Monday, March 2, 2009

S.O.S

கலைஞர் அய்யா அவர்களுக்கு,

பைத்தியக்காரப் பாமரன் எழுதும் விண்ணப்பம். இன்னைக்கு ஒரு தகவல் பார்த்து ஆடிப் போய்ட்டங்கையா. ஏற்கனவே நம்மள பைத்தியமாதான் நீங்க உள்பட நினைக்கிறீங்க. இருந்தாலும் அடிக்கிற சாமின்னாலும் அவன் கிட்ட தானுங்களையா கேக்க முடியும். இந்த மகிந்தா மிருகத்துக்கு நாம எவ்வளவோ ஆதரவா முடிஞ்ச அளவு உதவி பண்ணி அவனுக்கே தெரியாத இறையாண்மை எல்லாம் சொல்லிக் குடுத்து அவன் இப்போ நிஜமாவே யோவ் நிறுத்துன்னா சும்மா தான சொல்றிங்க. அடிக்கறது போறலைன்னு தானே நக்கலுன்னு இன்னும் வேகமா அடிக்கிறான்.

ஆனாலும் பாருங்கய்யா. நெம்ப நாளைக்கப்புறம் பிரணாப் அய்யா போரை நிறுத்துகனு உங்களுக்கு தென்றல் வீசினாங்கள்ள. நீங்க சொன்னா உடனே 48 மணி நேரம் நோ ஃபைடிங்னு சொல்லுவாங்கள்ள. அய்யோ! பயப்படாதீங்க. உங்க சங்கடம் புரியுது. போரை நிரந்தரமா நிறுத்த சொல்லுங்கன்னோ, ஈழம் மலர வழி பண்ணுங்கன்னோ கேட்ர மாட்டனுங்க. அது அவங்க பார்த்துக்குவாங்க. நாள பின்ன நேர்ல பார்த்து துப்பறா மாதிரி கேட்டாலும் ஒரு அய்யகோ போடமாட்டமா. அதெல்லாம் வேணாம்யா.

அது வந்து என்னா தகவல்னா இந்த மகிந்த அய்யாக்கு நம்ம நாட்டு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் எமிரைடஸ் பேராசிரியர் பட்டம் குடுத்து இருக்காம்யா. அதுவும் மனித உரிமைக்கான போராட்டங்களுக்கு. அரசியல் வேறைய்யா! அது மறந்துடுவம். நாளைக்கே உங்களுக்கு புத்தி மாறி ஈழம் பிறக்க வேண்டும்னு எங்கள எல்லாம் உசுப்பி விட்டு அது தானா கிடைக்கறப்பன்னாலும் என்னாலதான்னு சொன்னா ஆமாம் ஆமாம்னு சொல்லுவோம்யா. ஆனா இது அனியாயம் இல்லைங்களா. வரும் தலைமுறைல ஏதோ ஒண்ணு இத்த ஆராய்ச்சி பண்ணி இவனுக்கு போய் இத குடுத்தாங்களே! இது எல்லாம் என்னனு கேட்டா நம்ம பேரபுள்ளைங்க எங்கள மாதிரி இல்லாம மான ரோசமா இருந்து நாண்டுக்குமில்லிங்களா?

அதாம்யா. நம்ம பிரணாப் அய்யா சொன்னா இலங்கை அரசாங்கமே கேக்குறப்போ அவங்க ஊரு பல்கலைக் கழகம் கேக்க மாட்டாங்களாய்யா? அந்த பட்டத்த புடுங்க சொல்லுங்கையா! டொனேசன் குடுத்தான் குடுத்தம். திரும்ப கேட்டான்னு கேள்வி வந்தா? மானமாச்சே. விட்ரமாட்டம்யா. ஆளுக்கு ஒரு எட்டணா ஒரு ரூவான்னு குடுப்பம்யா. புடுங்க சொல்லுங்கையா. வேதனைல்லாம் ஒரு பக்கம் கெடாசிட்டு சாதனைன்னு கொண்டாடுவம்யா. இப்பிடியாவது கொஞ்சம் நம்ம இறையாண்மைய காப்பாத்தலாம்ங்கையா.

எப்பவும் போல நம்பி
பாமரன்.

3 comments:

பழமைபேசி said...

அதான் பாத்தேன்... நம்ம பாலா அண்ணே, தன்னோட சாயலை விட்டுட்டு, எங்கடா Service Oriented System & Architecture பத்தி எழுத ஆரம்பிச்சுட்டாரேன்னு பாத்தேன்! இஃகிஃகி!!

mathuravi said...

என்ன எழவுடா இது
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலே----
எரியிர நெறுப்புல எண்ணய ஊத்துராய்ங்க.

vasu balaji said...

இந்த லொள்ளு வேறயா? சரி. முயற்சி பண்ணலாம். இந்த சேவை சார் கட்டமைப்பு (இஃகிஃகி வெரென்ன விக்கிதான்). இந்த கலியாண வீட்ட நாலாம் பந்தில ரசம் கேட்டா மேலால, சாம்பார்னா நடுவால, கூட்டுன்னா கிண்டி கிளரி காயோடன்னு தேவைக்கேற்ப சரி பண்றா மாதிரியா? ஹ்ம்ம்ம்..சரி இல்லையோ. அப்பொ இது பாருங்கோ! கொங்குதமிழ் வேணுமா பழமை பேசி, கூவம் தமிழ் வேணுமா பாமரன் பக்கம், ஈழத்தமிழ் வேணுமா ஈழப்பிரியான்னு வகை பண்ற ப்லொக்ஸ்பாட் ஒரு வகைல இந்த சேவை சார் கட்டமைப்புன்னு சொல்லலாமா! நீங்க தான் சொல்லணும். நான் பாஸா?