Thursday, April 30, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 37

இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன்:ஜெயலலிதா

இது கூட "எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால்"னு ஒரு கொசுறு வைக்கிறீங்களே?
____________________________________________
இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா? :ஜெ

இருந்தா அரசியல்ல இருக்க முடியுமாங்க?
____________________________________________
வீட்டில் யாருக்கும் சொல்லாமல் முதல்வர் உண்ணாவிரதம் இருந்தார்:கனிமொழி

அதான் போர் நிறுத்தம்னு யாரும் சொல்லாமலே உண்ணாவிரதம் முடிச்சிட்டாரோ?
____________________________________________
தூக்கத்திலேயே மரணம்:58 சிறுவர்கள் -278 தமிழர்கள்!

தூங்கிட முடியுமா. பசி மயக்கம். இத்தனையும் சேர்ந்து அடிக்கறப்போ தெரியும் இப்ப அடிக்கிற கூத்தெல்லாம்.
____________________________________________
ராஜபக்சேவுடன் நடத்திய பேச்சுக்கள் தோல்வி: பிரிட்டன், பிரான்ஸ் வருத்தம்

அம்புகிட்ட பேசி என்னா பண்ண. ஒண்ணும் தெரியாத மாதிரி என்னல்லாம் பண்றானுவ?
____________________________________________
ரத்தினபுரி திருவிழா: சிங்கள இளைஞர்கள் மிரட்டல்!

இவனுங்க கிட்ட உக்காந்து பேசி அரசியல் ரீதியா தீர்வு! அவனவனும் பொத்திட்டு போய் இருந்தா என்னைக்கோ விடிஞ்சிருக்கும்.
____________________________________________
இந்தியா கொடுத்த பயிற்சிகளாலும், ஆயுதங்களாலும் தான் விடுதலைப்புலிகளை வென்றோம்:இலங்கை அரசு

இதுக்கு மேலயும் சொல்லு ராசா. இவ்ளோ சொல்லிட்ட. போனது எவ்ளோ. இருக்கிறது எவ்ளோ எல்லாம் சொன்னாலும் எங்காளு இல்லவே இல்லம்பாரு.
____________________________________________
நம் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்தவர் ப.சிதம்பரம்.

நீங்களும் அந்தாளு பிள்ளையும் போய் அங்க சங்கமம் நடத்தபோறம்னு சொல்லி பாருங்க. அப்போ சொல்லுவாங்க அப்பன்மாரெல்லாம். அய்யோ நீயும் நம்பிட்டியா? போனா சங்குதான்னு. ஏம்மா இப்படி ஏமாத்துறீங்க?
____________________________________________
பிரபாகரனை கைது செய்யும் வரையில் போர் நிறுத்தம் கிடையாது:கோதபாய ராஜபக்சே

கடைசித் தமிழன் ஒழியற வரைக்கும் கிடையாதுன்னே சொல்லு ராசா. எங்க தலவரு இருக்காரு எங்க காதுல பூ சுத்த.
____________________________________________
இலங்கையில் பாதுகாப்புவலயம் என்பதேஇல்லை:ஐநா

இத சொல்றதுக்குதான் நீங்க இருக்கிறதா? என்ன பண்ண உத்தேசம்?
____________________________________________
தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்களுக்கு புலிப்பட்டம் சூட்டுவதில் பயனில்லை:ரணீல்விக்ரமசிங்க

அதுக்கென்னா? தீவிரவாதின்னு சொல்லிட்டு போவாங்க.
____________________________________________
எங்களைப் பொறுத்தவரை தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ராமதாஸ்

ஏன்? நாள பின்ன அரசியல் பண்ண முடியாதில்ல . அதானே. அந்தம்மா சரின்னா இவரு ஆரம்பிச்சிடுவாரு.
____________________________________________
இலங்கைக்கான நிதியுதவியை நிறுத்தும் அமெரிக்கா

கொக்கு தலைல வெண்ண வெச்சிட்டாங்கப்பு. இனிமே உருகி கண்ண மறைக்கிறப்போ கபால்னு அமுக்கிற வேண்டியது தான்.
____________________________________________

7 comments:

SUBBU said...

நறுக்
நறுக்
நறுக்
நறுக்
நறுக்

பாலா... said...

நன்றி சுப்பு

கலகலப்ரியா said...

//வீட்டில் யாருக்கும் சொல்லாமல் முதல்வர் உண்ணாவிரதம் இருந்தார்:கனிமொழி//

>>> எத்தன மணி நேரம்?
>>> எதுக்கு?
>>> சமிபாடு ஆகலையா?
>>> யாருக்கும் சொல்லலைனா உங்களுக்கு எப்டி தெரியும்?
>>> நீங்க உண்ணா விரதம் இருந்ததுக்கு திட்டிட்டீங்களா மேடம்? அதனாலா கோச்சுண்டு சாப்டலயோ..?

கிரி said...

//வீட்டில் யாருக்கும் சொல்லாமல் முதல்வர் உண்ணாவிரதம் இருந்தார்:கனிமொழி//

சாகும் வரை உண்ணாவிரதமா !!சாப்பிடும் வரை உண்ணாவிரதமா!!

பாலா... said...

/சாப்பிடும் வரை உண்ணாவிரதமா!!/

அதே தான்!

பாலா... said...

இராகவன் சார் ஆப்சன்ட்..அவ்வ்வ்வ்

Kanna said...

அருமையான பதிவு....ஆனா என்ன சொன்னாலும் நம்ம ஆட்கள் திருந்தவே மாட்டாங்களே...