Wednesday, April 15, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 24

மூப்பனார் கொடுத்த உம்மால் வெல்ல முடியும் புத்தகத்திலிருந்து சில துளிகள்:கலைஞர்

உம்மாலா? உம்மாவாலா?
________________________________________
திமுகவை யாராலும் அழிக்க முடியாது: மு.கண்ணப்பன்

புதுத் துடைப்பம் நல்லாதான் கூட்டும். ஒரு வேளை தானே அழிஞ்சிடும்ங்கராரோ?
________________________________________
7 தொகுதிகளிலும் பாமக டெபாசிட்இழக்கும்:பொன்முடி

அதுக்குள்ள வாங்கியாச்சா?
________________________________________
ராமதாஸ் ஆரூடம் பலிக்காது: தங்கபாலு

எந்த கூமுட்ட சாமியாவது நரபலி குடுத்தா அசைக்க முடியாதுன்னு சொல்லிட்டானா? இவ்ளோ குடுத்திருக்கோம். நாம தோக்க மாட்டோம்னு நம்பிக்கையா தொங்கு?
________________________________________
என்னைக் கவர்ந்தது கம்யூனிசம் தான்: கலைஞர்

எப்போ சேரப்போறீங்க. அம்மா கட்சில கூட்டணி வைக்க இப்படி ஒரு பிட்டா என்னா?
________________________________________
அதிமுகவை ஏன் புறக்கணித்தேன் :நடிகர் கார்த்திக்

வடிவேலு உதாரே கௌரவமா இருக்கு. அடங்குங்க சார்.
________________________________________
வைகோவை எதிர்த்து ஏன் போட்டியிடுகிறேன்: நடிகர் கார்த்திக் விளக்கம்

அந்தாள பார்த்தா அவ்ளோ இளக்காரமா போச்சி. வேற என்ன?
________________________________________
உங்கள் ஓட்டுபணத்திற்கா?மனிதாபிமானத்திற்கா?: வைகோ

முதலாவது எங்களுக்கு தேவையில்ல. இரண்டாவது உங்கள் யாருக்கும் இல்ல.
________________________________________
எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார் தங்கபாலு: தாக்குகிறார் ராமதாஸ்

அட போங்க டாக்டரு. அவரு அம்மாதான் குதிருக்குள்ள இல்லன்னு சொல்லிட்டிருக்காரு.
________________________________________
நாளை பீகார் தேர்தல்: கண்டதும் சுட உத்தரவு

அய்யோ. மொத்தமா பங்கு போட்டு ஓட்டு அவங்களே போட்டுக்குவாங்களா? அப்ரமெப்படி ஓட்டு போட வெளீய வரது.
________________________________________
பெரும்பான்மை கிடைக்காவிட்டால்.... : பிரதமர்

வுடு ஜூட்.
________________________________________
தேர்தலுக்குபின் பாமகஅழிந்துபோகுமா:ராமதாஸ் பேட்டி

தொங்குக்கு ஜோசியம் சோன்னீங்களாம். உங்களுக்கு தெரியாதுங்களா?
________________________________________
மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்: நரேந்திர மோடிக்கு பிரியங்கா அறிவுரை

இதெல்லாம் நீங்க சொல்ல நாங்க கேட்டுகிரணும்னு தல எழுத்து. அம்மா படிச்சாங்களா கேளும்மா.
________________________________________
புலிகளை முற்றிலும் அழிப்போம்: சரத் பொன்சேகா

துள்ளுற மாடு பொதி சுமக்காது.
________________________________________
பாதுகாப்பு வலய பகுதி மீது அதிகாலை முதல் இலங்கை ராணுவம் தாக்குதல்

இதுக்கு பேரு ராணுவமா? இதான் தீவிரவாதம்.
________________________________________
ஈழமக்களுக்காக தேர்தலை தவிர்க்க நினைத்தேன்: திருமா

இப்பிடி பேசியே இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதயும் கெடுத்துப்பாரு இவரு. வேணாம் திருமா.
________________________________________
3 மணி நேரத்தில் 180 ஈழத்தமிழர் பலி

சமாதானம்தான் குடுக்க முடியல. கின்னஸ் சாதனையாவது குடுங்க வெள்ளச்சாமிகளா!
________________________________________
வவுனியா செல்கிறார் வாழும் கலை’ ரவிசங்கர்

டைமிங் சரியில்லயே சாமி!
______________________________________________________________

6 comments:

கலகலப்ரியா said...

//டைமிங் சரியில்லயே சாமி!//

ம்ம் இங்கயும் கொஞ்சம் டைமிங் தள்ளாடுதே.. :-?

பாலா... said...

அது எங்க தள்ளாடுது. ஒண்ணு வாஸ்தவம். வெறுப்புல எழுதினது. எழவெடுத்தவனுங்க எப்படி தின்னு தூங்கி மறுநாளும் வந்து இப்படி ஒரு பிழைப்புனு.

Nellaitamil.com said...

ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி...
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
ஓட்டளிப்பு பட்டை...
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

தளமுகவரி

nellaitamil

பாலா... said...

கலகலப்ரியாவுக்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

நறுக்குன்னுதான் இருக்கு>>>>

பாலா... said...

நன்றி ஞானசேகரன் சார்.