Wednesday, April 22, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 30

கம்யூனிஸ்ட் பேச்சு விடிந்தால் போச்சு:திமுக.

இதுக்கு ஏன்னா ஏத்தம் பாரு. பிரபாகரான பத்தி பல்டி அடிச்சி 24மணி நேரமாவல.
_____________________________________________________

தமிழ்ர்கள் மீது அனுதாபம் உண்டு; புலிகள் மீது அனுதாபம் இல்லை: பிரணாப்

யப்பா! தப்பிச்சங்கடா சாமி. பார்க்கரோம்ல அனுதாப பவரு. ஆப்பு நீ போடாத சோப்பு !
__________________________________________________
இந்தியாவின் பிரதமரை ஜெ. தீர்மானிப்பார்: ராமதாஸ்

ஆரம்பிச்சிட்டாரு வேலைய. அப்ப அவிங்க இல்லங்கறீங்களா?
______________________________________________________
ப.சிதம்பரம் நாளை வேட்புமனு தாக்கல்

கற்றோர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு! காங்கிரசுக்கு சென்றவிடமெல்லாம்................? சூதானமா இருந்துக்குங்க.
______________________________________________________
கள்ளுக்கடை திறப்பதில் தவறு இல்லை: ஈ.வி.கே.எஸ்.

நேத்து தொங்குக்கு எதிரா கள்ளு சங்கம் அறிக்கை. உடனே இவரு அங்க ஆதரவு. காங்கிரஸ் ஊத்திக்கும்னு புரிஞ்சு வேட்டி உருவ தயாராவுதுங்க தலைங்க.
______________________________________________________
நடிகை ஐஸ்வர்யாராயை சின்னமாக கேட்ட ’மனிதன்’!

அடங்கொக்காமக்கா. அடைஞ்சே தீருவேன்னு சபதம் போட்டாரோ?
______________________________________________________
இலங்கை பிரச்சனையை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம்: தமிழக அரசு தடுக்க கூடாது என கோரி மனு:விஜய டி.ராஜேந்தர்

ஆனை இறந்தால் ஆயிரம் பொன்னாம். ஈழத்தமிழன் சாவு இவனுகளுக்கு ஓட்டு! இப்படி பேசுறவனுவ யார்னாலும் செருப்பால அடிச்சா தடுக்கக் கூடாதுன்னு சட்டம் போடுங்கப்பு.
______________________________________________________
நானும் ஒரு மனித பிறவிதான். ஒரு மனித பிறவி இன்னொரு மனித பிறவியை மன்னிக்க இயலாது' பிரியங்கா காந்தி

சின்ன பிசாசு தயாராவுது பாரு. அம்மா எட்டடின்னா இது பதினாற‌டி. பரதேசி. மன்னிக்கத் தெரிஞ்சவந்தான் மனுசன். இல்லாட்டி இப்படி பேச மனுசனே இருக்க மாட்டான்.
______________________________________________________
மிருக வெறிகொண்டு ராணுவம் தாக்குகிறது:கருணாநிதி தைரியமானமுடிவெடுக்காதது வேதனைஅளிக்கிறது:ஜெ.

குறிக்கோள் வேறன்னு தெரியுதம்மணி. உங்க வேதனையும் புரியுது.
______________________________________________________
போர்நிறுத்தம் கோரி 23ல் பொதுவேலைநிறுத்தம்: கலைஞர்

இந்த வயசுல என்னா அல்லாடுது பாவம். பொம்பள லாரல் ஹார்டிங்க கிட்ட மாட்டிக்கிட்டு கந்தலாலா.
______________________________________________________
இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு தி.மு.க மட்டுமே வழிவகுத்தது. ஆர்.எம்.வீரப்பன்

மொத்தமா காலி பண்ணிக்கோ. கண்டுக்கிற மாட்டோம்னு சொல்லிட்டீங்களா என்னா? பேசுது பாரு டுபுக்கு.
______________________________________________________
ஈழப்பிரச்சனையை விட கூட்டணிதான் முக்கியம் என பாமகவும் மதிமுகவும் சென்றுவிட்டன: திருமா

தேர்தல் முடியறதுக்குள்ள பாதி பேர்த்த பைத்தியமாக்கிடுவாரு திருமா. ஆனாலும் நியாயந்தேன். இவரு கூட்டணிதான் முக்கியம்னு இருந்தவருதானே?
______________________________________________________
இலங்கை அதிபரின் சிறப்பு தூதர் இந்தியா வருகிறார்

பசிலு பச்சே தானே! ஏனோ? யக்கா மேக்கொண்டு என்னா பண்ணனும்னு கேக்கவோ?
______________________________________________________
பந்த்தில் கலந்து கொள்ளமாட்டோம்: வக்கீல்கள் சங்கம்

ஆமாமா. உசாரு. இதாஞ்சாக்கு கலாட்டா பண்ணாய்ங்கன்னு காக்கி புடிச்சி போட்டுடும்.
______________________________________________________
காங்.ஆதரவாக பிரசாரம்செய்த நடிகர்மீது செருப்புவீச்சு

காங்கிரசுன்னு காதில விழுந்தாலே காலில இருக்கிறது நாம்போறேன்னு கழண்டு போகுது. என்னா செய்ய?
______________________________________________________

9 comments:

இராகவன் நைஜிரியா said...

// இலங்கை பிரச்சனையை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம்: தமிழக அரசு தடுக்க கூடாது என கோரி மனு:விஜய டி.ராஜேந்தர்

ஆனை இறந்தால் ஆயிரம் பொன்னாம். ஈழத்தமிழன் சாவு இவனுகளுக்கு ஓட்டு! இப்படி பேசுறவனுவ யார்னாலும் செருப்பால அடிச்சா தடுக்கக் கூடாதுன்னு சட்டம் போடுங்கப்பு.//

தலையை சிலுப்பிகிட்டு ஆட்டம் காட்டவா...

அய்யா வீராச்சாமி, இது உங்க சினிமா இல்ல, ஒரு ஹீரோ 100 பேர அடிக்க...

இராகவன் நைஜிரியா said...

// கம்யூனிஸ்ட் பேச்சு விடிந்தால் போச்சு:திமுக.

இதுக்கு ஏன்னா ஏத்தம் பாரு. பிரபாகரான பத்தி பல்டி அடிச்சி 24மணி நேரமாவல.//

வயசாடிச்சு அப்படின்னு நேத்து நான் போட்ட பின்னூட்டம் தான் இதுக்கும். வர ஞாபகமறதி அதிகமாயிட்ட போகுது பெருசுக்கு

இராகவன் நைஜிரியா said...

// இந்தியாவின் பிரதமரை ஜெ. தீர்மானிப்பார்: ராமதாஸ்

ஆரம்பிச்சிட்டாரு வேலைய. அப்ப அவிங்க இல்லங்கறீங்களா? //

உள்குத்து அப்படின்னு சொல்லுவாங்க இல்ல, அதுதானா இது..

vasu balaji said...

/வயசாடிச்சு அப்படின்னு நேத்து நான் போட்ட பின்னூட்டம் தான் இதுக்கும். வர ஞாபகமறதி அதிகமாயிட்ட போகுது பெருசுக்கு//

வாங்க இராகவன் சார். நல்லாச் சொன்னீங்க.அது நம்மளுக்கில்ல ஞாபகமறதின்னு தினமொரு பிட்ட போடுது.

vasu balaji said...

உள்குத்து அப்படின்னு சொல்லுவாங்க இல்ல, அதுதானா இது..


அதேதான்.

கிருஷ்ணா said...

நம்பியார் கொழும்பில் 3 நாள் தங்கியிருந்துவிட்டு இந்தியாவுக்கும் சென்று சிலரைச் சந்தித்தாகவும் அதன்பின்னரே அவர் ஐநாவுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அங்கும் இந்தியாவின் பின்னணியா???

vasu balaji said...

சந்தேகமில்லாமல். என்ன சாபக்கேடோ, நாராயணன், மேனன், நம்பியார் என்று ஒரு கூட்டமே இருக்கிறது.

கலகலப்ரியா said...

இவங்கள எல்லாம் நம்பி யார்?

vasu balaji said...

/இவங்கள எல்லாம் நம்பி யார்?/



அஃகஃகா. பிரமாதம். சரியா சொன்னீங்க.