Sunday, April 12, 2009

கலைஞர் பெசல்

நாம் பெறும் நரகம் பெறுக இவ்வையகம்! நீங்களே சொல்லுங்ணா. காலைல எழும்பினதுமே இப்படியெல்லாம் பார்க்க நேர்ந்தா மனுசன் என்னா தான் செய்யுறது:

இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேற யாராவது கேட்டா வில்லங்கமா கேட்டுடுவாங்கன்னு பெருசு உசாரா பண்ற வேலை இது.

பிரபாகரனை நீங்கள் ஏதோ இழிவுபடுத்தி விட்டதைப் போல பழ.நெடுமாறனும், வைகோவும், ராமதாசும் உங்கள் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார்களே?.

எவ்ளோ காசு குடுத்தாலும் எந்த பத்திரிகைக்காரனாவது கேப்பாங்களா இப்படி. முரசொலி ஆளுங்க கூட முகத்த சுளிப்பாங்க.

இதுக்கு பதில் உளறல் இது:

இன்றைக்கு ஒரு சில பாராளுமன்ற தொகுதிகளுக்காக - கூனிக் குறுகி தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு - நம்மைப் பற்றி குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?.

வாஸ்தவமான பேச்சு. இவரு தொகுதியே வேணாம், தேர்தலே வேணாம்னு இருக்கிற ஆளு.

இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் சார்பாக ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக எத்தனையோ போராட்டங்களையும், தியாகங்களையும் செய்ததை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

அய்யோ. இல்லையா பின்ன. இப்போ உசிர பிடிச்சிண்டு கெஞ்சுறப்போ பண்றத பார்க்கிறப்பவே தெரியுது.

இவ்வளவிற்கும் பிறகு இலங்கைத் தமிழர்களுக்காக தாங்கள்தான் பிறவி எடுத்தவர்கள் போல சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டுக் கட்சிகள் சில இந்திய அரசு தான் இலங்கையிலே போரை நடத்துவதைப் போலவும், அங்கே நடக்கும் படுகொலைக்குக் காரணம் இந்திய அரசும், தமிழக அரசும்தான் என்பதைப் போலவும் குற்றஞ்சாட்டி வருகிறார்களே?.

இவருக்கு மணியடிக்கிற தினத் தந்தி தான் டாங்கி ஈரோடு வழியா கொச்சின் போச்சுன்னு எழுதினது. ஃபோடோ போட்டு. அங்க கள புடுங்க போச்சா?
இது யாரு சொன்னா? ஏன் யாரும் புடிச்சி கிழிக்கல ஏன் பொய் சொல்றன்னு


தானே மாட்டிக்கிற அழகப் பாருங்கோ
"அரசியல் நோக்கத்தோடு அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் நன்றாக அறிவார்கள். தொகுதி உடன்பாட்டுக்கு தோட்டத்தில் தொங்கிக் கொண்டிருப்பதில் இருந்து அவர்கள் நோக்கம் புரியவில்லையா?."

இவருக்கு அரசியல் நோக்கமும் இல்ல. சொக்குன்னா சீரிண்டு வரது
எதுக்குன்னும் நமக்கு தெரியாது.

ராஜபக்சேவுக்கு உதவி செய்யும் "அம்பி'' யார் என்பதை போரஸ் வரலாற்றை நினைவுபடுத்திய முதல்வர் கருணாநிதி மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டுமென்று தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?.

இதுக்கு பதில்:ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கு துணை போய் இருப்பவர் இவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள். "அம்பி''யார் என்பது தெளிவாகும்!.

ஏன் சொக்கு, கலைஞர்னு பேர் மாத்திபோட்டாலும் தெளிவாகுது.

இலங்கை தமிழர்களை காக்க ஆட்சியை ஏன் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி கேட்டிருக்கிறாரே?

நாமும் பதவியை இழந்து விட்டால், பிறகு அவர்களுக்கு கட்டி அழுவதற்குக் கூட துணை இருக்க மாட்டார்கள் என்று சந்திரஹாசன் போன்றவர்கள், மங்கையற்கரசி போன்றவர்கள், சேனாதி ராஜா போன்றவர்கள் எல்லாம் கூறுவதை நம்புவதா?

பதவில இருந்தாதான் கட்டி அழுவோம்னு யாரு சொன்னாங்க இவருட்ட?

(ராமதாஸ்) இப்போது கூறுவதை அப்போதே கூறி, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தால் இவரை தமிழகம் ஒருவேளை நம்பியிருக்கும்!.

இப்பவும் விலகாமா பேசாம இருக்கிற இவர நாம நம்பலன்னு தெரியுது போல.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ், தி.மு.க. அரசுகள் செய்த துரோகத்தை தெருத்தெருவாக சென்று கூறுவேன் என்கிறாரே வைகோ?.

ஆனால் தி.மு.க.வைப் பற்றி இவர் கூறும் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு இனியும் தமிழர்கள் தயாராக இல்லை!.

ஆமாம். எழுதி குடுத்துட்டோம் மொத்தமா. இவரு புளுகறத தான் நம்புவோம்னு.

அந்தய்யா மாதிரி வசதிக்கு வெட்டி ஒட்டுறானோனு நினைக்கிறீங்கன்னா நீங்களே பாருங்கய்யா. உங்க தல எழுத்து அப்படி:
http://www.maalaimalar.com/2009/04/12084640/chennai.html

10 comments:

கலகலப்ரியா said...

ஐயா பாலா ஐயா பிடிங்கையா ஓட்டு.. இது படிக்க என்னால முடியாதுப்பா.. கருணைத் தாத்தா விட்டுடுப்பா ஈழத்த.. உனக்கு புண்ணியமா போவும்..! (ஆமாம் தாத்தாவுக்கு எங்கயோ கொலை மிரட்டல்னு கண்ல பட்டுதே.. என்ன கனவில யமதர்மராஜா வந்தாருங்களா?.. இழுத்துட்டு கெடக்கிற ஜீவன கொலை பண்ற அளவுக்கு கோழைகள் இருக்க மாட்டாங்க.. பயப்டாதிங்க என்ன?)

கலகலப்ரியா said...

ஓஓ மறந்துட்டேன்.. சிங்களத்தில அப்டி நிறைய இருக்காங்க.. அதனால கொலை மிரட்டல் அங்க இருந்து வந்திச்சோ தெரியல.. ஜாக்கிரத அப்பு.. அவங்க இழுத்துண்டிருக்கா.. வெட்டிண்டிருக்கா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்..

பாலா... said...

ஆறுதல் சொல்லுவாங்கன்னு பாத்தா அப்டியே போறாங்க.அவ்வ்வ்வ்வ்

கலகலப்ரியா said...

ஆறுதலா எதுக்கு? (நான்தான் எதையும் படிக்கலையே..)

பாலா... said...

படிச்சிருந்தா நானில்ல‌
உங்களுக்கு ஆறுதல் சொல்லி இருக்கணும்.

கலகலப்ரியா said...

அப்புறம் எதுக்குய்யா நான் உங்களுக்கு ஆறுதல் சொல்றது.. தலிவரு இன்னும் உயிரோடதானே இருக்காரு?

இராகவன் நைஜிரியா said...

இப்போதைக்கு உள்ள நிலை ... தமிழக மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வதுதான்.

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க, என் காலம் வரும் பின்னே அப்போ வாங்கடா வாங்க..

இராகவன் நைஜிரியா said...

என்னால முடிஞ்சது ஓட்டு போடுவதுதாங்க. அதைச் சரியா பண்ணிவிட்டேன்.

கலகலப்ரியா said...

//யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க//
அதேதான்..

பாலா... said...

வாங்க இராகவன் ஐயா . வருகைக்கு நன்றி.