Monday, March 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 6

அறுவைச் சிகிச்சை மூலம் கிடைத்த இந்த உயிர் இனிமேல் உங்களுக்குதான் - கலைஞர்

அய்ய வேணாம். அத வெச்சி நாங்க என்ன பண்ண போறம். அப்படின்னா மறுபிறவி கணக்கா? அய்யா முடிஞ்சா இந்த பிறவிலயாவது மனுசனா இருங்கையா.

போர் நிறுத்தம் வேண்டும் என்று பிரணாப் சொன்னது இனிய தென்றலாய்இதயத்தைக் குளிர்விக்கிறது - கலைஞர்

இதெல்லாம் ஒரு பிழைப்பா. நம்பிட்டோம்ல. வெக்கமா இல்ல. இதை நீர் சொல்லிஇருக்க வேண்டும். நல்ல காலம். நான் சொல்லித்தான்னு சொல்லலையே.

ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி முதல் இலவச தொலைக்காட்சி பெட்டி வரைசாதனை.. இதெல்லாம் வேறெங்குமில்லை தமிழகத்தில் தான் - தி மு

பின்ன. ஈழத்து ஓட்டும் இங்க செல்லும்னா அதுக்காகவாவது கொலையதடுத்திருக்கலாம். இல்லன்னு தான விட்டிங்க ..அந்த சாதனைய சொல்லுங்கப்பா

சட்டத்தோட ரெண்டு கையவுமே ஒண்ண ஒண்ணு ஒரு புறம்போக்குக்காகஅடிச்சிக்க வச்சிங்களே அத சொல்லுங்கப்பா.

மானத்துக்கு உசிருக்கு நம்ம ரத்தம் மொத்தமா சாவரப்போ காமெடி சானல்ஆரம்பிச்சத சொல்லலையேப்பா.

ஆனாலும் இவ்ளோ தன்னடக்கம் ஆகாதுபா உங்களுக்கு

சுப்ரீம் கோர்ட்டில் நெத்தியடி வாங்கியது யார்? ஜெ கேள்வி?

பன்னாடைங்களா? நாறிப்போன விஷயத்துக்கு இப்படி எல்லாம் கேள்விவேறயா? நீங்க வாங்காத நெத்தி அடியா. பதிலுக்கு அவரு கேப்பாரு. இதெல்லாம்நாங்க கேட்டு மண்ட இடி தான் மிச்சம்.

தமிழக அரசியல் ஒரு சாக்கடை- சுவாமி

அதான் இந்த பன்னி இங்க உழளுதா? தூ.

தாய் வீட்டுக்கு வந்தாற்போல் உணருகிறேன் - அதிமுக வுக்கு திரும்பிய ராஜகண்ணப்பன்

அங்க போனப்பவும் இப்படி தான சொன்னது. எவனாவது மாமியார் வீடுன்னுசொல்றிங்களா? அதுக்கு அர்த்தம் வேற இல்ல? இப்ப என்ன. எலெக்சன் முடியஅமைச்சர் பதவி தரலைன்னா திரும்ப அந்த அம்மா வீட்ட போவிங்க. அவ்ளோதானே?

திமுக வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் - திமுக

அவிங்க என்ன கேனையா? அடிச்சப்ப கேட்டா அடிச்சாங்க எந்த கச்சி நீயின்னு?

தற்போதைய நிலைமையில் புலிகள் வசமுள்ள பகுதியை முழுமையாக அழித்துவிட்டு அப்பகுதியை மீட்கும் சக்தி இராணுவத்தினரிடம் உண்டு--பாலிதகொஹன‌

புல்லு பூண்ட கூட விட்றப்படாது. அப்படி மீட்டு என்னா பண்ண போறான் இவன்.

ஜனாதிபதி மஹிந்தவிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு

மனுசன்யா. இவ்வளவு தூரம் வாய தொறக்காம அல்லது பேருக்கு கத்திண்டுஇருந்ததுக்கு நேர்ல நன்றி சொல்லலைன்னா எப்படி. என்ன ஒரு துணிச்சல் அல்லது நக்கல். இங்க வந்து சந்திக்கராராம்ல. அப்புறம் ஒரு பய இங்க தமிழு, தொப்புளு கொடின்னு பேசிடுவானுவ?

வவுனியாவில் உள்ளஅகதிகள் முகாம்சித்திரவதைக் கூடமாகஉள்ளது என்பது புலிகளின்திட்டமிட்ட பொய்பிரசாரம் ஆகும். கருணா


ஆமாம்டா. அது அங்க இருக்கற சனங்களுக்கு. உங்களுக்கெல்லாம் அது சொர்க்கம் தானடா. நாய் கூட சில நேரம் குலைக்கும். நீ எல்லாம் என்ன ஜென்மமடா.

தமிழ்நாட்டின் அழுத்தம் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் ஒரு சில கூற்றுக்களை வெளியிட நேருகின்றது. ஆனால் இந்தியா எமக்கு பாதகமாக செயற்படாது என்பது உள்ளார்ந்த ரீதியாக எமக்கு தெரியும். லக்ஷ்மன் யாப்பா

எங்களுக்கும் தெரியும்டி. ஆனா பாரு எங்க தலைவருக்கு தென்றல் வீசுதாம். அங்க சொல்லு.

நான் உட்பட சில தலைவர்களால் உருவாக்கப்பட்டவர்தான் பிரபாகரன். -- கருணா

உன்ன என்னான்னு தான்சொல்றது தெரியலையே? இந்த அலம்பல் தாங்காமதான் உன்ன நாடுகடத்திட்டங்களா? வெள்ளக்காரன்விவரமானவனப்பா.

50 காசுக்கு இந்தியா முழுதும் பேசலாம்- கலைஞர்

அதுல பேசினா புடிச்சி உள்ள போடமாட்டிங்கன்னு உத்தரவாதம் இருக்கா?

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

கேள்வியெல்லாம் நல்லாயிருக்கு, கலைஞருக்கு புரியுர வயசு இல்லங்கோ! இப்பதான் மருபிறவி எடுத்து இருக்காரு!.... மத்தியில ஏதாவது பதிவி இருந்தா சொல்லுங்கோ புரிச்சுகுவாரு நம்ம தமிழின காவலர்...

கலகலப்ரியா said...

இந்த உதவக்கரைங்க சொல்றத எல்லாம் நீங்க இன்னொரு வாட்டி போட்டு ஏன் சார் வயித்தெரிச்சல கொட்டிக்கறீங்க... சை இனிமே நாய்ப் பிழைப்புன்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க.. இப்டி கருணாப் பொழைப்பு பொழைக்கிறதுக்கு நாண்டுக்கிட்டு செத்துப் போலாம் தூ.....

கலகலப்ரியா said...

spello.. typo ellaam parthu mudinja edit pannungo sir.. uthavaaaaakarai uthavakkarai nu nikkuthu.. chai

Unknown said...

நம்மை நாமே தெரிந்து கொள்ள யாரும் தாயாரை இல்லை பிறரை குறை சொல்ல சொன்னால் நன்றாகத்தான் சொல்கிறார்கள் அருமை இவர்கள் எல்லோரும் உத்தமர்களை போலவும் "தூ" காரி உமிழ்ந்து எழுதுவதும் என்னே ஒரு அருமை வளரட்டும் உங்கள் பாணி -நன்றி

vasu balaji said...

//நம்மை நாமே தெரிந்து கொள்ள யாரும் தாயாரை இல்லை பிறரை குறை சொல்ல சொன்னால் நன்றாகத்தான் சொல்கிறார்கள் அருமை இவர்கள் எல்லோரும் உத்தமர்களை போலவும் "தூ" காரி உமிழ்ந்து எழுதுவதும் என்னே ஒரு அருமை வளரட்டும் உங்கள் பாணி -நன்றி//
வாழ்த்துக்கு நன்றி கிருஷ்ணலீலா!உங்கள் பின்னூட்டமும் அதைத்தான் செய்கிறது. பாணி வேறு. அவ்வளவுதான்.

பழமைபேசி said...

நறுக்குத் திலகம் பாலா அண்ணன் வாழ்க!