Saturday, April 25, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 32

அரசியல்வாதிகள் தெய்வம் அல்ல: பிரியங்கா

சரியாச் சொன்னிங்க! மனிசங்க கூட இல்லன்னு அம்மாவும் பிள்ளையும் நிரூபிக்கிறாங்க.
_______________________________________________________
ராகுல்காந்தியால் தூக்கமின்றி தவித்தேன்:பிரியங்கா

பழகிக்கணும்மா. பண்ண பாவம் சும்மா விடாது.
_______________________________________________________
பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் : ராகுல்காந்தி

வாழைப்பழம் வேணாம்னு சொல்ற குரங்கா? நம்பிட்டோம். ஆத்தா வையும். பார்த்துக்க தம்பி.
_______________________________________________________
10கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும்:ஜெ.வுக்கு தயாநிதிமாறன் நோட்டீஸ்

யாரு செத்தா என்ன? கோடினு சாவுற கேடிங்க.
_______________________________________________________
பச்சோந்தி பாமகவுக்கு பாடம்புகட்டுங்கள்: ஜி.கே.வாசன்

பசுத்தோல் போர்த்திய புலி உங்களுக்கு புகட்டிட்டு அவங்களுக்கு புகட்டுவாங்க இருடி!
_______________________________________________________
சிவசங்கர் மேனன் இலங்கை பயணம்

இன்னைக்கு எத்தன பேரு போய்ச் சேருராங்களோ? சிரிச்சி சிரிச்சி என்னா சொல்லுவானோ. சிங்களவன் பேயாட்டம் ஆடுவான்.
_______________________________________________________
இலங்கை தமிழர்களை காப்பதிலே கடமையாக இருக்கிறார் கலைஞர்: திருமா

கடனேன்னு இருக்கிறார்தான் சரி.
_______________________________________________________
இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும்: விஜயகாந்த்

போனது பண்ற நாசம் போறாது. இன்னும் வேற அனுப்பணுமா? பேப்பரே படிக்க மாட்டானா இந்தாளு.
_______________________________________________________
போர் பகுதிக்கு செல்ல ஐ.நா. சபை குழுவை அனுமதிக்க மாட்டோம்: ராஜபக்சே தம்பி

இதெல்லாமும் கேட்டுகிட்டு இறையாண்மை பேசுறவன எதால அடிக்க?
_______________________________________________________
ஈழத்தமிழர் பிரச்சனையில் விரைவில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது:ப.சிதம்பரம்

யாருக்கு நல்ல முடிவு ? யாரு நம்பறது ?
_______________________________________________________
இன்னும் நான்கு நாட்களுக்குள் யுத்தம் நிறைவடையும்: கோத்தபாய ராஜபக்ஷ

இதானா நல்ல முடிவு.
_______________________________________________________
ஈழத்தமிழர்கள் துயர்துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்:ராகுல்காந்தி

இவருக்கு போட்ட துண்டெல்லாம் அவங்களுக்கு தருவாராமா.
_______________________________________________________
விடுதலைப்புலிகள் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும்: ராகுல்காந்தி

ஓட்டு விளுகலைன்னு ஏத்திக்கிட்டானோ? ஓவரா உளருது புள்ள.
_______________________________________________________
இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். :ராகுல்

அப்பா புரியாம கெடுத்தது போராது. இவரு கிளம்பிட்டாரு. எவ்வளவு பேரு உசிர குடுத்த ஒரு விடயம் இவருக்கு சாதாரணம்.
_______________________________________________________
விடுதலைசிறுத்தைகள் கட்சி திமுகவுடன்தான் கூட்டணி- எங்களுடன் இல்லை:காங்.

ஆரம்பிச்சிட்டாங்க. ஒண்ண ஒண்ணு கவுத்துகிட்டு மண்ண கவ்வும்.
_______________________________________________________
குடிகாரர் வாயில் புகுந்த விஷ பாம்பு: டாக்டர்கள் சிகிச்சையில் உயிர் பிழைத்தார்

பாம்புதான் பாவம். செத் போச்.
_______________________________________________________

3 comments:

Suresh Kumar said...

அரசியல்வாதிகள் தெய்வம் அல்ல: பிரியங்கா

சரியாச் சொன்னிங்க! மனிசங்க கூட இல்லன்னு அம்மாவும் பிள்ளையும் நிரூபிக்கிறாங்க.////////////

மிருகத்தை விட கேவலமாகிட்டாங்க

கலகலப்ரியா said...

பதவியும், அதிகாரமும் பண்ண வைக்கிற கூத்து இது.. ஹ்ம்ம்.. முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை.. முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லைன்னு சொல்லுவாங்க.. அதனால எல்லாம் கண்ணுக்கு முன்னாடி நடக்கும்..

பாலா... said...

இந்த ஆணவத்துக்காகவே அட்ரஸ் இல்லாம போகணும். பொம்மலாட்டம் நடத்துறாங்களா என்ன?