Friday, March 13, 2009

கத கேளு கத கேளு-2

முல்லா நசிருதீன்னு ஒரு ஆளுங்க. வில்லங்கமான ஆளு. ஊருக்குள்ள ஒரு திடல். அங்கன தான் சொற்பொழிவு, கூத்து, நாடகம் எல்லம் நடக்கும். இந்தாளு ஒரு நாள் மதியம் உச்சி வெயில்ல ஒரு துண்ட விரிச்சி உக்காந்திருந்தாங்க. தலைல குல்லா. அந்த பக்கமா கடந்து போன ஒரு ஆளு பார்த்தாரு. என்ன இது வெயில்ல இந்தாளு உக்காந்திருக்கேன்னு வந்து கேட்டாங்க. என்ன இங்க உக்காந்திருக்கிங்கன்னு. இந்தாளு, பின்ன என்ன தம்பி மெதுவா வந்தா எங்கயோ பின்னாடி நிக்க வேண்டி வருது. ஒண்ணும் புரியுதில்ல. அதான், முதல்ல வந்து இடம் பிடிச்சா உக்காந்து பார்க்கலாம்ல அதான்னாங்க. அந்தாளும், ஆமாம். நானும் இவ்ளோ கிட்டத்தில பார்த்ததில்ல. நல்ல காலம் சொன்னீங்கன்னு துண்ட விரிச்சி உக்காந்துட்டாங்க. இவங்கள பார்த்து இன்னோரு ஆள், அப்படியே இன்னோரு ஆள்னு ஊரே திரண்டுடிச்சி. சாயந்திரம் வர எல்லாரும் நெளிஞ்சிகிட்டு எப்பொ எப்போன்னு உக்காந்திருந்தாங்க. ஊரே காலி. எல்லாரும் திடல்லனு ராஜாக்கு தகவல் போச்சி. அந்தாளு அங்க என்னான்ன யாருக்கும் ஒண்ணும் தெரியல. சரின்னு கிளம்பி போய் கடைசியா இருந்த ஆளுட்ட கேட்டாங்க. என்ன இங்க இவ்ளோ சனம்னு. தெரியல இவன் நின்னான். நானும் நிக்கறேன்னாங்க. அந்தாள கேட்டா அந்தாளு பக்கத்து ஆள காண்பிக்குது. இப்படியே யாருக்கும் தெரியாம கடைசில முல்லாவை காண்பிச்சாங்க. ராஜா கேட்டாரு. எதுக்கு உக்காந்திருக்கன்னா, இல்ல எப்பவும் பின்னாடி நின்னு ஒண்ணும் பார்க்க முடியல. சரியா கேக்க முடியல அதான் முதல்ல வந்து உக்காந்தேன்னு. சரி இன்னைக்கு இங்க ஒண்ணும் நிகழ்ச்சி இல்லயே அப்புறம் ஏன் உக்காந்தன்னாங்க. இன்னைக்கு இல்லன்னா என்ன என்னைக்காவது நடக்கும்ல அதான்னு சொல்லிட்டு. எல்லாரும் பார்த்துக்குங்க. ராஜாவே சாட்சி. நாந்தான் முதல்ல வந்து இங்க இடம் புடிச்சேன். எப்போ இங்க எது நடந்தாலும் இது என் இடம்னு சொல்லிட்டு, முதுகெல்லாம் வலி போய் படுக்கலாம்னு போய்ட்டே இருந்தாங்க. எல்லாருக்கும் அசடு வழிஞ்சதாம்.

(கடைசி சாதனைக்கும் அப்புறம் எது நடந்தாலும் நாந்தானு சொல்லிண்டிருக்கரதுக்கும் சம்பந்தப்படுத்திப் பார்த்திங்கன்னா நான் பொருப்பில்ல. சரிங்களா?)