Monday, March 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 9

தி மு க கூட்டணியில் சிண்டு முடியப் பார்கிறார் ஜெ : கலைஞர் கண்டனம்.


சோனியா என்ற சொக்கத் தங்கத்தை "பதி விரதையா?" என்று கேட்டது யார் என எனக்கு தெரியும்: கலைஞர

மதுரைய எரிச்சா கண்ணகி, இலங்கைய எரிச்சதால இந்தம்மானு சொல்றியா தலீவா? முடியாம இருக்கறப்போ இதெல்லாம் எதுக்கு உனுக்கு

பதிவிரதையா எனக்கேட்டவர் எம்.ஜி.ஆர் பற்றி ராஜீவுக்கு எழுதிய கடிதத்தில் என்ன எழுதினார் என்பதும் எனக்குத் தெரியும் : கலைஞர்

அடுத்தவங்க கடுதாசிய படிக்கலாமா. அசிங்கமா கீது. பெரியமன்ஸன் பேசுர பேச்சா இது. அதும் கலியாண வூட்ல.

என்னைத் திட்டுவதற்காகத் தான் உண்ணாவிரதம் இருக்கிறார் ஜெ : கலைஞர்

டெய்லி தான் திட்டுது அந்தம்மா. தெரியாம கேக்குறேன், இதென்னா ரோகம் யாரு எது செஞ்சாலும் என்ன கவுக்கதான் என்ன திட்டதான்னு?

சேப்பாக்கத்தில் ஜெ உண்ணாவிரதம்:செய்தி

தலீவர் தொகுதில உண்ணாவிரதம் இருந்துகினு திட்ட வேற செஞ்சிதாமே? அதான் தலீவரு பேஜாராய்ட்டாரு. தில்லுகார பொம்பளபா இது.

இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்பட்டு சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டுமென்ற அவர்களது போராட்டத்தை ஆதரிக்கும்.: ஜெ

அட போம்மா. அவனுங்க அரசியலமைப்புல தமிழனுக்கு எந்த உரிமையுமில்லன்னு தானே போராட்டமே. அதுக்குட்பட்டு தனி நாடு கேக்கறாங்கன்னு கதைய மாத்துறியே. பேசாம வீட்ல சாப்டு எலக்சன் கணக்கு போட்டிருக்கலாம்.

வக்கீல்கள் போலீஸ் தகராரில் நான் நீதியின் பக்கம் நிற்பேன்: கலைஞர்

முதலமைச்சரே சொல்டாருபா. வக்கீல் கிட்ட போனாலும் நீதி இல்ல. போலீஸ் கிட்ட போனாலும் நீதி இல்லன்னு. நீ அட்ரஸ் சொல்லு தலீவா. நாள பின்ன தேவைன்னா நாமளும் அலையாம அங்க போவம்ல.

வேறுவிதமாக சொல்ல வேண்டுமென்றால், இலங்கையில் நடத்தப்படும் இனவெறி தாக்குதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமல்லாமல், முழு ஈடுபாடு கொண்ட ஆதரவுடன் நடத்தப்பட்டது.:ஜெ

ய‌க்கா! இத‌ கேட்ட‌துக்குதான்கா சீமானு, ம‌ணி எல்லாம் உள்ள. நீ கூட‌ ச‌வுண்டுட்டியே! திருமாவ‌ ஏன் புடிக்க‌லைன்னு. அந்தாளும் இதான் சொல்றாரு.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4656

நீங்க‌ளே பாருங்க‌ நைனா! அந்தாளு சொல்ற‌து இன்னா த‌லீவ‌ரு சொல்றது இன்னா? க‌ண்டுக்காம‌ விட்டா காணாம‌ பூடும்ல‌.


2 comments:

Eezhapriya said...

//
சோனியா என்ற சொக்கத் தங்கத்தை "பதி விரதையா?" என்று கேட்டது யார் என எனக்கு தெரியும்: கலைஞர//

Face book la rendu pasanga pesikkaranga

paiyan1: கதைய கேட்டியா சோனியா சொக்க தங்கமாம் கருணாநிதி சொல்றாரு
paiyan2: ஓ உரசிப் பார்த்திருப்பார் போல...

Eezhapriya said...

//என்னைத் திட்டுவதற்காகத் தான் உண்ணாவிரதம் இருக்கிறார் ஜெ : கலைஞர்//

என்ன எழவுடா , இந்த ஐயாவ திட்டுறதுக்குதான் அந்தாம்மா பொறப்பே எடுத்திருக்கு..! இனிமே தமிழ் ஜனங்க எல்லாருமே இந்த ஐயாவ சபிக்கறதுக்குனுதான் பொறந்திருக்கு அப்டின்னு அலற போறாரு. (சோனியாம்மா தமிழ் மக்கள ஒரு வழி பண்ணி.. நீங்கதான் இந்த பன்னிக்கு விமோச்சனம் அளிக்கணும்..!)