Tuesday, April 28, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 35

தா.பாண்டியன் வேட்புமனுவில் தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார்: ஆதாரங்களை வெளியிட்டார் கலைஞர்

தவறான தகவல் பத்தியெல்லாம் நீங்க பேசலாமா தலைவரே? மொத்த தமிழினத்தையும் ஏமாத்தி, என்னமோ அங்க அமைதி வந்தா மாதிரி 25கோடி வெகுமதி வேற.
____________________________________________________________

இலங்கையின் உண்மை நிலவரம் இரண்டு நாளில் தெரியும்:விஜயகாந்த் பேச்சு

ஆமாம். நாப்பத்தெட்டு மணி, ஓர் இரவு எல்லாம் புடிங்கியாச்சி. இவரு வந்துட்டாரு கெடு சொல்ல.
______________________________________________________
பிரபாகரனின் விளையாட்டு முடிந்துவிட்டது:ராஜபக்சே

மவனே இருடி. யாரு விளையாட்டு முடியிது பார்க்க தான போறம்.
__________________________________________________________
பிரபாகரனை பாதுகாக்க நினைத்தால்......-:அமெரிக்காவுக்கு இலங்கை எச்சரிக்கை

எச்ச நாயே! பச்சை அட்டை வெச்சிட்டு சலம்புற பரதேசி. ஃபெய்ன் சொன்னா மாதிரி மட்டும் நடந்துச்சி அப்போ தெரியும்டி உன் திருகுதாளம்.
____________________________________________________
போர்விதிகள் மீறல்:மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

கண்டனம் சொல்ற நேரமாய்யா இது. இப்படியே கண்டனம் சொல்லிட்டு கண்டோலன்ஸ் சொல்லிடுங்கடா.
_____________________________________________________
பிரபாகரன் தப்பிவிட்டதாக தகவல்:ராணுவம் அதிர்ச்சி!

இன்னும் இருக்குடாங் கொய்யாலே. இதுக்கே அதிர்ந்தா எப்படி?
________________________________________________
இனம் தின்னும் ராஜபக்சே:வைரமுத்து கவிதை

பேர மாத்திப் போடுங்க கவிஞரே. நிஜம்மா தமிழை தமிழனை நேசித்தால் செய்யும் பார்க்கலாம். இன்குலாப் கவிஞன். நீங்க?
_______________________________________________________
தமிழ் ஈழத்திற்கு வேறு இடத்தை தேர்ந்தெடுக்கவும்: ஜெ.வுக்கு கோத்தபாய ராஜபக்சே பதில்

எப்படி? கொழும்புல இருந்தே மாத்திடலாமா? மக்கா நடக்கும்டியேய்!
______________________________________________________
இலங்கைத்தமிழர் நிவாரண நிதிக்கு 25கோடி வழங்கப்படும்:கலைஞர்

மொத்த தமிழினத்தை முட்டாளாக்கினதுக்கு பரிசு: பொது சனம்!
_____________________________________________________
தனி ஈழம் என்று ஜெ. சொல்லுவதற்கு தேர்தலே காரணம்: கலைஞர்

உண்ணாவிரத மோசடிக்கு என்ன காரணம்?
_____________________________________________________
காங்கிரஸ் கட்சி எந்த தைரியத்தில் தேர்தலை சந்திக்கிறது: நடிகை விந்தியா

தன்னை விட பெரிய துரோகி கூட இருக்கிற தைரியம்தான்!
________________________________________________________
விடுதலைசிறுத்தைகளுக்கு ஸ்டார்சின்னம்:சுப்ரீம்கோர்ட்

சூப்பர் ஸ்டார் சின்னமே குடுக்கலாம் திருமாக்கு. ஏமாத்திட்ட சந்தோசம் என்னாமா தெரியுது முகத்தில. இதில வேற உண்மையான போராட்டத்துக்கு வெற்றியாம்.
___________________________________________________________

நாரதர் கலக்கம் நன்மையில் முடியும்!

நாராயணன் கலகம் நம்மவர் கதை முடிக்கும்!
______________________________________________

6 comments:

இராகவன் நைஜிரியா said...

why no பின்னூட்டம்ஸ் to day by anbody.

நான் ஏன் போடலைன்னு கேட்கிறீங்களா.. யாராவது போடுவாங்க அப்புறம் போடலாம் அப்படின்னு waiting...

பாலா... said...

:))..வாங்க இராகவன் சார். நீங்களே போடல. அப்புறம் நாம போடலாம்னு இருக்காங்களோ என்னமோ?

கலகலப்ரியா said...

அசிங்கம் புடிச்சவங்க.. படிக்கவே புரட்டிண்டு வருது..

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா said...

அசிங்கம் புடிச்சவங்க.. படிக்கவே புரட்டிண்டு வருது.. //

யப்பா பின்னூட்டத்தைப் பத்தி சொல்லவில்லை என்று நம்புகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// பாலா... said...

:))..வாங்க இராகவன் சார். நீங்களே போடல. அப்புறம் நாம போடலாம்னு இருக்காங்களோ என்னமோ? //

இப்படியெல்லாம் வேற இருக்கோ...

இனிமே பின்னூட்டம் போடும் போது பார்த்துப் போடணும்

கலகலப்ரியா said...

//
யப்பா பின்னூட்டத்தைப் பத்தி சொல்லவில்லை என்று நம்புகின்றேன்//

ஆனாலும் நீங்க ரொம்ப பயந்த சுபாவம் சார்.. யோசிச்சு யோசிச்சு பின்னூட்டம் போடுறீங்க.. பின்னூட்டம் போட்டா உங்கள சொல்றாங்களோனு பயப்படறீங்க.. உங்க மேல உங்களுக்கு அவ்ளோ அவநம்பிக்கையா.. சும்மா பயப்டாதீங்க சார்.. தைரியமா இருங்க.. என்ன... நாம எல்லாம் மூஞ்சி நேர பட்டு பட்டுன்னு போட்டு தாக்கிடுவோம்.. ஹிஹி.. சந்தேகம்னா பாலா சார்ட்ட கேளுங்க..