Monday, March 30, 2009

நறுக்குன்னு நாலுவார்த்த -17

காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, தேர்தலை விட இலங்கை தமிழர் பிரச்சனைதான் முக்கியம். அப்பிரச்சனைக்கு நடவடிக்கை எடுப்பதுதான் முக்கியம் என்று சொன்னதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்னும் என்னாதான்சாமி ப‌ண்ணியாவ‌னும். சொல்ற‌த‌ அந்தம்மா சொல்ல‌ மாட்டாங்க‌ளா. இல்ல‌ன்னாலும் தொங்கு சொல்லாதா. சொக்குக்கு வக்காலத்து வாங்கறதுன்னா அய்யாக்கு கிக்கு.
_____________________________________________
கலைஞருடன் நடிகை ரம்பா சந்திப்பு

தொடைச்சின்ன‌துல‌ சுயேச்ச‌யா நிக்க‌ப் போறேன். கூட்ட‌ணில‌ சேர‌ட்டான்னு கேக்க‌ போயிருக்குமோ?
_____________________________________________
முதல்வருடன் எஸ்.வி.சேகர் சந்திப்பு

சிரிப்பு வ‌ர‌ல‌. சாரி.
_____________________________________________
தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்தாள‌ த‌விர‌ எல்லாரும் ம‌ல‌ரும்னு சொல்றாங்க‌. இவ‌ரு ம‌ல‌ர்ந்தாலாம். இன்னோரு அய்ய‌கோ பாக்கி இருக்கு. சொக்குவ‌ ந‌ம்பினேனே சொக்கா சொக்கானு.
_________________________________________________
துறவி என்றுகூறும் ஜெ.வுக்கு பதவிஎதற்கு:விஜயகாந்த்

அட‌ வெண்ண‌. நீ அர‌சிய‌லுக்கு புதுசுன்னாலும் அப்ப‌ட்ட‌மாவா ச‌ம்பாதிக்க‌ தானே ப‌த‌வி. துற‌விக்கெதுக்குன்னு கேப்ப?
_________________________________________________

இலங்கை தமிழ் மக்கள் அவதிப்படுவதற்கு இந்திய அரசுதான் காரணம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

இது லேண்ட் ஃபார் டையிங்னு ஆர்ட் ஆஃப் லிவிங் சொல்றத கேக்கமாட்டாங்க சாமி
___________________________________________________
வருண்காந்தி மீது தே.பா.சட்டம் பாய்ந்தது

அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியல் வாதிங்க உலகத்திலே
எதிரா பேசினா போட்டுதள்ளுடா தேசிய பாதுகாப்பு சட்டத்திலே!!!
____________________________________________________
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு

கைப்புள்ள‌. ஏன் ஊர்க்காவல் படை ஆளும் போறலயா. வலிக்குது அளுதுருவேன்னாலும் இனிமே ஒண்ணும் முடியாதுடி. ஊக்குதான்.
________________________________________
யுத்தம் காரணமாக இலங்கை மக்கள் பல வேதனைகளை அனுபவித்து வருவதாக ஷிவ்சங்கர் மேனன் தெரிவிப்பு

அடுத்த நோபல் உனக்குதான் ராசா. எப்பேற்பட்ட கண்டு பிடிப்பு. ஹிலாரிகிட்ட காவடி தூக்கிட்டு ஓடினப்ப இது தெரியலயா. சொக்குகிட்ட சொல்லுப்பா இத.
__________________________________________
மக்களை வெளியேறப் புலிகள் அனுமதிப்பின் இடைக்காலப் போர் நிறுத்தத்துக்குத் தயார். இலங்கைக்கான ஐ.நா. தூதுவர் பாலிகக்காரா அறிவிப்பு.

ஏண்டா வெண்ண! எந்த கண்டிசனும் போடாம நிறுத்தினா வர மக்கள் வரமாட்டாங்களாடா? வாங்கடா மக்கா. வந்ததெல்லாம் நாசம் பண்ணி அடைச்சி வெச்சிட்டோம். புதுசா வேணும்னு சாவரிங்களா? எடுபட்ட பயலுவ.
__________________________________________________
குமரன் பத்மநாதனுடனான ஹோல்ம்ஸின் பேச்சுவார்த்தையை வீரவன்ச பிழையாக அர்த்தப்படுத்தியுள்ளார்: றொபர்ட் ஓ பிளேக்

இருக்கிற‌ இருப்பில‌ ம‌கிந்த‌ பேசினாலே யாரு என்னானு பாக்காம‌ கோத்த‌வாயி புலினு சொல்லிடுவான்.
_______________________________________________

6 comments:

கலகலப்ரியா said...

அட ச்சே உசிர கைல பிடிச்சிண்டு தேர்தல் தேர்தல்னு இழுத்துண்டே சாவறது இதுக்குத்தானா.. ரம்பா, சிம்ரன் எல்லாரையும் நேர்ல சந்திக்க வேற சந்தர்ப்பமே கிடைக்காதோ..

பாலா... said...

புது ஆளுங்கல்லாம் கலைவிழானு வருவாங்கோ. முதுகு வலின்னாலும் முழுசா பார்ப்போம். இவங்கள்ளாம் இப்போ ஃபீல்ட்ல இல்ல. இருந்தப்போ நாம ஆட்சில இல்ல. அதான்.

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

கிருஷ்ணா said...

//அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியல் வாதிங்க உலகத்திலே
எதிரா பேசினா போட்டுதள்ளுடா தேசிய பாதுகாப்பு சட்டத்திலே!!!
---------

இருக்கிற‌ இருப்பில‌ ம‌கிந்த‌ பேசினாலே யாரு என்னானு பாக்காம‌ கோத்த‌வாயி புலினு சொல்லிடுவான்.//

ரொம்பவே ரசிச்சேன் பாலா.

பாலா... said...

வாங்க. நன்றி. கிருஷ்ணா.

சிக்கிமுக்கி said...

***கைப்புள்ள‌. ஏன் ஊர்க்காவல் படை ஆளும் போறலயா. வலிக்குது அளுதுருவேன்னாலும் இனிமே ஒண்ணும் முடியாதுடி. ஊக்குதான்***

**அடுத்த நோபல் உனக்குதான் ராசா. எப்பேற்பட்ட கண்டு பிடிப்பு. ஹிலாரிகிட்ட காவடி தூக்கிட்டு ஓடினப்ப இது தெரியலயா. சொக்குகிட்ட சொல்லுப்பா இத.**

சிரிப்பை அடக்க முடியவில்லை!
ஈழ அவலத்தை இப்படி நகைச்சுவை எரிச்சலில் வெளிப்படுத்தியுள்ள உங்கள் திறம் பாராட்டுக்குரியதாகும்!