Saturday, March 21, 2009

இப்படியும் யோசிப்பாய்ங்களோ?

கலைஞர்:

தமிழ செம்மொழின்னு சொல்ல வெச்சத இப்படி ரத்த ஆறு ஓட துணை போனதாலதானான்னு கேட்றுவாய்ங்களோ?

ஏப்ரல் 14குள்ள ஈழத்த ஒழிச்சி கட்டணும்னு சொக்கு சொன்னதா நீயூசெல்லாம் வருதே! இதனால தான் நான் தமிழ் வருடம் பொங்கல்ல இருந்துனு மாத்திட்டேன். உள் கைன்னு சொல்லிடுவாய்ங்களோ?


திருமா:

அந்த அணியா இந்த அணியான்னு முடிவெடுக்காம இழுபடுறதால விடுதலைப் பூனைன்னு சொல்லிடுவாய்ங்களோ?ராமதாஸ்:

டக் டக்னு யார் கூட வேணும்னாலும் கூட்டணின்னு போறதால ப.ம.க. 'ஓ' குரூப்பான்னு கேட்றுவாய்ங்களோ?

நம்ம கூட்டணி தோத்தாலும் எனக்கு தெரியாது. நான் மந்திரியாதான் இருப்பேன். கூட்டணி மாத்துன்னு அன்புமணி கேட்றுவாய்ங்களோ?


ஜெ:

இந்த கிறுக்கன் சுவாமி ஒரு வேள 40 தொகுதிலயும் ஜெயிச்சா பிரதமர் பதவி வாங்கி குடுத்து மாட்ட வெச்சா பக்ஸேட பேசி தனி நாடு வாங்குன்னு கேப்பாய்ங்களோ?

அவங்களே அடைஞ்சிட்டா அழைப்பு குடுத்து அங்க வந்தா ஈழத் தமிழ்நாடுன்னு தான் சொல்லணும்னு சொல்வாய்ங்களோ?


விஜயகாந்த்:

இப்போதான் உங்க அணில இருக்கேனே கலியாண மண்டபம் மேட்டர் பாருங்கன்னா கலைஞர் காங்கிரஸ காங்கிரஸ் கலைஞரன்னு கை காட்டுவாய்ங்களோ?

நாம ஒரு தொகுதில நின்னா இந்த கிறுக்குப் புடிச்ச வடிவேலு சொன்னா மாதிரி டெபாசிட் இல்லாம பண்ணிடுவாய்ங்களோ?


சுவாமி:

ஒரே மேடைல என்னையும் சோவையும் ஏத்தி விடுவாளோ. அந்தாளு கண்ண பார்த்தாலே நேக்கு முட்டை கவனம் வந்து சேர் பின்னாடி ஒளிஞ்சிப்பேனே?


ஈழத்து சனங்க:

எங்களுக்கும் கடவுள் கண்ண தொறந்து எங்க நாடு எங்களுக்கு கிடைச்சா எங்க ரத்தம், எங்க உயிர், எங்க வீரம், எங்களுக்காக உயிரைக் குடுத்த தம்பிமார் தியாகம் எல்லாம் ஒண்ணுமில்ல. எங்களால தான்னு எடுபட்ட பயலுவள்ளாம் ஒண்ணாக் கூடி கூத்தடிப்பாய்ங்களோ?


இங்கத்து சனங்க:

உள்ளுக்குள்ள குமுறி குமுறி ஒண்ணும் பண்ண மாட்டாம சாவறது தெரியாம, இப்படி ஒரு பிழைப்பு தேவையாடான்னு கேட்றுவாய்ங்களோ?

7 comments:

கலகலப்ரியா said...

பண்ணுவாங்க பண்ணுவாங்க..

ச்சின்னப் பையன் said...

:-))))

பழமைபேசி said...

அஃகஃகா!!

ttpian said...

தம்பி!
ஈழம் அமய நான் செய்த வேலைகல்...
எனக்கு அன்கு முதல்வர் பதவி தருவாயா?
ஓடி வந்து ஊழியம் செய்வேன்

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

லோகு said...

இப்பிடித்தான் யோசிப்பாங்க:

கலைஞர்: நமக்கு 26, காங்கிரசுக்கு 8, விஜயகாந்துக்கு 6... பா.ம.க வந்தா விஜயகாந்த் வேண்டா... விஜயகாந்த் வந்தா பா.ம.க வேண்டா...

திருமா: இங்க இருந்த இதயத்துல இடம்..அங்க போன பாக்கட்ல கணம்..

ராமதாஸ்: நாம எப்பவுமே பதவில இருக்கற எதிர்க்கட்சி.. பிரச்சனையே இல்ல..

ஜெ: நெறைய ஜெயிசா நாம பிரதமர்,, குறைவா ஜெயிச்சா அத்வானி பிரதமர்..


விஜயகாந்த்: எப்படியோ அடுத்த எலக்சன் செலவுக்கு இப்பவே ரெடி பண்ணியாச்சு.. காங்கிரஸ் வாழ்க..

டவுசர் பாண்டி said...

எம் பேரு டவுசர் பாண்டி நா இப்ப தான் நம்ப ஏரியாவுல மொத தபா வர்றேன், சொம்மா சொல்ல கூடாதுப்பா நல்லா ரோசன பண்ணி தான் எழ்தி கீறேன் சூப்பர் பா !