Sunday, March 29, 2009

கத கேளு கத கேளு - 5

கதை சொல்லி நாளாச்சி. சொல்லுவமா. நமக்கு ஈசாப்தான் சரி.

ஈசாப் ஒரு அடிமைன்னு சொல்லி இருக்கேன்ல. அந்தாளோட முதலாளி ஒரு வியாபாரி. அரேபியால வருசத்துக்கு நாலுவாட்டி வேற வேற ஊர்ல போய் வியாவாரம் பண்றது. அப்பிடி போக ஏற்பாடு. சாமான் சட்டிஎல்லாம் கட்டி வெச்சு அவங்கவங்க எத தூக்கறதுன்னு போட்டா போட்டி. சண்டியர்லாம் அடிச்சி புடிச்சி சின்ன சாமானா எடுக்க நம்ம ஈசாப் நோஞ்சான். ஒதுங்கி நின்னிச்சி. அடிபிடி கொஞ்சம் ஓய ஈசாப் ஒரு பெரிய மூட்டய எடுத்து வச்சாங்க. மத்த பேரெல்லாம் அட முட்டாப்பயலே. ஈர்க்குச்சி மாதிரி இருந்துண்டு இத போய் தூக்குதாம். வழிலயே சாவப்போறான்னு கேலி பேசி ஒரு வழியா கிளம்பிட்டாய்ங்க.

இந்த பாரம் இருக்கே. அது தூக்கறப்ப 5 கிலோ இருந்தா 10 நிமிஷம் நடக்கவே 10 கிலோ மாதிரி தெரியுமில்லயா? ஈசாப் தூக்க முடியாம தூக்கிகிட்டு தள்ளாடி போக மத்ததெல்லாம் நக்கலு. ரெண்டு மூணு நாள் போக தான் தெரிஞ்சது. ஒண்ணு மூன்ச ஒண்ணு பார்த்துண்டு, ஆகா ஏமாந்துட்டமேடான்னு. முக்கால் தூரம் கடக்க முதலாளியும் ஈசாப்பும்தான் கை வீசிண்டு நடக்கறாங்க. மேட்டர் என்னான்னா ஈசாப் தூக்கினது சோத்து மூட்டை. சாப்பிட சாப்பிட குறைஞ்சிண்டே வந்து ஒரு கட்டத்தில பாரமே இல்லாம போச்சி. பாடி வீக்குன்னாலும் மாடி ஸ்ட்ராங்குடா பயபுள்ளைக்குனு நொந்து போனாங்களாம்.

(நீங்களா கேப்டன் தனியா 40 இடத்துலயும் போட்டி போடுறத வெச்சி எல்லா சீட்டும் அந்தாளு லவட்டிண்டு போய்டலாம்னு இந்த கதய சொல்றியான்னு சண்டைக்கு வறாதிங்க. நான் கதை சொன்னேன் அவ்ளோதான்)

6 comments:

பழமைபேசி said...

ஓ, இப்பிடி வேற ஒன்னு இருக்கா? புழுதிகளும் புரட்சிகளும், ஐயாமாரும் அண்ணன்மாரும் இப்பிடிச் செய்துதான், கழுதை தேஞ்சி கட்டெறும்பானாங்க.... பாக்குலாம் என்னதான் நடக்குதுன்னு!

பாலா... said...

ஓட்டு வாங்குற வரைக்கும் ஒரு மாதிரி. அப்புறம் வெளிய இருந்து ஆதரவு, உள்ள இருந்து ஆதரவு, உள்ள இருந்தே எதிர்ப்பு,பேரம், கடத்தல் இன்னும் என்னல்லாம் காத்திருக்கோ தெரியல. மத்திய அரசு 6 சதம் பஞ்சப் படி குடுத்தா மாநில அரசு 10 சதம் குடுக்குது. பணவீக்கம் குறையுது. தலகால் புரியல.

கலகலப்ரியா said...

அட பின்னூட்டம் செம ஸ்பீடா இருக்கே..! பாலா சார் என்னமோ சொல்றீங்க.. எனக்கு அரசியல் புரிஞ்சாதான் இந்த கதை புரியும்னா.. விளங்கின மாதிரிதான்..!

பாலா... said...

பார்திங்களா. குழப்ப ஆரம்பிச்சிட்டீங்க. அப்போ அரசியல் புரியும். புரிஞ்சாதான் விளங்கின மாதிரிதானா?

கலகலப்ரியா said...

என்ன சார் குழப்புறீங்க?

கலகலப்ரியா said...
This comment has been removed by the author.