Saturday, May 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 39

கொழும்புக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்கள்.பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழிமறித்தனர்.

உண்ணா விரதம் இருந்தவர் என்னா விரதம் இருக்கப் போகிறார்?
___________________________________________________
சாத்தியமற்ற தமிழ் ஈழ கோரிக்கையை ஜெயலலிதா கைவிட வேண்டும்: சு.சாமி

பேச்சுக்கே சொன்னதா இருக்கட்டுமே. நம்புறவங்க நம்புறோம். இந்தாளு ஏன் கெடந்து குதிக்குது.
___________________________________________________
இலங்கை தமிழர்கள் பலியாக முதல் காரணம் ப.சிதம்பரம்தான்: ராமதாஸ்

ஆரம்பிச்சி 8 மாசமாச்சி. எப்போ கண்டு பிடிச்சிங்க ஐயா?
___________________________________________________
இலங்கை: போரை நிறுத்திவிட்டதாக பாசாங்கு: டி.ராஜா

இதுக்கு பேரு பாசாங்கா.வேற வார்த்த இருக்கும் பாருங்க.
___________________________________________________
ஈழப்பிரச்சனைக்கு போராடுவதற்கு கலைஞர்தான் சரியானவர். திருமா.

அந்த சனங்களுக்கு அவன் போடுற எரிகுண்டு ஒண்ணுமே இல்ல. தினம் தினம் நம்பின நீங்க பேசுறது அத விட கொடுமை.
___________________________________________________
தோல்வி பயத்தில் ராமதாஸ்:திருமா

அவரு பிழைச்சிக்குவாரு. உங்க கதைய பாருங்கய்யா.
___________________________________________________
எஸ்.வி.சேகர் மீது நடிகர் விசு கடும் தாக்கு

காமெடி
___________________________________________________
எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தடை

அழைப்பில்லங்க வருது!
___________________________________________________
இன்றும் 3 மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன்

இதெல்லாம் தேவையா. யாராவது நோவுன்னா மருத்துவர் என்ன மதம்னு கேக்குறாங்களா?
___________________________________________________
என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.

அதுதான். அதேதான். உங்கள் வளர்ச்சிக்கு குறைவேதுங்கையா. அழியறது யாரோ. நீங்க நடத்துங்க.
___________________________________________________
விவசாயிகள்நலனை பா.ஜ.புறக்கணிக்கிறது:மன்மோகன்

1500 கோடி இவங்க நலனுக்கு கொடுத்திருந்தா இப்படி பேசலாம்.
___________________________________________________
பீகாரில் கள்ள ஓட்டு: லாலு குற்றச்சாட்டு

இல்லைன்னா அது பீகாரே இல்லை.
___________________________________________________
காந்தியை மறந்த அரசியல்வாதிகள்: நரேஷ்குப்தா

தினம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தின்னு இருக்கே. அப்புறம் எப்படி?
___________________________________________________

7 comments:

பழமைபேசி said...

வணக்கம் போட்டுக்கறன் பாலாண்ணே!

பாலா... said...

வாங்க பழமை. இது நல்லாருக்கு. :))

கிரி said...

//என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.

அதுதான். அதேதான். உங்கள் வளர்ச்சிக்கு குறைவேதுங்கையா. அழியறது யாரோ. நீங்க நடத்துங்க//

:-)

Anonymous said...

Excellent

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

இராகவன் நைஜிரியா said...

// எஸ்.வி.சேகர் மீது நடிகர் விசு கடும் தாக்கு

காமெடி//

சூப்பர் காமெடி.

பாலா... said...

வாங்க இராகவன் சார்.