Friday, April 10, 2009

சிதம்பர ரகசியமா?

தன் மானத் தமிழன், மறத் தமிழன், மண்ணாங்கட்டி எல்லாருக்கும் மீண்டும் ஒரு செருப்படி கொடுத்திருக்கிறது காங்கிரஸ். மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் வசனம் பேசும் தமிழனுக்கும், கேவலமாக காலில் விழுந்தாவது கேட்கிறேன் எனக் கெஞ்சும் தமிழினத் தலைவருக்கும், மொத்த தமிழினத்துக்கும் மீண்டும் ஒரு முறை சுரணைகெட்ட அடிமைகள் நீங்கள் என உணர்த்தி இருக்கிறது. சீக்கியருக்கெதிரான வன்முறைகள் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் குற்றம் சாட்டப் பட்டவர்கள் தண்டனை பெறவில்லை என அமைச்சர் சிதம்பரம் மீது காலணி வீசியதைத் தொடர்ந்து சீக்கிய இனத்தின் பகிரங்க பாராட்டுக்களும் ஆதரவும் மீண்டும் ஒரு முறை காங்கிரசை அடி பணிய வைத்திருக்கிறது. ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்ற இரண்டு காங்கிரஸ் பெருந்தலைகளை வேட்பாளராக அறிவித்த காங்கிரஸ், இந்த நிகழ்ச்சியின் விளைவாக அவர்களின் நியமனத்தை திரும்பப் பெற்றுள்ளது.

இது எப்படி மீண்டும் மீண்டும் சீக்கியர்களால் முடிகிறது. அவர்களும் இந்தியாவில் தானே இருக்கிறார்கள். சோனியாவை இழிவாகப் பேசுவது இறையாண்மைக்கு எதிர் என ஒரு முதலமைச்சரே கூறுகிறார். எந்தச் சட்டத்தில் இருக்கிறது அப்படி. ஒரு அமைச்சரை செருப்பால் அடிப்பது இறையாண்மைக்கு இழுக்கில்லை எனில், சீமான் பேச்சும், கொளத்தூர் மணி, வைகோ பேசுவதும் இறையாண்மைக்கு இழுக்காவது எப்படி? செருப்படி நடந்தது தில்லியில். போட்டுக் கொடுக்க தொங்கு கூட தேவையில்லை. ஒரு வேளை தில்லிக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பொருந்தாதா?

அத்தனை அட்டூழியமும் தமிழனுக்குத் தான் பண்ணலாம். சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்தியா ஆயுதம் வழங்கியமை திரும்பப் பெறவேண்டும் என ஒரு வழக்கு பதிவான பின்னரும், ஜெ, வைகோ, கம்யூனிஸ்ட் இன்னும் தோலான் தொப்பானெல்லாம் ஆயுதம் வழங்கியது குறித்து பேசியும் தலைவர் அதை ஏன் உறுதியாக மறுப்பதில்லை. கருணாநிதி மூக்கு நோண்டினார் என அம்மையார் சொன்னால் பக்கம் பக்கமாக அந்தம்மா காது குடைந்தது எனக்குத் தெரியாதா என உடனே பதிலளிப்பவர் ஏன் வாய் மூடி நிற்கிறார். ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகையில் இந்தியா முன்னிறு போர் நடத்துகிறது என நக்கீரனில் வந்ததற்கு இது உண்மையா எனக்கூட கேட்கத் துணிவில்லாத நிலை எதனால்? என்னமோ எல்லாமே முடிந்து விட்டது போல் அலெக்ஸாண்டர் கதை சொல்லி பிரபாகரன் பிடிபட்டால் புருஷோத்தமன் மாதிரி நடத்த வேண்டுமெனெ அந்த புறம்போக்கு பக்ஸேயிடம் பிச்சைஎடுக்க இவருக்கென்ன உரிமை. தந்தை செல்வா சொன்னது போல் தமிழ் நாட்டுத் தமிழனும் ஒரு அடிமை என்பது உண்மை என வெட்கம் கெட்டுப் பேச முடியுமானால் இந்த அடிமைக்கூட்டத்துக்கு தலைவனென்று ஏன் பெருமை? எல்லாக் கட்சிகளும் ஒரே அணியில் என வாய் சவடால் போடும்போது இது கவனம் வரவில்லையா?

இப்படியாவது ஓட்டுப் பொறுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன? அல்லது ஒரு வேளை கூட்டணியிலிருந்து கழண்டு கொண்டால், நான் திருவோடேந்துவது நிச்சயம், உனக்கு அதுவுமில்லை என்று, உனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என தொங்கு போட்டுக் கொடுத்து விடும் என்ற பயமா?8 comments:

நாமக்கல் சிபி said...

அட நீங்க வேற! இங்கிருந்து மீன் பிடிக்கப் போகும் "இந்தியத் தமிழனை"யே இலங்கைக் காரன் துப்பாக்கிச் சூட்டில் இருந்து காப்பாத்த துப்பில்லை இவங்களுக்கு!

கலகலப்ரியா said...

மன்னிச்சிடுங்க சார்.. இவங்கள பத்தி பேசவே அருவெறுப்பாக இருக்கு..

பாலா... said...

அறுவெருப்பா. யாருமில்லாத காட்டுக்குள்ள ஓடி ஒளியணும் போல வருது. இப்படி எல்லாம் நடக்குதுங்கற சொரணை கூட இல்லாம இருக்கிறவங்கள பார்த்தா எரிச்சலா வருது. மொத்தத்துல பைத்தியம் பிடிக்குது. அழதான் முடியுது பெரும்பாலும்.

பாலா... said...

வாங்க சிபி. கண்டிக்கிறோம்னு சொன்னா கடமை முடிஞ்சது. கட்சிக்கு முன்னால கச்சத்தீவு இருந்தா என்ன. போனால் என்ன?

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

pulikkutti said...

சர்தர்களை பார்த்து சிரிக்கும் நாம் எல்லோரும் அவர்களை பார்த்து ஒற்றுமையை கற்றுகொள்ள வேண்டும்

Anonymous said...

நாய் கூட இவங்க மேல ஒண்ணுக்கு போகாது சாரு..

சூர்யா ௧ண்ணன் said...

// சர்தர்களை பார்த்து சிரிக்கும் நாம் எல்லோரும் அவர்களை பார்த்து ஒற்றுமையை கற்றுகொள்ள வேண்டும்//

// நாய் கூட இவங்க மேல ஒண்ணுக்கு போகாது சாரு..//