Saturday, April 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 22

தமிழகம் முழுவதும் 14-ந் தேதி, இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்

அட பன்னாடையே! பேபர் கூட படிக்காதா இது. அவனுங்க 14-ந் தேதியோட கத முடிஞ்சதுன்னு சாவரானுங்க. இந்தாளு பிரார்த்தன செய்யனுமாம். அதுக்கு கூடவா நாளு. அதான் புத்தாண்டு ஜனவரின்னு மாத்தியாச்சில்ல?
___________________________________________________

அவர்களைப் பாராட்டுவதைப் போல அறிக்கை கொடுத்தால் தான் பிழைப்பு நடக்கும் - வருகின்ற வருமானமும் நிற்காமல் வரும்: அய்யா நெடுமாறன் குறித்து வீராசாமி.

உங்கள பத்தியெல்லாம் பக்ஸே சொன்னது சரிதான் போல. அப்பொ வருமானம் நின்னாதான் நீங்க ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்கிறதா. உண்டு கொழுத்த ஓநாய்க்கு பேச்சப் பாரு.
___________________________________________________
விடுதலைப் புலிகள் பற்றி தி.மு.க.வுக்கு எத்தனையோ கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் முதல்-அமைச்சர் பெருந்தன்மையோடு ஒரு தமிழன் என்ற உணர்வோடு பேசியிருக்கிறார்.: அதே கூமுட்டைதான்

பங்காளிகிட்ட சோசியம் கேக்கப் போனா பாதி ராத்திரில மரணம்னு சொல்லுவான்னு ஒரு சொலவட உண்டு. இவரு செத்தா தங்கத்துல சவப்பெட்டி செய்யணும்னு கேட்டா இவரு ஆஹா என்னா பெருந்தன்மைன்னு கொஞ்சுவாரு.
___________________________________________________
அப்போது வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு -கருணாநிதி பேசிய பேச்சுக்கு விஷ விதை ஊன்ற முற்படுபவர்களை தமிழகம் நன்றாகவே புரிந்து தான் வைத்துள்ளது: அந்தாளேதான்.

இது நாள் வரைக்கும் எத பேசணுமோ அதப் பேசாம இருக்கிற உங்களையும் புரிஞ்சிதான் இருக்கு.
___________________________________________________
வன்னி நிலை: ராஜபக்சேவுடன் பான் கி மூன் பேச்சு

என்னா ராசா? லெபனான் எப்படி இருக்கு. ஏதாச்சும் வேணுமா? சட்டு புட்டுன்னு முடி ராசா. ஆளாளுக்கு குடைச்சல் குடுக்கறாங்கோன்னு பேசினாரோ?
___________________________________________________
தமிழினத்தின் வாழ்வுக்காக, சுயமரியாதைக்காக, இனமானத்திற்காக, ஓர் ஆட்சியை கேடயமாக ஏன் முன்நிறுத்தக் கூடாது? :ராம்தாஸ்

அட ரென்டு மந்திரி பதவிய ஏன் முன்நிறுத்தக் கூடாது. அம்மா கூட பேசி அக்ரிமென்ட் போட்டப்புறம் தானே இனிமேலும் இருந்தா விரட்டிடுவாங்கன்னு வந்தது.
___________________________________________________
காங்கிரசை செயல்பட வைக்க வேண்டிய விசை உங்களிடம் தான் இருக்கிறது. அதை ஏன் பயன்படுத்தக் கூடாது?: அவரேதான்.

தட்டிக் கேட்க ஆளில்லன்னா தம்பி சண்டபிரசன்டன்னு யாரோ சவுன்ட் விடறாங்க.
___________________________________________________
ஆறாத புண்ணாக இருக்கும் ஈழப்பிரச்சனை:ஜி.கே.மணி

நீங்கள்ளாம் சொறியற வரைக்கும் அது ஆறாது.
___________________________________________________
அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லை எல்லா கட்சியினரும் மந்திரமாக கொண்டிருக்கிறார்கள்.: ராமதாஸ்

மாறி மாறி கலந்தாலும் சாக்கடை தானே! இதுல நான் மட்டுமா சாக்கடைன்னு பஞ்சாயத்து வேற.
___________________________________________________
திமுகவில் கூட்டணி தர்மம் இல்லை:ராமதாஸ்

அதானா? அம்மா அத விட நிறைய தர்மம் பண்ணாங்க போல. தாவிட்டாரு.
___________________________________________________
விஜயகாந்தின் அந்தரங்கத்தை புத்தகமாக எழுதி வெளியிடுவேன்:நடிகர் ராமராஜன்

நடைபாதையில தான் கிடைக்குமா. போலீஸ் புடிக்காதா? அந்தாளு பதிலுக்கு எழுத மாட்டாரா கேட்டுக்கிருங்க. இருக்கிற கூத்தில இவனுங்க கூத்து வேற.
___________________________________________________
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தற்போது, ஜேர்மனியின் சர்வதிகாரி அடல்ப் ஹிட்லரின் நிலையில் :அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா

ஆமாம்டா. அது மட்டுமா. நீங்கதான் புத்தராம். புத்தர் நான் போறேன்னு போய்ட்டாரம் கண்டியில.
___________________________________________________
1984ன் டெல்லி கலவரம்: 2009ல் மன்னிப்பு கேட்கும் டைட்லர்!

தலீவா. கண்டுக்கினியா. மனசு தான் வோணும்.
___________________________________________________

(எனக்கொரு சந்தேகம்: பொதுவாவே வட நாட்டில தலப்பா கட்டுறது வழக்கம். அதிலயும் சீக்கியர்களுக்கு அது ரொம்ப முக்கியம். தலப்பால தான் தைரியம் இருக்கோ? இல்ல தலப்பா கட்டின தலைல மிளகாய் அரைக்க முடியாதுன்னு தான் அவங்களுக்கு நடக்குதோ? நம்ம தலைங்களுக்கு நல்லா பொடுவா போன அம்மி மாதிரி இருக்கறதால தான் ஆருன்னாலும் அரைச்சிட்டு போராங்களோ? ஏன் சந்தேகம்னா வ.உ.சி, பாரதி எல்லாம் தலைப்பா கேஸ் தான். அதான் தில்லுகார ஆளுங்களான்னு டவுட்டு.)

7 comments:

ஆ.ஞானசேகரன் said...

முதல் வார்த்தை நச்ச்ச்ச்ச்ச்

பழமைபேசி said...

முதல் ஒன்னு, காலத்தே சொன்னகை!!

கும்மாச்சி said...

நல்லா எல்லோர் பேச்சுக்கும் பின்னூட்டம் போடறிங்க தலைவா, நன்றாக இருக்கிறது.

vasu balaji said...

/நல்லா எல்லோர் பேச்சுக்கும் பின்னூட்டம் போடறிங்க தலைவா, நன்றாக இருக்கிறது./

இஃகிஃகி. நன்றி

vasu balaji said...

/ ஆ.ஞானசேகரன் said...

முதல் வார்த்தை நச்ச்ச்ச்ச்ச்/
// பழமைபேசி said...

முதல் ஒன்னு, காலத்தே சொன்னகை!!//

படிக்கவுமே பக்குன்னு ஆச்சி. ஆரு கேட்டா இந்த பகிடியெல்லாம். அதான்.

சவுக்கடி said...

வழக்கம் போல அருமை!
இன்னொன்று...!

தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குச் செய்த இரண்டகத்திற்கு - பச்சைத் துரோகத்திற்குத் - தண்டனையாக...

இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து...

அதனால்
மனமொடிந்து கருணாநிதி 'பொசுக்கென்று' போய்விட்டால்...

அந்த ஆள் செய்த இரண்டகத்தை நினைத்து அவ் வுடலில் யாரும் துப்பி இழிவு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!

vasu balaji said...

/இந்தியாவின் 15ஆம் நாடாளு மன்றத்திற்கான தேர்தலில் கருணாநிதி படு தோல்வியைச் சந்தித்து அதன் விளைவுகளுள் ஒன்றாகத் தமிழ்நாட்டில் கருணாநிதியின் சிறுபான்மை அரசு கவிழ்ந்து.../
இது தான் கடைசி சாதனையாக இருக்கப் போகிறது. என்றும் மாறாக் கறையுடன் உதய சூரியன் அஸ்தமிக்கலாம். மற்றது அவருடய குறளோவியம் நினைவு படுத்துவதை விட பெரிய தண்டனை என்ன இருக்க முடியும். 'இன்னா செய்தாரை...நன்னயம் செய்வோம்.