Monday, March 16, 2009

கத கேளு கத கேளு - 4

ஒரு ரெண்டு பூனைங்க ஒரு ஊர்ல நல்ல பசில இருந்திச்சாம். ரெண்டும் தல. ஒரு பூன ஆண் பூன. வயசாளி பூன. மத்தது பெண் பூன. ரெண்டும் ஒன்ன ஒன்னு கறுவிண்டு திரிஞ்சதாம். இப்படியே திரியரப்போ கிழப்பூனை ஒரு வீட்டில அப்பம் ஒண்ணு இருக்கறத பார்த்திச்சாம். இது என்னா பண்ணுதுனு மத்த பூன பார்க்கும். அது என்னா பண்ணுதுன்னு இந்த பூன பார்க்கறது, எப்பவும். அதனால இந்த பூன கண்ணு போன பக்கம் பெண் பூன பார்த்துடிச்சி. பம்மி பம்மி போயிண்டு ஒரு தாவல்ல அப்பத்த லவட்டிடிச்சி. வயசாளிப் பூன அய்யகோ! நான் தான முதல்ல பார்த்தேன். எனக்குதான் சொந்தம்னிச்சாம். மத்த பூன பார்கறதெல்லாம் சொந்தமாக்கிக்கறது தெரிஞ்ச விடயம் தானே. பாய்ஞ்செடுத்தது நானு. எனக்குதான் சொந்தம்னு சண்ட. பூன சண்டன்னா தான் ஊரறிஞ்சு போகுமே. ரெண்டு பூனையோட ஆளுங்களும் கூடிட்டாங்க. கேக்கணுமா. சண்ட நாறிப்போச்சு. அங்கால ஒரு குரங்கு வந்திச்சி. ஒரு அப்பத்தால பூன கலவரம் உண்டாகப்படாது. ஊரே ரணகளமாயிடும். அதனால நான் கொண்டு போரேன்னு போய்டுச்சி. கிழட்டுப் பூனைக்கு குஷி. மவளே அசந்தாப்பில இருக்கறப்பொ அடிச்சிண்டு போக பார்த்தியே. இப்பொ உனக்கில்லாம போச்சானு. பெண் பூனைக்கும் குஷி. எனக்கு அவ்ளோ பசி இல்ல. ஆனாலும் நான் தான லவட்டினது. அது எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி. குரங்கு பண்ணது சரி இல்லன்னு பேசுவாங்கல்ல அது போரும் போய்யான்னு போச்சாம்.

(அட ஒரு கத சொன்னா கேட்டுக்கணும். அத விட்டு வயசாளி பூன யாரு. பெண் பூன யாரு. குரங்கு தேர்தல் ஆணையமா. ஆப்பம் ஈழப் பிரச்சனையான்னு எல்லாம் கேள்வி கேட்டா நான் என்ன பண்ண. நீங்களே சொல்லுங்க மக்கா.)

No comments: