Sunday, April 26, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 33

அதிமுக-முரண்பாடுகளின் கூட்டணி:கனிமொழி

அவிங்க உங்க கூட்டணிய கொலைகாரர்கள் கூட்டணிம்பாங்க. அதையும் கேட்டுக்கதான் வேணும்.
______________________________________________
பாஸ்போர்ட் அதிகாரி-மாஜி எம்.பி.மகள் சிறையில்

போலி பாஸ்போர்ட்ல எஸ்கேப் ஆகிட போறாய்ங்க. பார்த்துக்குங்க.
______________________________________________
மே மாதம் பிரதமர், சோனியா, தமிழகத்தில் பிரச்சாரம்

வரவேற்க மக்கள் தயார். என்னா ஒரு ஏத்தம்.ம்ம்?
______________________________________________
ஐநா’ஜோன் ஹோம்ஸ் இன்று கொழும்பு செல்கின்றார்

டூர் போய்ட்டு அங்க போய் விடுதலைப் புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும். சரணடய வேண்டும்னு திரும்ப சொல்லப் போறாரு.
______________________________________________
இடம்பெயர்ந்த தமிழர்கள் மீது குண்டுத்தாக்குதல்: 174 பேர் பலி

எங்க போனாலும் தான் இடம் பெயர்த்துறானே.
______________________________________________
ஆணித்தரமாக சொல்கிறேன் நாங்கள் போராடி தனி ஈழம் பெற்றுத்தருவோம்:ஜெ.ஆவேசப்பேச்சு

புரிஞ்சோ புரியாமலோ இப்பொ சொல்றத கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருந்தா என்னல்லாமோ நடந்திருக்கலாம்.
______________________________________________
இந்தியா போர்நிறுத்தம் பற்றி பேசவில்லை: ராஜபக்சே செயலாளர்

இது கலைஞருக்கும் காங்கிரசுக்கும் தெரியவே தெரியாது.
______________________________________________
ஈழத்தில் ஒவ்வொரு வீட்டிலும் எம்ஜிஆர் படம் இருக்கிறது:ராமதாஸ் பேச்சு

யோவ். ரொம்பத்தான்யா நக்கலு. குந்த இடமில்லாம அது அது வெட்ட வெளீயில. இவரு போய் பார்த்துட்டு வந்தா மாதிரி படம் இருக்குதாம்.
______________________________________________
போர்நிறுத்தத்திற்கு சீனா எதிர்ப்பு:கலைஞர் கவிதை

ஏன்! போருக்கு காங்கிரஸ் ஆதரவுக்கு போர்ப் பரணி எழுதலையா?
______________________________________________
இலங்கை கடற்கண்காணிப்பு நிலையம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்

அவனுங்க கண்காணிக்கிறதே வேறயாச்சே.
______________________________________________
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: ஜி-8 நாடுகள் அவசர கோரிக்கை

மயிலே மயிலேன்னு அவனவனும் கூவுறதுக்கு தான் ரெடி. நாள பின்ன நீ என்னா பண்ணனு கேட்றப்படாது.
______________________________________________
வன்னி நிலை:ஐ.நா.வில் விவாதிக்க பல நாடுகள் மீண்டும் முயற்சி

எவ்ளோ தள்ளிப் போட்டாலும் இந்த பக்ஸே முடிச்சி தொலைய மாட்டங்குறான். எவ்வளவு முறைதான் கூட்டம் போட்டு ஒரே பாட்ட பாடுறது.
______________________________________________
பிரபாகரன் சாகும் வரை போராடுவார்: கருணா

நீயெல்லாம் இத சொல்லலாமா. பக்ஸே செருப்புல மண்ணாம். பாலிஷ் போட போ ராசா.
______________________________________________
சிங்கள கொலைவெறியாட்டம்: சமாதான சபை தலைவர்கள் பலி

ஐ.நா.க்கு சொல்லுங்கப்பா. அந்த நாட்டு அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, இறையாண்மைக்கு மதிப்பளித்து சமாதானமா போக சொல்லுவாங்க.
______________________________________________
அதிமுக கூட்டணி வெற்றி பெற இலங்கை பிரச்சனை முக்கிய காரணமாக அமையும்: ராமதாஸ்

அதுக்கு மேல உங்களுக்கெல்லாம் வேற எந்த அக்கரையுமில்லன்னு தெரியுமுங்கோ.
______________________________________________
தனி ஈழம் விஷயத்திலும் ஜெ.பல்டி அடிப்பார்:வீரமணி

பெரியார் இல்லாம போய்ட்டாரேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்தாளு நாறிப் போயிருப்பாரு. பேருல முதல் எழுத்த மட்டும் மாத்திட்டா சரியா இருக்கும்.
______________________________________________
ஸ்ரீரவிசங்கர் சந்திப்பு: ராஜபக்சே-ஜெ. உறவை உறுதிப்படுத்திவிட்டது: இ.யூ.மு.லீக்

தோ பார்ரா. மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்க்குறது. (அவரு குடுத்த விடியோ போட்டோ எல்லாம் மத்திய மாநில அரசுட்ட குடுக்கலையாம். ஜெ.ட்ட குடுத்தாராம். அதனால இந்த லிங்க்கு)
______________________________________________
இலங்கை பிரச்னையில் பாமக கபட நாடகம்: ஆ.ராசா

திமுக கபட நாடகம் ஏன்னு சொல்லுங்க ராசாவே.
______________________________________________
புலிகள் ஒருதலைபட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு

புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு: இலங்கை நிராகரிப்பு (இதும் செய்திதான். எனக்கு வேலை வைக்கல)
______________________________________________

10 comments:

கிரி said...

//யோவ். ரொம்பத்தான்யா நக்கலு. குந்த இடமில்லாம அது அது வெட்ட வெளீயில. இவரு போய் பார்த்துட்டு வந்தா மாதிரி படம் இருக்குதாம்.//

:-) :-(

கிரி said...

//போர்நிறுத்தத்திற்கு சீனா எதிர்ப்பு:கலைஞர் கவிதை//

கவிதை என்றாலே வெறுப்பு வரும்படி செய்து விடுவார் போல் உள்ளது

இராகவன் நைஜிரியா said...

// மே மாதம் பிரதமர், சோனியா, தமிழகத்தில் பிரச்சாரம்

வரவேற்க மக்கள் தயார். என்னா ஒரு ஏத்தம்.ம்ம்? //

எல்லாம் தமிழ மக்களின் ஞாபகமறதி மேல் உள்ள ஒரு நம்பிக்கைதான்.

இராகவன் நைஜிரியா said...

// ஐநா’ஜோன் ஹோம்ஸ் இன்று கொழும்பு செல்கின்றார்

டூர் போய்ட்டு அங்க போய் விடுதலைப் புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும். சரணடய வேண்டும்னு திரும்ப சொல்லப் போறாரு.//

இது ஒரு டெம்ப்ளேட் மாதிரி. அங்க போயிட்டு வரவங்க எல்லோரும் அப்படித்தான் சொல்லுவாங்க

இராகவன் நைஜிரியா said...

// ஸ்ரீரவிசங்கர் சந்திப்பு: ராஜபக்சே-ஜெ. உறவை உறுதிப்படுத்திவிட்டது: இ.யூ.மு.லீக்

தோ பார்ரா. மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட பார்க்குறது. (அவரு குடுத்த விடியோ போட்டோ எல்லாம் மத்திய மாநில அரசுட்ட குடுக்கலையாம். ஜெ.ட்ட குடுத்தாராம். அதனால இந்த லிங்க்கு)//

இதுக்கு என்ன சொல்வது என்று தெரியலீங்க. எதை எல்லாம் அரசியல் ஆக்குவது என்று விவஸ்தை இல்லாமல் போயிடுச்சு..

பாலா... said...

வாங்க கிரி. ரொம்பவே கூனி குறுக வைக்கிறாங்க.

பாலா... said...

வாங்க இராகவன். சரியா சொல்றீங்க.

கலகலப்ரியா said...

mm

Subbu said...

// ஐநா’ஜோன் ஹோம்ஸ் இன்று கொழும்பு செல்கின்றார்

டூர் போய்ட்டு அங்க போய் விடுதலைப் புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும். சரணடய வேண்டும்னு திரும்ப சொல்லப் போறாரு.//

தனி தமிழ் ஈழம் அமையவே
அமையாதா? :((((((

உங்கள் தோழி said...

//இடம்பெயர்ந்த தமிழர்கள் மீது குண்டுத்தாக்குதல்: 174 பேர் பலி//

//எங்க போனாலும் தான் இடம் பெயர்த்துறானே//

தமிழனாக பிறந்தது நாம் செய்த குற்றமா?பறவைகள் விலங்குகள் சுதந்திரமாக வாழுது ஆனால் மனிதர் நிலை?