Thursday, March 12, 2009

இப்படியும் நடக்கலாம்

1. எலக்சன்ல தோத்து போய் ப்ரணாப் சுயசரிதை எழுதி, கலைஞர் தான் சண்டைய நிறுத்த வேணாம்னு சொல்ல சொன்னாரு. நான் ராஜபக்சேட்ட சொன்னென்னு சொல்லலாம்.

2. தேர்தல்ல எதிர்காலம் கருதி காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணின்னு சொல்லலாம்.

3. அம்மா உண்ணாவிரதம் இருந்ததால திருமா தானும் ஆதரிக்கிறேன்னு சொல்லலாம்.

4. ராஜபக்சே ராடார்ல ஆதித்யா சேனல் வரலைன்னு சோனியா கிட்ட சொல்லலாம்.

5. வைகோ கலைஞருக்கு ஆதரவு. அதே சமயம் புலிகளுக்கும் ஆதரவுன்னு சொல்லலாம்.

6. சுவாமி என்ன யாரும் முட்டயால அடிக்கல. நான் தான் முட்டைமேல விழுந்தேன். போலீஸ் தான் அடிச்சிட்டான்னு சொல்லலாம்.

7. எல்லாரும் உண்ணாவிரதம் இருந்தப்போ கலைஞர் வேணும்னே இருக்கலை. அதான் காங்கிரஸ்கு டெபாசிட் போச்சுன்னு தங்கபாலு சொல்லலாம்.

8. கலைஞரும் வந்தா நான் ராஜபட்சே அழைப்பை ஏற்று வன்னி செல்லத் தயார்னு ஜெ சொல்லலாம்.

9.சீமான், கொளத்தூர் மணியெல்லாம் கைது பண்ணது பேச்சுச் சுதந்திரம் இல்லைன்னு ஹிந்துல தலையங்கம் வரலாம்.

10.பொன்ஸேகாவுக்கு புலிகள் பயிற்சி தரும் பட்சத்தில் தமிழருக்கு சம உரிமை தரப்படும் என பக்ஸே சொல்லலாம்

11. முதுகுத் தண்டே இல்லாதவருக்கு அங்கே என்ன சிகிச்சை தர முடியும் என மக்கள் கேட்கலாம்



7 comments:

கலகலப்ரியா said...

//இப்படியும் நடக்கலாம்//

அட ச்சே தலைப்ப பாத்து ஏமாந்துட்டேன்..! நான் என்னமோ.. ராஜபக்ச போல அரக்க பரக்க நடையா நடக்கலாம் (நேபாளத்துக்கும், பாகிஸ்தானுக்கும்), கருணாநிதி போல நொண்டி நொண்டி நடக்கலாம் (சோனியா..ஜெயா..நு அனத்திண்டே), சோனியா போல கிண்டி கிண்டி நடக்கலாம், பிரணாப் போல குடுகுடு நு நடக்கலாம், சீமான் போல மிடுக்கு நடை நடக்கலாம், வைகோ போல விடாமல் நடக்கலாம், பிரபா போல வீர நடை நடக்கலாம், ஐ.நா போல ஆறி ஆறி நடக்கலாம், திருமா போல பாய்ஞ்சு பாய்ஞ்சு நடக்கலாம், தொங்கபாலு போல தொங்கி தொங்கி நடக்கலாம், சுப்ரமணியசுவாமி போல துள்ளி துள்ளி நடக்கலாம், சோ போல திருட்டு நடை நடக்கலாம், கருணா போல நடத்தை கெட்டு நடக்கலாம், பொன்சேகா போல சோர்ந்து போய் நடக்கலாம், ஸ்ரீலங்கன் ஆர்மி போல நடப்பது மாதிரி நடக்கலாம் (ஓடி ஓடியும் நடக்கலாம் (அங்கயும் இங்கயுமா) இப்டி எல்லாம் நடைய பத்தி சொல்ல போறிங்கன்னு நினைச்சேன்...

vasu balaji said...

:o இவ்வளவு நடையா இருக்கு. நான் என்னமோ என் நடையில எழுதிட்டேன்.

கலகலப்ரியா said...

இதுக்கு மேலயும் இருக்கு.. அப்புறம் உங்க நடை தொய்ந்து போய்டும்னுதான் விட்டிருக்கேன்.. நடத்துங்கோ.. நடத்துங்கோ.. :p

Suresh said...

நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள்
http://sureshstories.blogspot.com/

கிருஷ்ணா said...

ஆஹா! எல்லாம் நல்லாத்தான் இருக்கு

//முதுகுத் தண்டே இல்லாதவருக்கு அங்கே என்ன சிகிச்சை தர முடியும் என மக்கள் கேட்கலாம்//

இதுமட்டும் நடக்கலாம்னு சொல்லாதீங்க. எங்க வீட்டில எப்பவோ கேட்டுட்டாங்கப்பா...

vasu balaji said...

//இதுமட்டும் நடக்கலாம்னு சொல்லாதீங்க. எங்க வீட்டில எப்பவோ கேட்டுட்டாங்கப்பா...//

வாருங்கோ கிருஷ்ணா!
பாருங்கோ! சொன்னது நடந்துட்டது போல:P

vasu balaji said...

//நண்பரே, நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிபாக பிடிக்கும்,
படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
அதிலும் கலைஞர் பத்தின பதிவை கண்டிப்பாக பாருங்கள் //

நன்றாயிருக்கு. ஓட்டு போட்டாச்சு. நன்றி வருகைக்கு.