Sunday, May 3, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 40

தமிழ் நெஞ்சில் ஆணிகள்;ரத்தம் வழியும் காயங்கள்:கலைஞர் கடிதம்

அதுக்கு மிளாய் தடவுறீங்களே ஐயா. அது தான் தாங்க முடியவில்லை.
_________________________________________________________
வெறுக்கத்தக்கதும்-வேண்டத் தகாததுமான இத்தனை கொடுமைகளுக்கும் "விடுதலைப் போர்'' என்று பெயரிட்டு அழைத்தாலும்: கலைஞர்

இப்படியா கொச்சைப் படுத்துவீங்க?
__________________________________________________________
இலங்கையில் விடுதலைப் போர்- இங்கேயிருந்து ஆதரவு தரும் தமிழர்களுக்கு கெடுதலை உருவாக்கும் காரியமன்றோ செய்கின்றார்; களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டு:கலைஞர்

யாரு கெடுதலை உண்டாக்கினது, யார் களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வச்சிருக்கா இதெல்லாம் தெரியாமலா இருக்கோம். இத உங்க மனசாட்சி பேசினதுன்னு சொல்லலாமா? மறந்து போய் சொல்லிட்டீங்க.
__________________________________________________________
மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் தாக்குதல்: 63 தமிழர்கள் பலி

முதல்வருக்கு யாருமே இதெல்லாம் காட்ட மாட்டேங்குறாங்கப்பா.
__________________________________________________________
அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன். தமிழ்மீது சத்தியம்;ஈழத்து திலீபன் கல்லறைக்குப்பக்கத்தில் இருந்திருப்பேன். --:கலைஞர்

நல்ல காலம். அவங்க பேரு கெடாம போச்சி.நக்கலுக்கு ஒரு அளவில்லையா?
__________________________________________________________
ஆனால் ஒன்று; அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன். :கலைஞர்

இவரு நம்மள ஏமாத்துறாரா? இல்ல தன்னையே ஏமாத்திக்கிறாரா தெரியலையே.
__________________________________________________________
போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தியிருந்தால் அரசியலைவிட்டே விலகிக்கொள்கிறேன்:வைகோ

முடியாதுன்னு தெரிஞ்சி வெறுப்பேத்துறாரு!
__________________________________________________________
இன அழிப்பு நடக்கிறது;கை கட்டி வேடிக்கை பார்க்கிறோம்:தங்கர்பச்சான் ஆவேசம்

அப்படி இருந்திருந்தாலாவது இவ்வளவு அழிவிருந்திருக்காது.
__________________________________________________________
நான் முடிந்தவரை போராடுபவன் அல்ல;முடியும் வரை போராடுபவன்: விஜயகாந்த் பேச்சு

என்ன முடியும் வரை? பேரமா?
__________________________________________________________
முரண்பாடுகளின் மொத்த உருவம் அதிமுக கூட்டணி: கி.வீரமணி

நீங்க, சுவாமி, மருத்துவர் ஐயா எல்லாம் தான் இப்படி பேச பொருத்தமானவங்க.
__________________________________________________________
ஓட்டு போட குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை

இது நல்லாருக்கே. அக்கம் பக்கத்து குழந்தைகள்னு தெரியவா போகுது?
__________________________________________________________
ஈழத்தமிழருக்காக 70ஆண்டுகள் சிறையில் இருக்கத் தயார்: அன்புமணி ராமதாஸ்

எந்த பதவிலங்கையா? அங்கையும் பதவி கேக்காம இருந்தா சரி.
__________________________________________________________
பெருக்கெடுத்த கோபம்;அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்:தா.பாண்டியன்

புரிஞ்சா பண்ணுவாங்களா?
__________________________________________________________

9 comments:

பழமைபேசி said...

நறுக்குன்னு நாலு வார்த்த - 40"

நாற்பது நூறாகணும்...

பாலா... said...

ஆதரவுக்கு நன்றி!

ராஜ நடராஜன் said...

சில தினங்களுக்கு முன் உங்களுக்கு நான் ஒரு பதிவு போட்டேனே பார்த்தீர்களா?

பாலா... said...

/சில தினங்களுக்கு முன் உங்களுக்கு நான் ஒரு பதிவு போட்டேனே பார்த்தீர்களா?/

இப்பொழுது தான் பார்த்தேன். நன்றி!

ஆகாயமனிதன்.. said...

நாற்பதும் !!! நாமமும் !!!

SUBBU said...

//நறுக்குன்னு நாலு வார்த்த - 40"

நாற்பது நூறாகணும்...//

இல்லீங்க பழமை, நாற்பது நானூறாகனும்.....

பாலா... said...

/இல்லீங்க பழமை, நாற்பது நானூறாகனும்...../

ஆதரவுக்கு நன்றி சுப்பு.

பாலா... said...

/நாற்பதும் !!! நாமமும் !!!/

:o நாற்பது யாருக்கு? நாமம் யாருக்கு? வரவுக்கு நன்றி ஆகாய மனிதன்

உங்கள் தோழி said...

//மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் தாக்குதல்: 63 தமிழர்கள் பலி//

//முதல்வருக்கு யாருமே இதெல்லாம் காட்ட மாட்டேங்குறாங்கப்பா.//

அவர் கண்ணை மறைத்து கண்ணாடியை போட்டு இருப்பது போல மனசுக்கும் கவசம் போல