Friday, May 1, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 38

அரசியல் காரணத்துக்காக இலங்கை போர் நிறுத்தம் பொய் என வதந்தி பரப்புகின்றனர் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்

யுத்த நிறுத்தம் செய்யவுமில்லை, செய்யப் போவதுமில்லை:மஹிந்த. தப்பா சொல்லிட்டாரு பரதேசி. பொய்னு சொன்னத மட்டும் தூக்கிட்டா இவனுங்களுக்கு சரியாப் பொருந்தும்.
_______________________________________________
மற்றொரு நாட்டுக்கு ராணுவத்தை அனுப்ப முடியுமா? குலாம் நபி

சொக்குவ கேளு! மவனே ராஜீவ்‍ஜெயவர்தனா ஒப்பந்தம்னு வாய தொறந்தா தெரியும்.
_______________________________________________
ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை இருக்கிறது;ஆனால் பயமாக இருக்கிறது:கமலஹாசன்

எல்லாம் கல்லா கட்டுறானுங்க. நம்மளுக்குன்னே நாமம் சாத்துவாங்கன்னு பயமா மருதநாயகம்?
_______________________________________________
இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் செயல்கள் ஏற்றுகொள்ள இயலாதது: அமெரிக்கா

எல்லாரும் சொல்லியாச்சி. இவரு ரிபீட்டேய்.
_______________________________________________
பிரபாகரனை விரைவில் பிடிப்போம்: ரோஹித போகலகாமா

ஆமாம். அங்க நம்பி வந்ததில ஒரு பிரபாகரன் இல்லாமலா இருக்கும். புடிச்சிக்க. போயாங்!
_______________________________________________
ராணுவத்தை அனுப்பி தனிஈழம் அமைப்போம்:வைகோ

இன்னும் என்னா அனுப்பறது. துப்பாக்கிய திருப்பிக்கன்னா சரி.
_______________________________________________
இலங்கை பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாது: ஜி.கே.வாசன்

அவ்வளவு தூரம் கேவலமா நினைச்சிருக்குதுங்க இதுங்க. அண்ட புளுகு புளுகிட்டு அலட்டல பாரு.
_______________________________________________
தேர்தலுக்கு பின் ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேச மாட்டார்: திருமாவளவன்

ஏன். அதுக்குள்ளயே கதைய முடிச்சுடுவீங்களா? இவனுங்கள நம்பி இப்படியெல்லாமா பேசுவிங்க. தேர்தலுக்குப் பின் உங்களுக்கு தெரும்மான்னு கை காட்டுங்க.
_______________________________________________
தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை. விடுதலைப் புலிகள்தான் கேட்கிறார்கள்: சு.சாமி

கர்னாடகால போய் சவுண்டு விடுது. அங்க முட்ட இல்லையா. மவனே! தமிழே ஒழுங்கா பேச வராது உனக்கு. உன்னா இதெல்லாம் பேச விட்டா ஏன் பேசமாட்ட. இங்க வந்து சொல்லி பாருடி.
_______________________________________________
எனக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்: ராஜபக்சே

நீ தறுதலயாச்சே. யாரு சொன்னா கேக்க போற நீ. சொந்த புத்தியும் இல்ல. சொன்ன பேச்சும் கேக்க மாட்ட.
_______________________________________________
மத்திய அரசை எதிர்த்து 8 நாள் தொடர் போராட்டம்: பாரதிராஜா

பிடிச்ச சனி போகட்டும்னா. பண்ணுங்க பண்ணுங்க.
_______________________________________________
ராமதாஸ் அரசியல் வியாபாரி: ஸ்டாலின் தாக்கு

அப்டி போடப்பு. அடுத்த முதல்வர் அட்டகாசமா தயாராவுராரு போல.
_______________________________________________
சென்னை ஐகோர்ட்: இன்று முதல் கோடை விடுமுறை

சாமி! கவனம். ஒளிய இடமில்ல. பொத்திட்டிருந்தா உத்தமம்.
_______________________________________________
3வது அணியின் பதவி ஆசை: சோனியா

இவிங்க ஜெயிச்சா, சே சே பதவில்லாம் யாருக்கு வேணும். மக்கள் சேவைதான்னு இருந்துடுவாய்ங்க.
____________________________________________
சோனியா தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மக்கள்

அம்மாவும் டவுட்டா? அப்படி போடு.
_______________________________________________
100 இடங்கள் கூட பா.ஜ.வுக்கு கிடைக்காது: காங்.

உன் கத சொல்லு ராசா.
_______________________________________________
தீவிரவாதிக்கு சிக்கன்- எனக்கு சுரைக்காய்கூட்டு: வருண்காந்தி

அரசியல்வாதின்னாலே அடுத்தவனுக்கு என்னான்னு தான் அலையுமா புத்தி.
_______________________________________________

12 comments:

பாலா... said...

இராகவன் சார், கலகலப்ரியா,பழமை யாருமே பின்னூட்டம் போடாததைக் கண்டித்து சாகும்வரை(நானில்லைங்க பசி) உண்ணாவிரதம். சிதம்பரம் சீக்கிரம் போன் பண்ணனுமே கடவுளே.

C said...

worst post, my friend !!

If you are the Paamaran who used to write in Kumudam, i would like to ask you how did you became so bad.

கலகலப்ரியா said...

ம்ம்.. பசி யாருங்க..? இப்டி எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க..?

கலகலப்ரியா said...

தோடா பீட்டரு.. பீட்டரு விடுறதுதான் விடுறீங்க.. அத கொஞ்சம் சரியா போடலாம் ல.. ஒரு வரிலேயே ஆயிரத்தெட்டு தப்பு.. இதில மத்தவங்கள சொல்ல வேற வந்துடுவாங்க.. ஒரு ப்ரோபைலு கூட வச்சுக்காம.. ஒளிஞ்சு ஒளிஞ்சு மத்தவங்கள கடுப்பேத்துற வியாதி இருக்கே.. யப்பா.. என்னாத்த சொல்றது.. பன்னிக் காய்ச்சல் எல்லாம் ஒண்ணுமே இல்லைங்க.. இதுக்கு யாராவது மருந்து கண்டு புடிச்சா தேவலாம்..

பாலா... said...

/If you are the Paamaran who used to write in Kumudam, i would like to ask you how did you became so bad./

sorry. i've never written for any magazine and i HAVEN'T BECOME worse.. i am always worst..thank you

பாலா... said...

/ம்ம்.. பசி யாருங்க..? /

பசி யாரா? இப்டில்லாம் கேட்டா எப்டி பதில் சொல்றது..அவ்வ்வ்..அது பத்தும் பறந்து போக வைக்கிறதுங்க. பத்து யாருன்னு கேப்பீங்களோ?

பழமைபேசி said...

உண்ணும் விரதத்துல முசுவா இருந்ததுனாலத்தான் ஒப்பமுக்கோட போக வேண்டியதாப் போச்சுங்க அண்ணே!!

பழமைபேசி said...

///If you are the Paamaran who used to write in Kumudam, i would like to ask you how did you became so bad./

sorry. i've never written for any magazine and i HAVEN'T BECOME worse.. i am always worst..thank you//

அண்ணே, என்ன இதெல்லாம்... சொல்லவே இல்ல பாத்தீங்களா? எந்தெந்த பத்திரிகையில எழுதிட்டு இருக்கீங்க??

பாலா... said...

/எந்தெந்த பத்திரிகையில எழுதிட்டு இருக்கீங்க??/

இதென்னா வம்பு. நானெங்க பத்திரிகைக்கெல்லாம் எழுதுரது. இந்த பேருல யாரோ நல்லா எழுதுவாங்க போல. அதான் அவங்களுக்கு வருத்தம் போல.

Kanchi Suresh said...

One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers.

She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.

pappu said...

நானும் இதே மேட்டரப் பத்தி எழுதிருக்கேன். வேற மாதிஎஇ. முடிஞ்சா போய் பாருங்க.

உங்கள் தோழி said...

//எனக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்: ராஜபக்சே//

//நீ தறுதலயாச்சே. யாரு சொன்னா கேக்க போற நீ. சொந்த புத்தியும் இல்ல. சொன்ன பேச்சும் கேக்க மாட்ட.//

ஹா ஹா ஹா சூப்பர் அண்ணா