Wednesday, March 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 10

இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருக்கிறார்:ஜெ

அவ்ளோதான் எஃபெக்டு. அவன் அடிக்கறத நிறுத்தப்போறதில்லை. நீங்க கவல பட போறதும் இல்லை. இவருக்கு குடைச்சல் கொடுத்தால் போதும்.

இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கருணாநிதி தட்டிக்கேட்டிருக்க வேண்டும்:ஜெ

எதிர்காலம் வேண்டுமென்றால் எங்கள் அணிக்கு வாருங்கள்னு சொன்னப்போ இத கேட்க தோணலயாங்க?

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கட்சிப் பாகுபாடின்றி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்த முதல்வர் கருணாநிதி நான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தவுடன் ஏன் நிலை குலைந்துவிட்டார் என்பது தெரியவில்லை:ஜெ

அனியாயமா மிஸ் பண்ணிட்டாரு. நான் சொல்லிதான் ப்ரணாப் இலங்கைக்கு போனார்னு சொன்னா மாதிரி, நான் கேட்டதாலதான் அம்மையார் உண்ணாவிரதம். டாங்ஸ்னு சொல்லி இருந்தா உங்களுக்கு B.P. எகிறியிருக்கும்.

இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நிவாரணப் பொருட்கள் திரட்டப்படும்: காங்கிரஸ் தங்கபாலு

ரொம்பதாம்பா நக்கலு இந்தாளுக்கு. சண்டைய நிறுத்த சொல்லுன்னா அவன் இறையாண்மை போய்டும்னு சொல்லிட்டு, இதெல்லாம் மட்டும் குடுத்தா இறையாண்மை போவாதா. மவனே. எங்க? நேர கொண்டு போய் குடுக்க தில் இருக்கா? பிஞ்சிடும்.

பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்: கருணாநிதி அறிக்கை

அந்தம்மா அதாவது பண்ணாங்களா இல்லையா? நாம ஃபிலிம் காட்னதேல்லாம் என்னான்னு கேட்ருவாங்க. ஜாக்கிறதை.

தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்:கலைஞர்

தொப்புள் கொடிக்கு துரோகம் விளைவிப்பது எப்படின்னு உங்க கிட்ட கத்துக்கறதா?

என் உடல் வலியையும் மீறி முத்துக்குமாரின் மரணம் உள்ளத்தை வலிக்கச் செய்தது: கலைஞர்.

நம்பிட்டோம். அதுக்கு ஒண்ணும் மருந்து இல்லையா அங்க?

இந்த நாட்குறிப்பை தொடர்ந்தும் நாளை எழுதுவேன்: கலைஞர்

நாங்களும் தொடர்ந்து படிப்போம். என்னைக்காவது ஈழத்தில ஜனங்க எப்படி இருக்காங்க, என்ன நடக்குதுன்னு யாரயாவது கேட்டீங்களா? சொக்கத் தங்கத்து கிட்ட இது பத்தி பேசினிங்களான்னு.

இலங்கைத் தமிழர்களுக்காக திமுக என்னென்ன செய்தது என்பதை எல்லாம் நினைவில் கொண்டு வந்து பட்டியலிட்டு கட்டுரை எழுதினேன்: கலைஞர்.

அடுத்த பட்டியல்ல இதும் சேர்ந்துடுமாங்க?

இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வாழ்க ஜனநாயகம்! பேசாம காங்கிரஸ் திமுக கூட்டணி தான் ஜெயிச்சதுன்னு சொல்லிட்டா எவ்ளோ கோடி மிச்சம். அப்படியே பக்சேக்கு தானம் பண்ணா தமிழரே இருக்க மாட்டாங்க. பிரச்சனையும் இருக்காது. இப்படி எல்லாம் சொல்லவும் தேவை இல்ல. அது சரி, வலி, ஆசுபத்திரில இருக்கா மாதிரி படமெல்லாம் இருக்கலாமாங்க?

பிரித்தானியாவில் இருந்து ஒப்பரேஷன் “வணங்கா மண்” எனப்படும் கப்பல் அத்தியாவசிய பொருட்களையும் மருந்துவகை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா பொருட்களுடன் நேரடியாக முல்லைத்தீவு துறைமுகம் செல்லவிருக்கிறது: செய்தி

தலைவருங்களா. பார்த்துக்குங்க. இதுக்கு பேரு தான் உதவி. கலக்ஷன் கட்றதும், கைகாசுல வாங்கி ஃபிலிம் காட்டி பங்கு போட்றதுமில்ல. ஏன்? இது நாம பண்ண முடியாதா? போங்கய்யா.

17 comments:

Eezhapriya said...

//இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கட்சிப் பாகுபாடின்றி அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்த முதல்வர் கருணாநிதி நான் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தவுடன் ஏன் நிலை குலைந்துவிட்டார் என்பது தெரியவில்லை:ஜெ//

இந்தம்மா வேற.. அந்த ஐயா.. அவரு சொல்லித்தான் இவங்க உண்ணாவிரதம் இருந்தாங்கன்னு சொல்ல போகுது..

Bala said...

lol

Eezhapriya said...

//என் உடல் வலியையும் மீறி முத்துக்குமாரின் மரணம் உள்ளத்தை வலிக்கச் செய்தது: கலைஞர்.//

நெசம்மாவா? இலங்கை ராணுவத்தோட எறிகணை மண்ணை குடைஞ்சு வெடிக்குது.. இங்க என்னடான்னா உடம்பு வலிய தாண்டி மனசு வலிக்குதாம்ல.. ரொம்ப பவர்புல் ஆயுதமா இருக்கே... (ஆனா மனுஷங்களுக்கு மனசு வலில உடம்பு வலி தெரியாம இருக்குமுங்கோ)

Bala said...

என்னாங்க நீங்க. மனசுனு ஒண்ணிருந்தா மனசாட்சின்னு ஒண்ணு இருக்கணும்ல. இருந்தா இப்படி பேசுவாரா? பத்தியம் மீறி ஏதோ சாப்டிருப்பாரு. குத்து வலிய இப்டி சொல்றாரு போல. விடுங்கோ

Eezhapriya said...

//இந்த நாட்குறிப்பை தொடர்ந்தும் நாளை எழுதுவேன்: கலைஞர்//

எதுக்கும் உங்க ஜோஸ்யக் குறிப்ப கொஞ்சம் பாருங்கோ.. நாளைக்கு எழுந்திருக்க முடியலன்னா உங்க குறிப்ப சோனியா எழுதுவாங்களா? அவங்களுக்கு proxy job நல்லா வரும்..!

Eezhapriya said...

//இலங்கைத் தமிழர்களுக்காக திமுக என்னென்ன செய்தது என்பதை எல்லாம் நினைவில் கொண்டு வந்து பட்டியலிட்டு கட்டுரை எழுதினேன்:கலைஞர்//

ச்சே ச்சே இந்த உடம்பு வலி வச்சிண்டு எதுக்கு இவ்ளோ கஷ்டம்.. நீங்க ஈழத் தமிழருக்கு என்ன பண்ணிங்கன்னு அவங்களே துப்புவாங்க.. i mean.. எழுதுவாங்க..

Eezhapriya said...

//இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது: தேர்தல் கமிஷன் அறிவிப்பு//

கருணாநிதியின் வயிற்றுக் கலக்கல், காங்கிரஸின் மண்டை காய்ச்சல் பத்தி எழுதிட்டா போச்சு! (இத்தாலி மண்டை இவ்ளோ மோசமா.. குரங்கை நினைக்காம மருந்து சாப்ட சொன்ன கதையால்ல இருக்கு)

Eezhapriya said...

//“வணங்கா மண்” ...........தலைவருங்களா. பார்த்துக்குங்க. இதுக்கு பேரு தான் உதவி.//

அட பாலா சார்.. இது உதவி இல்ல சார்.. தாய் குழந்தைக்கு கொடுக்கற பால் உதவியா? விவேகனந்தா உதவின்னு சொல்றதே தப்புங்கிற மாதிரி அழகா சொல்லி இருக்காரு.. இதெல்லாம் தெரிஞ்சா/முடிஞ்சா.. இவங்க எப்டி சார் தலைவருங்க..?

btw.. நீங்க தலைவருங்க நு சொல்றப்போ எனக்கு ரைமிங் ஆ.. காலைவாருங்க நு மனசில தோணிச்சு.. அப்புறம்.. இந்த தலைவருங்க ஏன் காலை வார்ராங்கனு யோசிச்சா.. தலை வார்றதுக்கு மண்டைல ஏதாவது இருந்தால்ல தலை வாருறதுக்கு.. அதுதான் பாவம் கால மட்டும் வார்றாங்க அப்டிங்கிற பேருண்மை தெரிய வந்திச்சு... (உக்காந்து யோசிச்சாலும் இப்டி முடியுமாங்க..)

Bala said...

தாய் மகற்காற்றும் உதவின்னு பெருசுங்க சொன்னா மாதிரின்னு வெச்சிக்குங்க. ஆனா வாஸ்தவம். இது இயற்கையான உணர்வு. =)) அய்யோ. ஒத்துக்கறேங்க. நல்ல விளக்கம்.

Eezhapriya said...

அது எப்டிங்க.. மக கர்ப்பிணியா இருக்கறப்போ கூட மாட ஒத்தாசையா இருந்து பண்றதா வேணா .. அப்டி சொல்லலாம்.. (சோனியாம்மா ராஜபக்சே கு பண்றத கூட சொல்லலாம்) ஆனா.. பால்/சோறு ஊட்டுறத கூடவாங்க..?

Eezhapriya said...

//இலங்கைத் தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதற்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதைக் கண்டு கருணாநிதி கதிகலங்கி ஆடிப்போயிருக்கிறார்:ஜெ//

தமிழ் கத்துக்குங்க அம்ணி.. "ஆடிக்கொண்டிருக்கிறார்*.. நிகழ் காலம்

Eezhapriya said...

//இலங்கைத் தமிழர்களை அழிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கருணாநிதி தட்டிக்கேட்டிருக்க வேண்டும்:ஜெ//

அட ச்சே,.. சாவு வீட்ல போயீ.. போஸ்ட் மார்டம்.. பண்ணி இருக்கணும்னு பேசற மாதிரி இல்ல பேசறிங்க..

Eezhapriya said...

//இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நிவாரணப் பொருட்கள் திரட்டப்படும்: காங்கிரஸ் தங்கபாலு//

இன்னா? புரியல? இலங்கை எங்க இருக்கு? தமிழர் எங்க இருக்காங்க? தமிழகம் எங்க இருக்கு? இவரோட வீட்டுக்கு பேரு தமிழகமாங்க? ஆமாம் அங்க திரட்டி என்ன பண்ண போறாரு? ஆஸ்திரேலியால ஒரு கங்காரு ஒற்ற கால்ல துள்ளுதாமுங்க.. (ஈழத் தமிழருக்காகவாம்).. நேசம்மாத்தானுங்களா? கங்காரு..! (அட தெரியலநு சொன்னேனுங்க..)

Eezhapriya said...

//பாராளுமன்ற தேர்தலுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம்: கருணாநிதி அறிக்கை//..

நீங்க எப்போ?

Eezhapriya said...

//தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்:கலைஞர்//

இனிமேல்தானா? அப்போ டாக்டர் கலைஞர் பட்டம் எதுக்கு கொடுத்தாங்க?

Bala said...

பேசாம நான் செய்தி மட்டும் போடுறன். நீங்க கொமன்ட் போடுங்கோ ஈழப்பிரியா. நச்னு இருக்கு.

Anonymous said...

நன்றாக சொன்னீர் ..... மிக அருமை .... எல்லாம் கேவலமான பொழப்பு ... காசுக்கு , பதவிக்கு எத வேணா பன்னுவானுங்கா .... மக்களாகியா நாம தான் முட்டளுங்களுங்க ... இந்த ஆளுடையா துரோகத்தை புரிஞ்சிக்க எந்தனை வருஷம் ... இரெண்டு தலைமுறை ... இன்னும் மூலை இல்லமா பின்னால சுத்துற அல்ல கைகள், தொண்டர்கள் ...