Friday, April 17, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 25

எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார்:ராமதாஸ் மீது கலைஞர் தாக்கு

நீங்க தாண்டாத தோண்டாத குழி உண்டா? நம்ம கூட்டணில இருந்தா பழி. எதிர் கூட்டணின்னா குழி.
__________________________________________________________
ஜெ.மீது வழக்கு ஏன்:கலைஞர் விளக்கம்

இன்னொரு கோர்ட் கலவரத்தை தூண்டன்னு அந்தம்மா விளக்கும்.
__________________________________________________________
குறும் படங்கள் அல்ல;குறும்புப் படங்கள்:கலைஞர்

இரும்பு மனசுக்காரங்க கூட பார்க்க முடியாதது இவருக்கு குறும்புப் படம். ஏத்தம்டி. வேற என்னா?
__________________________________________________________
கூட்டணி மாறினால் சந்தர்ப்பவாதியா?: ராமதாஸ்

இல்லவே இல்லை. தியாகம். நீங்க பண்ற பலதுக்கு இன்னும் வார்த்தைகள் கண்டு பிடிக்கப் படவே இல்லை.
__________________________________________________________
பாமக மரியாதை இழந்து விட்டது: துரைமுருகன்

இவங்க கூட்டணிக்கு வந்தா திரும்ப வந்துடும். மரியாத பத்தி யாரு பேசற‌துன்னு ஒரு விவஸ்தை வேணாம்?
__________________________________________________________
மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான்: ராமதாஸ்

பாசமலர். பாத்துங்க பாஸூ. ரொம்ப ஊத்தினா சொத்துத் தகராருல வந்துடும்னு களத்தி விட்றுவாய்ங்க.
__________________________________________________________
40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: அன்புமணி

இல்லாட்டியும் அப்பா எப்படியும் மந்திரி பதவி வாங்கி குடுத்துடுவாரு செல்லம்.
__________________________________________________________
காந்திபோல்தான் மன்மோகன் சிங்: பிரியங்கா

ஏம்மா. காங்கிரச கலைக்கச் சொல்லிட்டாரா?
__________________________________________________________
தொண்டர் ஆவேசம்:அத்வானி மீது ஷூ வீச்சு

பாதணியடி பாதுகாப்புச் சட்டம் வருமா?
__________________________________________________________
தீவிரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து தப்பவிட்டதா ராணுவம்:மோடி மீது ப.சி. ஆவேசம்

அட அவங்க பக்ஸேய சொல்லலங்க. ஏன் டென்சனாவுறீங்க?
__________________________________________________________
பள்ளியில் செக்ஸ் கல்வி தேவையில்லை

கணக்கு வாத்தி, அறிவியல் வாத்தி, தமிழ் வாத்தி மாதிரி இத சொல்ல முடியாதே. சங்கடந்தேன்.
__________________________________________________________
4வது அணியால் பாஜகவுக்கு ஆதாயம்: பிரணாப்

பாதணியால் காங்கிரசுக்கு சேதாரம்.
__________________________________________________________
அப்பாவி பொதுமக்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

பூமியிலிருந்து.
__________________________________________________________
ஈழத்துல கேக்குறது ராஜபக்சே வேட்டு
இவனுங்கள்ளாம் கேக்குறது ஜனங்களோட ஓட்டு
சிங்களத்தான் என்ன அந்த சீக்கியந்தானென்ன‌
இளிச்ச வாயி தமிழனுன்னா இவங்களுக்கு வெண்ண..

(அச்சு அப்பட்டமா பழமதம்பிய பார்த்து அடிச்ச காப்பிதான். இஃகிஃகி)
____________________________________________________________

5 comments:

இராகவன் நைஜிரியா said...

// கூட்டணி மாறினால் சந்தர்ப்பவாதியா?: ராமதாஸ்

இல்லவே இல்லை. தியாகம். நீங்க பண்ற பலதுக்கு இன்னும் வார்த்தைகள் கண்டு பிடிக்கப் படவே இல்லை.//

அகராதியில இப்ப சந்தர்ப்பவாதம் என்ற வார்த்தைக்கு ராமதாஸ் என்று போட்டு இருப்பதாக நம்ப தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராகவன் நைஜிரியா said...

// மக்கள் சக்தி முழுவதும் அன்பு சகோதரி பக்கம்தான்: ராமதாஸ்

பாசமலர். பாத்துங்க பாஸூ. ரொம்ப ஊத்தினா சொத்துத் தகராருல வந்துடும்னு களத்தி விட்றுவாய்ங்க.//

நாரயணா தாங்க முடியலடா இவங்க தொல்லை..

பாலா... said...

வாங்க இராகவன் சார். வணக்கம். சரியாச் சொன்னீங்க‌

பழமைபேசி said...

எப்பவும் போல, நறுக்குன்னு இருக்குங்க பாலாண்ணே!

பாலா... said...

வாங்க!நன்றிங்க பழமை.