Tuesday, April 21, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 29

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா இறுதி கெடு விதிக்க வேண்டும்: கலைஞர்

ஏன். ஏப்ரல் 14 போய் ஒரு வாரமாச்சே? அடுத்த கெடு சொல்லாம விட்டாங்களா?
___________________________________________________________
விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு; அதன் தலைவர் போர் குற்றவாளி என்கிறார் மன் மோகன் சிங்

சிங்கு. தல்பா கட்டியிருக்கோம். காதுல பூ சுத்த முடியாதுன்னு தான எங்களுக்கு சுத்துறீரு. பியாந்த் சிங்க ஆதரிச்சவங்க போதிசத்துவரா? சொல்லிட்டு ஊரு பக்கம் போயிருவ?
______________________________________________________________
கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். இப்படிப்பட்ட ராமதாஸ், முதல்வர் கருணாநிதியை விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்.: ஸ்டாலின்.

அய்யய்யோ அண்ணானு கனிமொழி பதறி போராங். பாருங்ணோவ்.
_________________________________________________________
முதல்வர் கருணாநிதிக்கு தேர்தல் பயம்: டி.ராஜா

உங்கள் மாதிரி ஜெயிச்சா பதவி இல்லன்னா போராட்டக் குடைச்சல்னு பொழுது போவாதே சாமி.
________________________________________________________
உண்டியல் குலுக்கியவர்கள் கரன்சி எண்ணுகிறார்கள்: கம்யூ. கட்சி மீது இளங்கோவன் தாக்கு

உண்டியல்ல கரன்சி விழாம கல்லு மண்ணா விழும். எண்ணாம என்ன பண்ண?
_________________________________________________________
சாதனைகளை சொல்லி காங்கிரஸ் வாக்கு கேட்கவில்லை: என்.வரதராஜன்

நக்கல பாரு. நாட்ல யாரும் செருப்பு போடக்கூடாதாக்கும். எல்லாரும் எறிஞ்சா வாங்குறது யாரு?
__________________________________________________________
எம்பி பதவியை அன்புமணி ராஜினாமாசெய்யாததுஏன்?

அவருக்கு தெரியாதாம். அப்பாவ கேக்கட்டுமாம். அப்பிடியே கனிமொழி ராஜினாமா கடிதம் குடுத்தாங்களான்னும் சொல்லட்டுமாம். எப்படி வசதி?
__________________________________________________________
மாயாவதியுடன் ஜெ.வை ஒப்பிடக்கூடாது:பகுஜன்சமாஜ்

மனுசன் இருக்கிற இருப்பில இதான் பண்றாங்களாக்கும். அங்க கன்ஷிராம், இங்க எம்.ஜி.ஆர் பண்ண பெரிய தப்புன்னு தெரியாதாக்கும்.
__________________________________________________________
தங்கபாலுவுக்கு எ‌திராக‌பிரசார‌ம்:க‌ள் இயக்க‌ம்அ‌றி‌வி‌ப்பு

மப்பு கூட துப்புதே தொங்கு. இப்படியா நாறப்பொழப்பு?
_________________________________________________________
வைகோவின் வழக்காடல்:நாஞ்சில் சம்பத் விடுதலை

இதானா? முள்ளு முள்ள எடுக்கறது?
________________________________________________________
உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

யம்மாடி. சீன் போடாம நிஜம்மா வருத்தம்னா நானும் உக்கார்ரேன்னு ஒரு பிட்ட போட்டா முதுகு வலி முட்டிக்கால் வலி எல்லாம் காணாம போய் அய்யகோ! சொக்கு கனிமொழிய காப்பாத்துன்னு நிஜம்மா கால்ல விழமாட்டாரா? "காட்டிக் கொடுத்தார் கலைஞர்! காப்பாத்தி விட்டார் கனிமொழினு" வரலாறு பேசும்ல?
________________________________________________________
சோனியாகாந்தியிடம் பேசுவதாகவும், போர் நிறுத்தம் பற்றி உரிய நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என்றும், முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏஞ்சாமி. சோனியாகாந்தியால இதெல்லாம் பண்ண முடியும்னா அப்போ சிங்கு, ஆப்பு எல்லாம் டம்மி. மம்மி தான் எல்லாம்னு வருதே? அப்டிதானா?
__________________________________________________________
போரை நிறுத்த சோனியா மூலம் முயற்சி: சுதர்சனம்

தேர்தல்லாம் முடியட்டும். இதுக்கென்னா அவசரம். ?
___________________________________________________________
மீட்பு பணிகள் முடிந்ததும் பிரபாகரன் மீது தாக்குதல்: உதய நாணயகரா

சடலத்தை எல்லாமா? தினம் புளுகுறவனுக்கு பேர பாரு.
____________________________________________________________
ஈழத்தில் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள்:அமெரிக்கா

அடங்கொய்யாலே? உன்ன அதானே கெஞ்சிண்டிருக்காங்க. சாவடிக்கரவன் உங்க சிடிசன் தான? நீ யார கெஞ்சுற?
__________________________________________________________
பாமகவும், மதிமுகவும் ஈழத்தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டது:திருமா

முதல்ல அடிச்சவன் போலீஸ்ல புகார் குடுக்கிறா மாதிரி. யார்னாலும் உங்களுக்கு அடுத்து தான். போட்டியே இல்லை.
________________________________________________________
நான் பிரபாகரனை வெறுக்கவில்லை: பிரியங்கா காந்தி

எதுக்கும் ரெண்டு நாள் போகட்டும். இன்னைக்கு இப்படி சொல்லிட்டாங்கனு இருக்க நாளைக்கே நான் அப்படி சொல்லலன்னு வந்தா நாங்களே கேனனு திட்டிக்க வேண்டி இருக்கு. சகவாசம் அப்படி.
_________________________________________________________
சோனியாவின் முகத்தில் விழிக்கமுடியாத நிலை:லாலு

அந்தம்மா மக்கள் முகத்தில் விழிக்க முடியாத நிலை வரும்.
________________________________________________________

12 comments:

கிரி said...

நல்லா நறுக் நறுக்குன்னு கேட்கறீங்க

Suresh Kumar said...

நறுக்கு நல்லா இருக்கு

இராகவன் நைஜிரியா said...

//கொல்லைப்புறம் வழியாக எம்பியாக்கும் வழக்கத்தையே அவர் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார். இப்படிப்பட்ட ராமதாஸ், முதல்வர் கருணாநிதியை விமர்சிப்பதற்கு தகுதி இல்லாதவர்.: ஸ்டாலின்.

அய்யய்யோ அண்ணானு கனிமொழி பதறி போராங். பாருங்ணோவ்.//

இதை அப்படியே சினிமா பாணியில கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். சூப்பரா இருந்துச்சுங்க..

இராகவன் நைஜிரியா said...

//முதல்வர் கருணாநிதிக்கு தேர்தல் பயம்: டி.ராஜா

உங்கள் மாதிரி ஜெயிச்சா பதவி இல்லன்னா போராட்டக் குடைச்சல்னு பொழுது போவாதே சாமி.//

வயசாடிச்சுங்க இல்ல... இனிமே எல்லாம் போராட்டத்தில இறங்க முடியுமாங்க.

அ. நம்பி said...

//அந்தம்மா மக்கள் முகத்தில் விழிக்க முடியாத நிலை வரும்.//

வரவேண்டும்; விரைவில் வரவேண்டும்.

நிச்சயம் வரும்; விரைவில் வரும்.

பாலா... said...

வாங்க கிரி. நன்றி

பாலா... said...

நன்றி சுரேஷ்.

பாலா... said...

/இதை அப்படியே சினிமா பாணியில கற்பனைப் பண்ணிப் பார்த்தேன். சூப்பரா இருந்துச்சுங்க../

இஃகிஃகி.

பாலா... said...

/வயசாடிச்சுங்க இல்ல... இனிமே எல்லாம் போராட்டத்தில இறங்க முடியுமாங்க./

வாயாலயே போராடுவார்ல. வங்கொடுமையா இருக்கு இந்தாளு உளறல்.நன்றி இராகவன் சார்.

பாலா... said...

வாங்க நம்பி சார். வணக்கம். நன்றிங்க‌

JesusJoseph said...

நல்லா இருக்கு - அனால் ஒரு பிரயோஜனமும் இல்லை :(

karthi said...

மருந்து இற‌ங்கிடுச்சி. யார்பா அங்க கவலைப் பட்ட முந்திரி. இப்போ சந்தோஷமா? தலீவா சொக்கு துவைச்சி காய போட்டுச்சோ? நோண்டி நோண்டி கேட்டது கனிமொழி தானே?

Ithu onnu podhumga avanungalukku. Ellam poruki pasanga, atleast neengalavthu kekureengale Mr.Pamaran.