Monday, April 20, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 28

பிரபாகரனை எதிர்க்கிறேன். ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்: ஜெ

ஆடு பகை! குட்டி உறவு.
____________________________________________________
‘’பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர். நல்ல தீர்ப்புக்காக, உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் விடுதலைப்புலிகள்: கலைஞர்

முதுகு வலி மருந்து அதிகமா சாப்டாரா? இல்ல நமக்கு தான் கண்ண கட்டுதா?
____________________________________________________
பிரபாகரன் பற்றி கருணாநிதி கூறியது அவரது சொந்த கருத்து:காங்.

மத்ததெல்லாம் காங்கிரஸ் சொல்லிக் குடுக்கிறதா?
____________________________________________________
’’கருணாநிதி ஒரு சாணக்கியர். எப்போது எதைச் சொல்ல வேண்டும் என்று அவருக்கு தெரியும்: டக்ளஸ் தேவாநந்தா

இதுக்கு பேரு சாணக்கியம். தூ. பாம்பின் கால் பாம்பறியும் இல்லயா டக்ளஸ் கோடாலிக் காம்பு?
____________________________________________________
எமது நண்பர் கருணாநிதி,பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே:கவலைப்படுகிறார் இலங்கை அமைச்சர்

அட ஏங்க கவலையெல்லாம் பட்டுகிட்டு. இந்த பிலிமெல்லாம் நாம பாக்காததா?
____________________________________________________
’ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது.': கருணாநிதி

மருந்து இற‌ங்கிடுச்சி. யார்பா அங்க கவலைப் பட்ட முந்திரி. இப்போ சந்தோஷமா? தலீவா சொக்கு துவைச்சி காய போட்டுச்சோ? நோண்டி நோண்டி கேட்டது கனிமொழி தானே?
____________________________________________________
ராஜீவ்காந்தி மறைந்த இடத்தை எப்படி மறக்க முடியும்:கலைஞர் பேட்டி

முடியுமாய்யா. பாதில ஊட்டுக்கு அனுப்பின இடமாச்சே. இல்லாட்டி மறந்து போய்ருக்கும்.
____________________________________________________
ஈழம் பற்றிய கவலை இல்லை:குடும்பம் பற்றிய கவலைதான் இருக்கிறது:அன்புமணி குற்றச்சாட்டு

அங்க பொண்ணு மாட்டி விட்டிச்சி இங்க புள்ள. அப்பனுக்கு ஆப்பு வெக்கறதுக்குனே இருக்காங்க.
____________________________________________________
மின்சார நாற்காலியில் அமரவைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்; தாய் நாட்டிற்காக கழுத்தையும் கொடுப்பதற்கு தயார்: மஹிந்த

அப்போ கூட நாற்காலிய விடமாட்டான். பேரப்பாரு. எடுக்கிறது பிச்ச. பேரு ராஜ எச்ச!
____________________________________________________
ஸ்லம்டாக் பட சிறுமியை அவரது தந்தையே 1 - 1/2 கோடிக்கு விற்க முயற்சி

கோடீசுவரனாக இவரு புதுசா வழி கண்டு பிடிச்சாரா? செருப்பால அடி. விட்டா பொண்ணு வாங்கினா ஆஸ்கார் இலவசம்னு சொல்லுவான் போல.
____________________________________________________
பாகிஸ்தான் ஆபத்தில் இருக்கிறது: முஷாரப்

இதுல அந்த எச்சக்கு ஒத்தாசை. கெடுவான் கேடு நினைப்பானாம்.
____________________________________________________
தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்க சட்டம் இயற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

கள்ள வாக்களிக்க கேட்டாங்களோ?
____________________________________________________
இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்

அன்பு மணி பதவி விலகறதுக்கு முன்னயும், அம்மையார் அணியில இணையறதுக்கு முந்தியுமிருந்தே சீமான் இதத்தான சொன்னாரு. இப்போதான் இவரு கண்டு பிடிச்சாராமா?
____________________________________________________
பிரபாகரனுக்கு 24 மணி நேர கெடு: ராஜபக்சே

அதுக்குள்ள பின்னி பெடலெடுக்கணுமா? பண்ணுவாங்கப்பு. நோ மௌத் டாக். ஒன்லி ஹேன்ட் டாக்.
____________________________________________________
பிரபாகரனிடம் ஒரு மணி நேரமாவது போர்நிறுத்தம் செய்யுமாறு கோர முடியுமா? ஜனாதிபதி சவால்

உன்கிட்ட கோரினதுக்கு பதில் என்னாடா வெண்ண! நரிக்கு பொறந்த நாப்பய. சரின்னு இருந்தா இவரு வந்து நோவாம நோம்பு கும்பிட்டு போவாரு.
____________________________________________________

9 comments:

பழமைபேசி said...

கடைசி ஒன்னுக்கு முதல் மதிப்பெண்!

கலகலப்ரியா said...

ம்ம்.. நல்லா இருக்குங்க சார்..

பாலா... said...

/கடைசி ஒன்னுக்கு முதல் மதிப்பெண்!/

நன்றி பழமை.

பாலா... said...

/ம்ம்.. நல்லா இருக்குங்க சார்../

:">. நன்றிங்க ப்ரியா.

Subbu said...

இதுக்கு பேருதான் போட்டு தாக்குரதா? :))

dheena said...

super mamu

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு பாஸ்

பாலா... said...

நன்றி சுப்பு, தீனா.

பாலா... said...

நன்றி கணேஷ்