Monday, April 13, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 23

நான் எப்போதுமே காங்கிரசுக்கு விசுவாசியாக இருப்பேன்: திருமா

சிறுத்தை எல்லாம் இனிமே லொள் லொள்னு தான் கத்தும். திருமா நீ இரும்மா
________________________________________________________
வாக்குசாவடிகளை கைப்பற்றினால் 5 ஆண்டு சிறை

சபாஷ். சரியான தீர்ப்பு. ஜெயிச்சா தொகுதிய கைப்பற்றினோம்னு சொல்றதால 5 வருடம் பதவி.
_______________________________________________________
ஜெயலலிதாவிடம் மக்கள் சக்தி உள்ளது: ராமதாஸ்

அப்போ மருத்துவருக்கு சக்தி இல்லாம தான் அங்க போனாரு போல.
_______________________________________________________
வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறதா? தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பு

எத்தன எலக்ஷன்ல குடுத்திருகோம். வாங்கி இருக்கோம். தெரியராமாதிரி பண்ண கேனையா?
________________________________________________________
பாதுகாப்பு வலயத்தை நோக்கி இலங்கை ராணுவம் அதிகாலையில் எறிகணைத் தாக்குதல்

அடிக்கறதுன்னு ஆச்சி. இதுல அதிகாலை என்ன நடுராத்திரி என்னா? தூக்கம் பிடிக்கலைன்னு அடிக்கறானோ என்னாமோ?
_________________________________________________________
தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும்: ப.சிதம்பரம்

சம எருமை கூட தரமாட்டான். இத சொல்ல ஆரம்பிச்சதில இருந்து 10000 பேரு கிட்ட போய் சேந்தாச்சி. யாரும் மிஞ்சலன்னு ஆவுற வரைக்கும் இதே சொல்லிக்கலாம். உனுக்கு சிங்கு தான் சரி.
__________________________________________________________
2 நாள் போர் நிறுத்தம் அறிவித்தது இலங்கை அரசு

ஒரு காது குத்த ஒரு நாள்னு கணக்கா. கம்மினாட்டி.
___________________________________________________________
ஈழப்பிரச்சனை: சென்னையில் கி.வீரமணி ஆர்ப்பாட்டம்

இன்னும் கார்த்திக் கச்சி, சரத்குமார் கச்சி, ராஜேந்தர் கச்சி, ஓட்ட ஒடசல், இத்துப்போனது,போகாதது எல்லாம் தான் பாக்கி. இதேல்லாம் ஒரு பொழப்பா?.
________________________________________________________
புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவ நடவடிக்கையில் இந்தியா தலையிடமுடியாது:காங்கிரஸ்

இன்னும் இப்படியே கத விட்டா போற இடமேல்லாம், ஓட்டு இல்ல. செருப்புதான்.
_________________________________________________________

இலங்கையில் போர் நிறுத்தத்தை மீறிய ராணுவம்.

இவன் மீறாதது ஏதாவது இருக்கா?
_______________________________________________
எம்ஜிஆர் படத்துக்கு இலவச டிக்கெட்

பார்த்துக்குங்க பன்னாடைங்களா. இருக்கற பரதேசிங்களுக்கு ஓட்டு வாங்க துப்பில்ல. போன மனுசன காட்டி பொழப்பு நடக்கணும்.
__________________________________________________
பிரதமர் வேட்பாளர் தெரியாத அதிமுக கூட்டணி: ராசா

ஆமப்பு. அவங்களுக்கு தலையாட்டி பொம்ம இல்லல்ல? இந்த சிங்குக்கு ரோசம் வந்து நாம்போறேன்னு போனா அப்புறம் இருக்குடே உங்க கத.
________________________________________________________
2 நாளில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு: தங்கபாலு

ஏன். யோவ் போய்யா சீட்டும் வேணாம் ஓட்டும் வேணாம். உதை வாங்காம இருந்தா போதும்னு யாரும் வரலை போல.
________________________________________________________
சென்னையில் 580 சமூக விரோதிகள் கைது

அவ்ளோ பேருதானா? கச்சி ஆளுங்க ஒண்ணு கூட இருக்காதே.
_________________________________________________________
பாஜக ஆட்சி அமைக்க அதிமுக உதவும்: அத்வானி

பெர்சேய். போஸ்ட் குடுத்தா திமுக வே ஆதரிக்கும். ராமர் தான் பாலம் கட்டினார்னு ஒத்துக்குவானுங்கோ. என்னாங்கடான்னா அம்மா அடிச்ச பல்டி மட்டும் இனிக்குதோம்பாரு.
________________________________________________________

10 comments:

பழமைபேசி said...

இதுக்குத்தான் நறுக்குகவி!

பாலா... said...

இஃகிஃகி.நன்றி. உடம்பு தேவலாமா?

குசும்பன் said...

ஒன்னு ஒன்னும் சும்மா தெறிக்குது!

//உனுக்கு சிங்கு தான் சரி.//

அட்டிமேட்!

இராகவன் நைஜிரியா said...

நாலு வார்த்தைன்னாலும் சூப்பர் நறுக்..

தூள் கிளப்புங்க...

வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாதவர்களுக்கு, இதெல்லாம் உரைக்காது.

அ. நம்பி said...

//நான் எப்போதுமே காங்கிரசுக்கு விசுவாசியாக இருப்பேன்: திருமா

சிறுத்தை எல்லாம் இனிமே லொள் லொள்னு தான் கத்தும். திருமா நீ இரும்மா//

சிறுத்தை தேய்ந்து பூனையாகிவிட்டது என்று நினைத்தால்... வேறு ஏதோ ஆகிவிட்டதுபோல் தெரிகிறது. அப்படியே இருக்கட்டும்.

கலகலப்ரியா said...

யாருக்கும் சொரணை வர்ற மாதிரி இல்ல..

பாலா... said...

/குசும்பன் said...

ஒன்னு ஒன்னும் சும்மா தெறிக்குது!/
நன்றிங்க.

பாலா... said...

/நாலு வார்த்தைன்னாலும் சூப்பர் நறுக்..

தூள் கிளப்புங்க.../

வாங்க இராகவன் சார்.. நன்றிங்க.

பாலா... said...

/அப்படியே இருக்கட்டும்./
வாங்க நம்பி சார்.. அதான் சரி. இப்படியே இருந்துட்டா தேவல. திரும்ப சீறப்பாத்தா கேவலமா போய்டும்.

பாலா... said...

/ கலகலப்ரியா said...

யாருக்கும் சொரணை வர்ற மாதிரி இல்ல../

இவங்க நம்மள பத்தி இப்படிதான் நினைச்சிண்டிருக்காங்க. இல்லாட்டி இப்படி பண்ண முடியுமா.