...

முதலில் எழுத்து தகவல் தந்தமைக்கு நன்றி.

அப்படியே இடங்காலியிருப்பதால் துண்டு போட்டுக்கிறேன்.

இப்ப நறுக்குன்னு நாலு வார்த்த க்கு:)

சிம்பு said...

பாலா சார், இந்த சொம்பு தூக்கி பயல் லக்கிலுக் இம்சை தாங்க முடியல. ஓவர் புலம்பல். நமக்கு நாமே திட்டம் மாதிரி அவனே பின்னூட்டம் மாதி மாதி போட்டுகிரானே

பாலா... said...

வாங்க நடராஜன். நன்றி:)

பாலா... said...

சிம்பு:)))

பழமைபேசி said...

_/\_

பாலா... said...

_/\_வாங்க பழமை