Wednesday, April 8, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 20

அழகிரியை கண்டு எனக்கே பயமாக இருக்கிறது: கலைஞர்

அது எங்களுக்கு எப்பவோ தெரியுமே.
---------------------------------------------------------------------
3லட்சம் ஈழ தமிழர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து: ஒட்டு மொத்த தமிழர்களும் குரல் கொடுங்கள்:ஜெ.

ஏங்க‌. நிஜ‌மாங்க‌. என‌க்கு க‌ண்ண‌ க‌ட்டுதுங்க‌. நீங்க‌ ஈழ‌த் த‌மிழ‌ர்னு சொல்லிட்டீங்க‌ளா? நாளைக்கு பிழைதிருத்தம் வராதுங்களே.
---------------------------------------------------------------------
ஓட்டுப்போடுவதற்கு மட்டுமே நாங்கள்பிறக்கவில்லை: ஏன் நாடாளக்கூடாது:சீறும்திருமா

இல்லையா பின்ன. பேசாம திமுகல கலந்துடலாமே.
---------------------------------------------------------------------
இலங்கை தமிழர்களை காப்பாற்றுங்கள்:மன்மோகன், சோனியா, பிரனாப், ப.சிதம்பரத்திற்கு கலைஞர் தந்தி

ஃபோன் பிசிங்களா. ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பலாமே.
---------------------------------------------------------------------
இனவெறி பிடித்த சிங்கள ராணுவத்தளபதி கொக்கரிக்கிறார்: முதல்வரே, பிரதமரே ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்:ராமதாஸ்

அன்புமணி ராஜினாமா பண்ணியாச்சே. இனிமே இப்படி சவுண்ட் விடலாம்.
---------------------------------------------------------------------
சிதம்பரம் மீது ஷூ வீசிய பத்திரிகையாளர் விடுவிப்பு

பின்ன‌. இது என்ன‌ த‌மிழ்நாடா. தேபாச‌ ல‌ உள்ள‌ போட‌. மிஸ்ட‌ர் தொங்கு. ஒய் சைல‌ன்ட்?
---------------------------------------------------------------------
ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுங்கள்: புலிகளுக்கு ராஜபக்சே எச்சரிக்கை

ஏன். இனியும் க‌ட‌னுக்கு ஆயுத‌ம் இல்ல‌ போன்னுட்டாங்க‌ளா ராஜ‌எச்ச‌?
---------------------------------------------------------------------
போர்நிறுத்தம் கோரி கலைஞர் தலைமையில் பேரணி

ஃபுல்லா அரிக்குது த‌லிவா.
---------------------------------------------------------------------
இனவெறி பிடித்த சிங்களராணுவத்தளபதி செய்திருக்கும் சூழ்ச்சி:ராமதாஸ்

உசாரு கை நைனா. நாள‌ பின்ன‌ தாவ‌ வ‌ச‌தியா யார் சூழ்ச்சினு பேசிட‌ மாட்டாரு.
---------------------------------------------------------------------
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வி.சி.டிக்களை பறிமுதல் செய்ய உத்தரவு:நரேஷ்குப்தா

ந‌ல்ல‌ மாறுத‌ல். ம‌க்க‌ள் தான் புலிக‌ள்னு ஒத்துக்கிட்டாங்க‌னு எடுத்துக்கிற‌தா. த‌ல‌ கீழா 'தொங்கி'னாலும் கைக்கு டாடாதான்.
---------------------------------------------------------------------
ஈழத்தமிழருக்காக அரசியலில் மதிமுக இழந்ததுஅதிகம்

எத்தினி சீட். நாள‌ பின்ன ஈழ‌ம் ம‌ல‌ர்ந்தா ஆளாளுக்கு போய் ப‌ங்கு போடாம‌ இருந்தா ச‌ரி.
---------------------------------------------------------------------
ஏப்ரல் 14க்குள் புலிகளை அழிப்போம்:இலங்கை பிரதமர்

உங்காளு சொன்ன‌ க‌ண‌க்குல‌ புலி மைன‌ஸ்ல‌ ஓடுது. அதென்னாய்யா 14 உங்க‌ளுக்கு. வ‌ருச‌ம் சொல்லுடா நாயே.
---------------------------------------------------------------------
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசை எதிர்த்து பிரசாரம்: பா.ம.க

ஒட்ட‌ ஒட்ட‌ உறிஞ்சிட்டு இப்போ வ‌ருதுய்யா வீர‌ம்.
---------------------------------------------------------------------
ஈழத்தமிழருக்காக திமுக நடத்தும் பேரணியில் காங்.பங்கேற்பு: தங்கபாலு

ஓட்டுக்காக‌வா? இல்ல உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு யாராவ‌து பேசினா போட்டு குடுக்க‌வா?
---------------------------------------------------------------------------------

5 comments:

கிருஷ்ணா said...

மிஸ்டர் “தொங்கு” மேல உங்களுக்கு ரொம்பத்தான் பாசம்.. புல்லரிக்குது :))

பழமைபேசி said...

முதல் ஒன்னு, வெகு அலாதி!

பாலா... said...

வாங்க கிருஷ்ணா. :)). ஆமாம் பின்ன. உங்களுக்கு புல்லரிக்குது. எனக்கு எரியுது.

பாலா... said...

/முதல் ஒன்னு, வெகு அலாதி!/

இஃகிஃகி.

பாலா... said...

அனைவருக்கும் நன்றி