Thursday, April 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 19

ஆட்சியில் சோனியா தலையிடுவதில்லை: பிரதமர்
நடத்தறதே அவிங்க தானே. அப்புறம் என்னா தலையிடுறது.
------------------------------------------------------------------
போர் நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம்: சோனியா
இன்னும் யாரும் மிஞ்சவில்லை என்ற தகவலுக்காக வெயிட்டிங்கு.
------------------------------------------------------------------
திமுக செய்தது நாடகம்தான்: அடித்துச்சொல்லும் ராமதாஸ்
நீங்க‌ அடிச்ச‌து கூத்தா. போங்க‌டா.
------------------------------------------------------------------
இலங்கை பிரச்சனையில் ராமதாசின் பேச்சுக்கள் போலியானது:கலைஞர்
அய்ய‌கோ மட்டும்தான் சோனியாவா(சொக்கு)
------------------------------------------------------------------
போலீஸ் பாதுகாப்புடன் சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறிய தங்கபாலு
தோடா? ஏன். அஹிம்சாவ‌ழில‌ பேச்சுவார்த்தை ந‌ட‌த்த‌லாமே? கொய்யாலே.
------------------------------------------------------------------
வங்கிகளையும் ஏடிஎம்களையும்தான் சிதம்பரம் திறந்துள்ளார்: விஜயகாந்த்
அப்போ ஓட்டுக்கு குடுக்கற காச அக்கவுண்ட்ல போட்றுவாய்ங்களா?
------------------------------------------------------------------
பிரதமர் வேட்பாளராக ஜெ.வை ஏற்க தயார்: பாமக
அதிமுக‌கு போயாச்சில்ல‌. தின‌ம் இப்ப‌டி ஏதாவ‌து சொல்லி அம்மாவ‌ குஷிப‌ண்ண‌த்தான் வேணும்.
------------------------------------------------------------------
திமுக சின்னத்தில் போட்டியிடபோவதில்லை: திருமா
முத்துக்குமார்ல‌ இருந்து முக‌ம் தெரியாத‌ குழ‌ந்தை உயிரெல்லாம் விலையா குடுத்து வாங்கின‌ சீட்டாச்சே. இந்த‌ ரிஸ்க் எடுக்க‌ முடியுமா?
------------------------------------------------------------------
சத்தியமூர்த்தி பவனில் 400க்கும் மேற்பட்ட விருப்ப மனு விநியோகம்
சும்மா கிடைச்சா சித்தப்பாக்கு ரென்டுன்னு வாங்கறது தான். இதாவது கணக்கு சரியா சொல்லுவீங்களா?
------------------------------------------------------------------
சரணடையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு புலிகள் செவிமடுக்கவில்லையாம்: ஜனாதிபதி

போரை நிறுத்துன்னு அலறினாலும் இவரு செவி மடுக்க மாட்டாரு.
-------------------------------------------------------------------
வெற்றி நமதே: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கலைஞர்
அபசகுனமா தோத்து போய்டுவோம்னு சொல்லிண்டா வெளியிடமுடியும். முகூர்த்த நேரத்துல வெளியிட்டாச்சா?
------------------------------------------------------------------
வேண்டாதவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: பாஜக
வேண்டினா பாயாதுங்க‌ளா?
------------------------------------------------------------------
காங்கிரஸ் கட்சியும் கெட்டுவிட்டது: விஜயகாந்த்
தோடா. அய்யா போற‌ போக்க பார்த்தா எல‌க்ஷ‌னுக்க‌ப்புற‌ம் க‌ல‌க்ஷ‌ன் போல‌.
------------------------------------------------------------------
ராமதாசை ஜெ. கைது செய்ததுதான் பழிவாங்கும் செயல்: கலைஞர்
அப்போ கொல்றாங்கோ கொல்றாங்கோ இல்ல‌யா?
------------------------------------------------------------------
தேர்தலில் போட்டியிட பல கட்சிகள் அழைத்தன: கமல்
பேசறது கேக்கறதுக்கு ஹாலிவுட்ல இருந்து மைக்கு வேணுமே.
------------------------------------------------------------------------------

3 comments:

பழமைபேசி said...

//ராமதாசை ஜெ. கைது செய்ததுதான் பழிவாங்கும் செயல்//

அடியும் விழுந்ததுன்னு சொல்றாங்க... உண்மையா?

பாலா... said...

இஃகிஃஇ. சகோதரி. பாசமா அடிச்சிருப்பாங்க.

கலகலப்ரியா said...

என்னது பிரதமர நடத்துறது சோனியாவா.. ஹார்ட் அட்டாக் கு அப்புறமா முன்னாடில இருந்தேவா.. அரசியல் நடத்துறது அம்மணின்னு அம்மணமா நிக்கற குழந்தைக்கு கூட தெரியும்.. ஆனா நீங்க சொல்றது புதுசா இருக்கே..