Monday, April 27, 2009

பாண்டி பஜாரில் பகுத்தறிவுப் புரட்சி.

நாளைக்கு தமிழக மக்களுக்கு ரொம்ப முக்கியமான நாளுங்க. எப்பவும் அரசியல் எழுதறவன்னு ஈழத்துல என்னவோன்னு பதற வேணாம். நாளைக்கு உலகத்துல எங்கயுமே நடக்காத விடயம் வருடா வருடம் நடக்கிற கூத்து நடக்கப் போகுது. துபாய்ல நகைத் திருவிழா மட்டும் நடக்கலைன்னா நம்மாளுங்க உலக சாதனை பண்ணி இருப்பாங்க. இப்பவும் நடக்குறது தான். ஏனோ சரியா தகவல் போய் சேரலை. பாரெங்கும் நம்ம இடுகை படிக்கிற நண்பர்கள் சொல்லுங்க. எங்கயாவது நகை வாங்க போக்குவரத்து ஒழுங்கு பண்ணி ஒரு கி. மீ. கு அப்பால இருந்தே நடந்து வந்து தான் வாங்கணும். இழுத்துண்டிருக்கிற நோயாளிய ஏத்தி கொண்டு வர வாகனமானாலும் ஏழு கி.மீ. சுத்தி தான் போயாகணும். ஒரு வாரத்துக்கு முன்னாடியே பொருள செலக்ட் பண்ணி, காச குடுத்துட்டு நாளைக்கு போய் வாங்கிண்டு வரணும் இப்படி எல்லாம் ஒரு வியாபாரம் உங்க ஊருல நடக்குதா?

பெரியாரால முடியாததை சாதிச்சி காட்டினவங்க நம்ம பாண்டி பஜார் வியாபாரிகள். ஆமாங்க. நாளைக்கு அட்சய திருதியை. நாளைக்கு தங்கம் வாங்கினா இருக்கிற ஒரு தனலச்சுமி அணு அணுவா பிரிஞ்சி வாங்கினவங்களுக்கு அடிமை ஆய்டுவா. நாளன்னைக்கு பேப்பர பார்த்தா தலை சுத்தும். இவ்ளோ கோடி ரூபாய் ஜனங்க கிட்ட இருக்கா? இந்தியா ஏழை நாடுன்னு எவன் சொன்னான்னு எல்லாம் தலைய பிச்சிக்கணும். உஸ்மான் ரோடுல சமத்துவம் யாரும் போராடாமலே வந்துடும். ஒண்ணர கோடி ரூபாய்க்கு நகை வாங்கற ஆளும் ஒரு கிராம்ல மூக்குத்தி தேடுற அம்மணியும் நடந்து தான் போகணும். இதில வேற பரிந்துரைக் கடிதம், தெரிஞ்ச ஆளுக்கு போன்னு எல்லாம் வேற நடக்கும். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் அட்டைய தேச்சாவது வாங்கியாகணும். கிராம் என்ன விலைன்னு கூட பார்க்க மாட்டாங்க. கொண்டு வந்த காசுக்கு பத்தாக் குறைன்னா காதுல மூக்குல இருக்கிறத களத்தியாவது கூட போட்டு வாங்கிடுவாங்க.

தங்கமே வாங்கினா வெள்ளி விக்கிறது எப்படி? புடிச்சாங்க ஒரு சோசியர. எங்கயோ ஒரு சுலோகம் வடமொழில. இத்தன வருஷம் ஏன்டா தெரியலன்னு எவனும் யோசிக்கிறதில்ல. அந்த சுலோகம் சொல்லி பாரு அட்சய திருதியைல வெள்ளை உலோகம் வாங்கினா அப்படி இப்படின்னு உட்டாலக்கிடி. இப்படி ஒரு ரெண்டு வருசம் ஓட்டி தங்கம் வாங்க முடியாத ஆளையும் வெள்ளி வாங்க வளைச்சு போட்டு இருக்க, வந்துச்சிய்யா பிளாட்டினம். வெள்ளையா வேணுமானாலும் வாங்கு, தங்கம் கலந்துன்னாலும் வாங்குன்னு அவங்களையும் வளைச்சி போட்டாச்சி. ஆளாளுக்கு டோக்கன் வெச்சிண்டு வரிசைல நின்னு வெள்ளத்துல சிக்கினவனுக்கு உணவுப் பொட்டலம் குடுத்தா அடிச்சிப்பாங்களே அப்படி அடிச்சிக்கும். காலைல 6 கே கடை தொறந்து நடு ராத்திரி வரைக்கும் ஓடும்.

ஆடி மாசம் நல்லதில்லைன்னு இருந்த சனங்கள ஆடித் தள்ளுபடின்னு அழுக்கு, பட்டன் போனது, தையல் விட்டதெல்லாம் போட்டு அள்ளுவானுங்க பாரு. சரவணா ஸ்டோர்ல வரவன் அத்தனை பேரும் திருடன்னு தான் பார்க்கறதே. சந்தேகம் வந்தா பாதுகாப்பு பரிசோதனை லெவலுக்கு ஜட்டிய கூட உருவி பார்த்து தான் உள்ள விடுவாங்க. பார்க்கணும் கூட்டத்த. வாடி இங்காலன்னு யாரோ பொம்பளய கைய புடிச்சி இழுத்து பொண்டாட்டி கிட்டயும் அடி வாங்குவான் நம்மாளு. ஆனாலும் அள்ளிக்கிட்டு வந்து வெளிய வரப்ப பார்க்கணும். அப்படி ஒரு பெருமை.

மார்கழி மாசம் பீடை மாசம்னா சொல்றீங்க. மக்கா இருங்கடின்னு புது வருட தள்ளுபடி. மக்கள் வசதிக்காக டிசம்பர் 25 ல இருந்தே . பொருளை தேர்ந்தெடு. காச குடு. ஒன்னாந்தேதி வந்து வாங்கிட்டு போ. எவனுமா யோசிக்க மாட்டான். பொருளை தேர்ந்தெடுத்து காச குடுத்தா இன்னைக்கு வாங்கின கணக்குத் தானேன்னு. நம்மள மாதிரி கேனைங்கள பார்த்து நீங்க ஒன்னும் வாங்கலையான்னு கேக்கற தொனி இருக்கே. கதியத்த பயலேன்னு கேக்குறா மாதிரியே இருக்கும். நீங்களே சொல்லுங்க சாமிகளா, மூட நம்பிக்கை வேணாம் வேணாம்னு கரடியா கத்தினாலும் கேக்காத நம்ம சனங்கள அந்த மூட நம்பிக்கய வெச்சே உடைச்ச பாண்டி பஜார் கடைக்காரன விட பகுத்தறிவு வாதி உண்டுமா?
****7 comments:

கலகலப்ரியா said...

ஆஹா... நல்ல எண்ணம்டா சாமி.. நம்ம வீட்ல பவர் போச்சின்னா.. பக்கத்து வீட்டிலயும் போயாகணும்ல.. ஒண்ணு ரெண்டு மறந்து போய் இருந்தாலும்.. இப்டி இடுகை போட்டே குடும்பத் தலைன்னு பேருக்கு இருக்கிறவங்கள எல்லாம் முக்காடு போட வைக்கிறீரே ஐயா..

இன்னொரு இலவச ஆலோசனை.. இப்டி நெரிபட்டு நைஞ்சு நாராகி நகை வாங்கணுமா.. பேசாம ஒரு தனியார் விமானம் ஏற்பாடு பண்ணிண்டு இலங்கை இராணுவம் கிட்ட போனீங்கன்னா.. ஈழத்தில கொள்ளையடிச்ச தங்கம் பாதி விலையில கிடைக்கும்.. தங்கத்துக்கு தங்கமும் ஆச்சு.. ஊர சுற்றிப் பார்த்தும் ஆச்சு.. (காதுக்குப் பஞ்சு.. கண்ணுக்கு ரிப்பன் கட்டிக் கொண்டு செல்லவும்..)

கலகலப்ரியா said...

ஆ.. ஊரைச் சுற்றியதும் ஆச்சு... (ரிப்பன் மறந்துட்டேன்..)

பாலா... said...

இதென்னாங்க. விடுதலைப்போரை தீவிர வாதம்னு சொல்றத விட மோசமா இருக்கே. இப்போ நான் இடுகை போட்டு இதப்படிச்சி யாரும் கெட்டு போய்ட மாட்டாய்ங்க. டூ லேட். திங்கக் கிழமை மட்டமடிக்க முடியாது. விதி சரி இல்லைன்னா மருத்துவர் சீட்டு கொண்டு போனாலும் கும்பல்ல மானேஜரும் தான இருப்பாரு. மாட்டணும். அவ்வ்வ். இலங்கைக்கு போய் வாங்கறதா? அவன் தமிழன பார்த்தாலே சுட்டுட்டு தானெ யாருன்னு பார்ப்பான். அனியாய்த்துக்கு லொள்ளு பண்ணா எப்படிங்க? சமூக சேவை பண்ணாலே எதிர்ப்புதான்:P

துளசி கோபால் said...

போன அக்ஷயத்ருதியைக்கு வூட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி நேத்தோட காலி பண்ணிட்டாங்களா?

ஒரு வருசத்துக்கு மட்டுமே
செல்வம் பெருகும். கணக்கு அப்படி.

இன்னிக்குப் பொழுது விடிஞ்சு பார்த்தா போனவருசம் சேர்த்த செல்வம் எல்லாம் மண்ணு.

எப்படியோ போங்கன்னு தண்ணி தெளிச்சு விடவேண்டியதுதான்.

ரங்குடு said...

நகை வாங்கறதிலே தப்பில்லை. ஏதோ வருஷ சாமான் வாங்கற மாதிரி தங்கத்தையும் எதோ ஒரு நாள் வாங்கிட்டா தப்பில்ல.

ஆனா அட்சய திருதியை அன்னிக்குதான் வாங்கணும்னு பிடிவாதம் பிடிக்கிறது தான் கொடுமை.

மேற்கு நாடுகளில் அம்மா தினம், அப்பா தினம்,காதல் தினம் னு கொடுமை படுத்துவாங்க. இங்கேயோ அட்சய திருதியை, மஹாளய அமாவாசைன்னு கொடுமை.

இராகவன் நைஜிரியா said...

அருமை பாலா. அட்சய திருதியை என்றால் தங்க வாங்க வேண்டும் என்று ஒரு பித்தலாட்டத்தை ஆரம்பித்து நல்லா கல்லா கட்டிகிட்டு இருக்காங்க.

இது வரை நான் அட்சய திருதியைக்கு தங்க வாங்கியது கிடையாது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அன்று கும்பகோணத்தில் 12 கருட வாகனம் நடைபெறும். கும்பகோணம் பெரிய தெரு, சின்ன கடைத் தெரு வியாபரிகள் எல்லாம் வரும் மக்களுக்கு நீர் மோர் கொடுப்பார்கள்.

இன்று அதையே வியாபாராமாக்கிவிட்டனர்.

அரசியலே வியாபாரமாகிப் போய்விட்ட இந்த காலத்தில், இதையும் வியாபாரமாக்கியதில் ஒன்றும் வியப்பில்லை.

1000 பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது...

பாலா... said...

/1000 பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.../

சரியாச் சொன்னீங்க சார்.